Ad Widget

தரம் குறைந்த தலைக்கவசங்களுக்கான தடை

எஸ்.எல்.எஸ் (SLS) தரச் சான்றிதழற்றதும் பாதுகாப்பற்றதுமான தலைக்கவசங்கள் ​(​ஹெல்மட்) பயன்படுத்துவதற்கு, இவ்வருடம் முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதென்று, போக்குவரத்துப் பொலிஸ் பிரிவுத் தலைமையகம், இன்று அறிவித்தது.

அதனால், தலைக்கவசங்களைக் கொள்வனவு செய்யும் போது, அவதானமாகக் கொள்வனவு செய்யுமாறு, பொதுமக்களிடம், போக்குவரத்துப் பொலிஸ் பிரிவுத் தலைமையகம், அறிவுறை வழங்கியுள்ளது.

தற்போது இடம்பெறுகின்ற வாகன விபத்துகளில் மோட்டார் சைக்கிள் விபத்துகள் அதிகரித்துள்ளன.

தரக்குறைவான தலைக்கவசங்களை அணிவதினால், விபத்தின் போது தலையில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கே, தரம் குறைந்ததும் பாதுகாப்பற்றதுமான தலைக்கவசங்கள் உபயோகிப்பதைத் தடை செய்யத் திட்டமிட்டதாக, போக்குவரத்துப் பொலிஸ் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் சேனக்க கமகே தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிளில் பயணம் செய்யம் போது, தலைக்கவசத்தினுள் வைத்து அலைபேசி பாவிப்பதையும் தடை செய்துள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts