Ad Widget

நுளம்புகள் பெருகும் விதத்தில் சுற்றுச்சூழலை வைத்திருக்கும் நபர்களுக்கு கூடுதல் தண்டனை

சுற்றுச்சூழலை நுளம்புகள் பெருகும் விதத்தில் வைத்திருக்கும் நபர்களுக்கு எதிராக கூடுதல் தண்டனை வழங்கக்கூடிய யோசனை அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதென்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்டொக்டர் மஹிபால மேலும் தெரிவித்தார்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் கூடுதலான டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டிருந்தாலும், டெங்கு மரணங்களின் எண்ணிக்கை வீழ்ச்சி கண்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சு அனுசரித்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் இதற்குக் காரணமென விசேட நிபுணர் பாலித மஹிபால தெரிவித்தார். அவர் நேற்று முன்தினம் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இந்த விடயங்களை தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் உரையாற்றிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த விசேட நிபுணர் பபா பலிஹவடன, டெங்கு நோய்க்காக புதியதொரு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றார். இது இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் தனியார் துறைக்கு வழங்கப்படுமென டொக்டர் பலிஹவடன கூறினார்.
நாட்டிலுள்ள அனைத்து ஆதார வைத்தியசாலைகளிலும் டெங்கு நோயாளிகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவு தாபிக்கப்பட்டுள்ளது. இதற்காக சுகாதார அமைச்சு 60 கோடி ரூபாவை செலவழித்தது. டெங்கு நோயாளி அனுமதிக்கப்பட்டு 30 நிமிடங்களுக்குள் நோயை இனங்காணக்கூடிய வசதிகள் வைத்தியசாலைகளில் உள்ளன. இதற்குரிய ஆய்வுகூடங்களுக்காக 150 கோடி ரூபாவுக்கு மேலான தொகை செலவிடப்பட்டுள்ளது.

இதற்கு அப்பால் இலங்கை வைத்தியர்களுக்கு தாய்லாந்தில் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக டொக்டர் மஹிபால தெரிவித்தார்.

கொழும்பு, கம்பஹா, கல்முனை, பலப்பிட்டி முதலான பிரதேசங்களில் கூடுதலான டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளார்கள். பாடசாலைகள், தொழிற்சாலைகள், கட்டுமானஸ்தலங்கள் ஆகியவற்றுக்கு அருகிலும் கூடுதலான நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளார்கள்.

இதன் காரணமாக, டெங்கு நுளம்புகளை ஒழிப்பதற்கு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. சுற்றுச்சூழலை நுளம்புகள் பெருகும் விதத்தில் வைத்திருக்கும் நபர்களுக்கு எதிராக கூடுதல் தண்டனை வழங்கக்கூடிய யோசனை அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதென டொக்டர் மஹிபால மேலும் கூறினார்.

Related Posts