Ad Widget

இந்திய மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய அரசு தீர்மானம்

இலங்கை கடற்பரப்பை ஊடுருவும் இந்திய மீனவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் சகலரையும் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய விடுதலை செய்வதென அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கிரியங்கள்ளிய நீர்த்தேக்கத்தை மையமாகக் கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு வள்ளங்கள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்பட்டன. அத்துடன் 10 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மீனவ சனசமூக நிலையமும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மஹிந்த அமரவீர இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் இராஜதந்திர மட்டத்திலான மற்றொரு பேச்சுவார்த்தை ஜனவரி 2 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. தற்பொழுது 122 இழுவைப்படகுகளுடன் மேலும் 140 நாட்டுப் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றுடன் கைப்பற்றப்பட்ட உபகரணங்கள் யாவும் அரசுடமையாக்கப்பட்டுள்ளன. அரசுடமையாக்கப்பட்ட படகுகளையோ உபகரணங்களையோ விடுவிக்க மாட்டோம். கைது செய்யப்பட்டுள்ள சகல இந்திய மீனவர்களையும் சட்டமா அதிபரின் ஆலோசனைப் பிரகாரம் விடுதலை செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இரு நாடுகளுக்குமிடையிலான நற்புறவை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related Posts