Ad Widget

யாழ் பல்கலையில் தொல்பொருள் கண்காட்சி

மன்னார் கட்டுக்கரைத் தொல்லியல் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழர் தொன்மையயை வெளிப்படுத்தும் தொல்பொருட் சின்னங்களை காட்சிப்படுத்தும் நிகழ்வு நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

யாழ்.பல்கலைகழக தொல்லியல் அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள இக்காட்சிக்கூடத்தை யாழ்.பல்கலைகழக துணைவேந்தர் செல்வி வசந்தி அரசரட்ணம் நேற்று காலை திறந்து வைத்தார்.

சுமார் ஆறு மாதகாலமாக மன்னார் கட்டுக்கரை பகுதியில்இ யாழ் பல்கலைக் கழக தொல்லியல் துறை மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது கண்டு பிடிக்கப்பட்ட தமிழ்ர்களின் தொமையை வெளிப்படுத்தும் வரலாற்று சுவடுகளே இவ்வாறு காட்ச்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ் பல்கலைக் கழக தொல்லியல் பிரிவின் வெளியீடாக பார்வையிடலும் தேடலும் என்னும் சஞ்சிகை ஒன்றையும் துணைவேந்தர் இதன்போது வெளியிட்டு வைத்தார்

யாழ்.பல்கலைக்கழக தொல்லியல் ஆய்வு வட்டத்தின் தலைவர் பொ.வருண்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கௌரவ விருந்தினர்களாக கலைப்பீட பதில் பீடாதிபதி கலாநிதி க.சுதாகர் வரலாற்றுத்துறை தலைவர் பேராசிரியர் செ.கிருஷ்ணராஜா சிரேஷ்ட பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Related Posts