கிளிநொச்சியில் மாலை நேர வகுப்புகளுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் மற்றும் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் புதன்கிழமை (28) மாலை நேர வகுப்புக்கள் முடிந்து மாணவிகள் சென்ற வேளை சில இளைஞர்கள் மாணவிகளுடன் தவறாக நடக்க முற்பட்டுள்ளனர்.
இவ்விடயம் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து அதிகாரிகள் பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.
அத்துடன், பொலிஸார் மற்றும் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் மாலை 5.30 மணிக்கு பின்னர் கிளிநொச்சியில் மாலை நேர வகுப்புக்கள் நடத்துவது தடை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான சம்பவங்கள் கடந்த காலங்களிலும் இடம்பெற்றுள்ளது. இவற்றை தடுக்கும் முகமாக கடந்த காலங்களில் பிரதேச சபை சார்ந்து இடம்பெற்ற கூட்டங்களில் தனியார் கல்வி நிலையங்கள் அனைத்தும் பிரதேச சபைகளில் பதிவு செய்யப்படவேண்டும் எனவும் மாலை 5.30 மணிக்கு பின்னர் வகுப்புக்கள் நடத்தப்படகூடாது எனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதற்கு சில தனியார் கல்வி நிலையங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இவ்வாறான சம்பவங்கள் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.