Ad Widget

அல்லாரை தும்பு தொழிற்துறை பிரச்சினை தொடர்பில் நடவடிக்கை

சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அல்லாரை கிராமத்தில் உள்ள தும்பு தொழிற்துறையில் ஈடுபட்டுள்ளவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை இந்த பகுதிக்கு சென்ற வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா. டெனீஸ்வரன் மாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன் ஆகியோர் இத்தொழிற்துறையில் ஈடுபட்டுள்ளோர்களின் பிரச்சினைகள் பற்றி கவனம் செலுத்தினர்.

கடந்த அரசாங்க காலப்பகுதியில் அல்லாரை தும்பு உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தினருக்கு தும்புப்பொருள் உற்பத்தி செய்யும் கைத்தொழிலுக்கான உதவிகள் செய்யப்பட்டிருந்தன.

இதில் உள்ள குறைபாடுகளை அடுத்தவருடத்தில் நிவர்த்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொளவதாக தெரிவித்துள்ளனர்.

தும்பு அடிக்கும் இயந்திரம் அத்தியாவசிய இயந்திரங்கள் முதலியவற்றை புனரமைத்து இந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Related Posts