Ad Widget

யுத்தத்திற்கு பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 30ஆயிரம் பேர் குடியமர்வு!

யுத்தத்திற்குப் பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரையான காலப்பகுதியில், ஒரு இலட்சத்திற்கும் 30ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை குடியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் புள்ளி விபரத்தின்படி, 42 ஆயிரத்து 158 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 33 ஆயிரத்து 750 அங்கத்தவர்கள் மீளக்குடியமர்ந்துள்ளனர்.

கரைத்துறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவுகளில் அதிகளவான மக்கள் மீள்குடியேறியுள்ளனர்.

இதன்பிரகாரம் கரைதுறைப்பற்றில் 13 ஆயிரத்து 224 குடும்பங்களைச் சேர்ந்த 42 ஆயிரத்து 79 பேரும், புதுக்குடியிருப்பில் 12 ஆயிரத்து 918 குடும்பங்களைச் சேர்ந்த 40 ஆயிரத்து 14 பேரும் தமது சொந்த இடங்களுக்கு மீண்டும் திரும்பியுள்ளனர்.

இதேவேளை ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவில் 5 ஆயிரத்து 961 குடும்பங்களைச் சேர்ந்த 19 ஆயிரத்து 415 பேர் மீள் குடியமர்ந்துள்ளதாக மாவட்ட புள்ளவிபரங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

துணுக்காயில் 3 ஆயிரத்து 786 குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 856 பேரும் மாந்தை கிழக்கில் 2 ஆயிரத்து 933 குடும்பங்களைச் சேர்ந்த 9 ஆயிரத்து 197 பேரும் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

வெலிஓயா எனப்படும் மணலாறு பிரதேச செயலகப் பிரிவில் 3 ஆயிரத்து 336 குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 189 பேர் குடியமர்ந்துள்ளனர் என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

Related Posts