Ad Widget

என்ன முட்டுக்கட்டை வந்தாலும் பொருத்து வீட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்

என்ன முட்டுக்கட்டை வந்தாலும் பொருத்து வீட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என மீள்குடியேற்றம், புனா்வாழ்வு, சிறைசாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்து சமய விவகார அமைச்சா் டி.எம் சுவாமிநாதன் தெரிவித்தார்.

கிளிநொச்சி பொதுச் சந்தையில் தீயினால் எரிந்த கடை உரிமையாளர்களுக்கு நட்டஈடு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிடும் போது,

இப்பொழுது பல பிரச்சனைகள் இருக்கின்றது. மண் இல்லை. வேலைகளைச் செய்வதற்கான மேசன்மார்கள் இல்லை. இவ்வாறு பல பிரச்சினைகள் இருக்கின்றன.

அந்த வீட்டுத் திட்டத்தின் மூலம் ஒரு வீட்டை நான் சுன்னாகத்திலே கட்டி இருக்கின்றேன். இந்த வீட்டை எத்தனையோ பேர் சென்று பார்வையிட்டு இருக்கின்றனர்.

ஆனாலும் இவற்றுக்கு எதிர்ப்பை தெரிவிப்பதற்கு பலர் இருக்கின்றனர். அதனைப்பற்றி இச்சந்தர்ப்பத்தில் பேச விரும்பவில்லை. எனினும் இத்திட்டம் முற்றுமுழுதாக மக்கள் நலம் சார்ந்ததே. ஆகவே இத்திட்டம் விரைவில் அமுல்ப்படுத்தப்படும் என தெரிவித்தார்

இதனைத் தொடர்ந்து நிகழ்வின் முடிவில் பொருத்து வீட்டுத்திட்டத்திற்கு விண்ணப்பிக்காத மக்களுக்கு மாற்றுத்திட்டம் ஏதும் இருக்கிறதா என ஊடகவியலாளர்களால் தொடுக்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்காமல் சென்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts