யாழ்ப்பாணத்தில் இருவேறு இடங்களில் நீராடச் சென்ற ஆசிரியர் மற்றும் மாணவர் ஒருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
கீரிமலை – மாதகல் – 5, கண் கடற்கரையில் நீராடச் சென்ற ஆசிரியர் ஒருவர் நேற்றைய தினம் நீரில் மூழ்கி பலியானார்.
யாழ். – இளவாலை பகுதி பாடசாலை ஒன்றின் ஆசிரியரான நகுலன் (வயது – 31) என்பவரே இவ்வாறு நீரில் மூழ்கியவர் எனத் தெரியவந்துள்ளது.
இதேவேளை யாழ்ப்பாணம் – கந்தரோடைப் பகுதியில் உள்ள பினாக்காய் குளத்தில் நீராடச் சென்ற மூன்று சிறுவர்களுள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அளவெட்டி – அலுக்கை பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரன் சாருஜன் (வயது 9) என்ற சிறுவனே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
இவரது சடலத்தை மீட்ட பொலிஸார் தெல்லிப்பளை வைத்தியசாலையில் ஒப்படைத்த நிலையில், பிரேதப் பரிசோதனைக்காக சடலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
குறித்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.