தமிழர்களின் இருப்பை தக்கவைக்கும் பொறுப்பு இளைஞர்களுக்கே உண்டு: சுரேஸ்

எமது சமுதாயத்தின் இருப்பை பாதுகாத்து தக்கவைக்கும் பாரிய பொறுப்பு இளைஞர் யுவதிகளிடமே உள்ளதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதனை விடுத்து வெளிநாட்டு மோகம் காரணமாக வெளிநாடுகளை நோக்கி படையெடுப்பதானது, எதற்காக போராடினோம் என்ற கேள்வியை ஏற்படுத்துமென அவர் மேலும் தெரிவித்தார். கிளிநொச்சி உருத்திரபுரம் உழவர் ஒன்றிய சனசமூக...

நத்தார் தினத்தில் வறுமையில் வாழும் முதியவர்களுக்கு, பெண்களின் உள்ளாடைகளை வழங்கிய கொடை வள்ளல்கள்!

கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தில் நேற்று 25-12-2016 நத்தார் தினத்தில் முதியவர்களுக்கு பொதிகள் வழங்ப்படுவதாக அறிவித்து அந்த கிராமத்தில் வாழ்கின்ற 136 முதியவர்களை அங்கு பொதுநோக்கு மண்டபத்திற்கு அழைத்துள்ளனர். காலை பத்து மணிக்கு குறித்த கிராமத்தில் வாழ்கின்ற நூற்றுக்கும் மேற்பட்ட முதியவர்கள் இயலாத நிலையிலும் பொது நோக்கு மண்டபத்தில் ஒன்று கூடியுள்ளனர். கிராமத்தின் முதியோர் சங்கமும், வெளியில்...
Ad Widget

இலங்கை, இந்திய விமான சேவை நண்பகல் வரை திடீர் இடைநிறுத்தம்

இந்தியாவின் கிழக்குப் பிராந்தியத்தில் ஏவுகணை பரீட்சார்த்த நடவடிக்கைகள் இடம்பெறுவதனால், இலங்கை – இந்தியாவுக்கான விமான சேவை இன்று நண்பகல் வரை இடம்பெற மாட்டாதென கட்டுநாயக்க விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தக் காலப் பகுதிக்குள் 10 விமானப் போக்குவரத்துக்கள் தாமதித்து இடம்பெறும் எனவும் விமான நிலைய அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். இன்று காலை ஜகர்த்தா மற்றும் சிங்கப்புர்...

பாடசாலைகள் ஆரம்பிக்கும் நேரத்தினை வடக்கு கல்வி அமைச்சு மீளாய்வு செய்ய கோரிக்கை!

வடக்கின் பாடசாலைகளை 7.30ற்கு ஆரம்பிக்கும் நேரத்தினை வடக்கின் கல்வி அமைச்சர் அவசரமாக மீளாய்விற்கு உட்படுத்த வேண்டும் என பேரவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கோரிக்கை விடுத்தார். வடக்கு மாகாண சபையின் 2017ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தின் கல்வி அமைச்சிற்கான குழுநிலை விவாதத்தின்போதே மேற்கண்ட கோரிக்கையினை விடுத்து உரையாற்றினார். இது குறித்து அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்...

8 இலட்சம் ரூபாவுக்கு மோட்டார் கார்!

மோட்டர் சந்தையில் இலங்கையர் ஒருவர் புரட்சியை ஏற்படுத்தியுள்ளார். இலங்கையர் ஒருவரினால் தயாரிக்கப்பட்ட முதலாவது மின்சார மோட்டார் வாகனம் ஜனவரி முதலாம் திகதியில் இருந்து 8 இலட்சம் ரூபா விலைக்கு சந்தைக்கு வரவுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் மோட்டார் வாகனம் கிட்டத்தட்ட 30 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. மணிக்கு 60 கிலோ மீற்றர்...

மயிலிட்டியை இராணுவம் கைவிடக் கூடாது!

எந்தவொரு சூழ்நிலையிலும் வலி.வடக்கில் அமைந்துள்ள மயிலிட்டியை பொதுமக்களிடம் கையளிக்கக்கூடாது எனவும் அங்கு மீள்குடியேற்றம் செய்வதற்கு அனுமதிக்கக்கூடாது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தேசிய போர் வீரர்கள் முன்னணி என்ற முன்னாள் படை அதிகாரிகளின் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த புதன்கிழமை இந்த அமைப்பைச் சேர்ந்த படையதிகாரிகள் குழுவொன்று இரண்டு மணிநேரமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துக்...

சர்வதேச விசாரணையே தேவை என்பதை ரவிராஜின் தீர்ப்பு உறுதி செய்கிறது-சிவாஜிலிங்கம்

தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை, மானிடத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு சர்வதேச விசாரணையே தேவை என்பதை ரவிராஜ் படு கொலை சம்பவத்தின் தீர்ப்பு உணர்த்தியுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் நீதித்துறையில் இருந்து தமிழ் மக்களுக்கு எந்தவொரு நீதியும் கிடையாது என்ற செய்தி இதன் மூலம் மீண்டும் மீண்டும்...

9:25க்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு, இன்று 26ஆம் திகதியுடன் 12 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், சுனாமி அனர்த்தத்தினால் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இன்றுக்காலை 9:25க்கு இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

வவுனியாவில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒருதொகை ஆயுதங்கள் மீட்பு

வவுனியா - நீலியாமோட்டைப் பிரதேசத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒருதொகை ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. வன்னி விமானப் படை முகாம் அதிகாரிகளுக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய, விமானப் படையினர் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இதன்போது மிதிவெடிகள் 49, கைக்குண்டுகள் மற்றும் 60 மில்லிமீட்டர் மோட்டர்...

ஒற்றையாட்சியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்!

ஒற்றையாட்சியை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என, தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். ஜோசப் பரராசிங்கத்தின் 11வது நினைவு தினம், நேற்று மட்டக்களப்பில், நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு நினைவுப் பேருரையாற்றும் போதே மாவை சேனாதிராஜா இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, இந்த நாட்டில் இடம்பெற்ற படுகொலைகள், இனப்...

இல்ல விளையாட்டுப் போட்டிகள் : கல்வி அமைச்சு அறிக்கை

பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டிகளை எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யுமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்; வலய விளையாட்டுப் போட்டிகளை ஏப்ரல் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னரும், மாகாண ரீதியிலான போட்டிகளை ஜூன்மாதம் 22 ஆம் திகதிக்கு முன்னரும் நடத்தி முடிக்கப்பட வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளது. அகில...

ரவிராஜ் வழக்கின் தீர்ப்பு சர்வதேச விசாரணையின் தேவையை எடுத்துக்காட்டியுள்ளது

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் சர்வதேச குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை தேவை என்பதை ரவிராஜின் தீர்ப்பு எடுத்துக்காட்டியுள்ளதாக என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ரவிராஜின் படுகொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கடற்படைப் புலனாய்வு அதிகாரகிள் மூவர் உட்பட அனைவரும் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்ட நிலையிலேயே...

படம் பார்க்க சென்றவர்களுடன் அநாகரிகமாக செயற்பட்ட ஊழியர்கள்

யாழில் உள்ள பிரபல திரையரங்கு ஒன்றில் திரைப்படம் பார்க்க சென்றவரை திரையரங்க ஊழியர்கள் தகாத வார்த்தை பிரயோகம் பிரயோகித்து அநாகரிகமாக அவருடன் நடந்து கொண்டதாகவும், அச்சுறுத்தும் விதமாக செயற்பட்டதாகவும் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் முறைப்பாட்டாளர் தெரிவிக்கையில், யாழில் உள்ள குறித்த திரையரங்கில் சனிக்கிழமை (24) திரைப்படம் பார்க்கச்...

மக்களிடையே முரண்பாட்டை ஏற்படுத்த வேண்டாம்

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு, கடந்த நவம்பர் மாதம் 10ஆம் திகதி வழங்கப்பட்ட வாழ்வாதார உதவிகள் தெரிவுசெய்யப்பட்ட உரிய பயனாளிகளுக்கே வழங்கப்பட்டுள்ளது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) ஊடகங்களுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில், 10.11.2016 அன்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வைத்து முல்லைத்தீவு மாவட்டத்தினைச்...

வட மாகாண சபையின் தவறான முடிவுகள் வேதனையானது

12 வலயங்களின் கல்விப் பணிப்பாளர்களினதும் கருத்துக்களைப் புறந்தள்ளி வடக்கு மாகாணசபை தவறான முடிவுகளை எடுப்பது மிகவும் வேதனைதரும் விடயமாக உள்ளது என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஆசிரியர் சங்கம் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கு மாகாணத்தில் 1,064 மாகாணப் பாடசாலைகளும் 22 தேசிய பாடசாலைகளும், 06 தனியார் பாடசாலைகளுமாக...

மேலும் ஒரு முன்னாள் போராளி உயிரிழப்பு

வவுனியா புளியங்குளத்தில் ஏ-9, வீதியில் பஸ்ஸூக்காக காத்து நின்ற முன்னாள் போராளி ஒருவர், திடீரென மயங்கி வீழ்ந்ததையடுத்து சக பயணிகளால் மீட்கப்பட்டு, புளியங்குளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சை வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது, இடை வழியில் அவர் உயிரிழந்த சம்பவம், சனிக்கிழமை (24)இடம்பெற்றுள்ளது. நெடுங்கேணி குழவிசுட்டான் பகுதியைச் சேர்ந்த இரண்டு...

டிக்கட் இன்றி பயணிப்பவர்களுக்கான அபராதத்தை அதிகரிக்க யோசனை

அனுமதிச் சீட்டு (டிக்கட்) இன்றி இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்களில் பயணிப்பவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை 1000 ரூபா வரை உயர்த்துவதற்கான யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, போக்குவரத்து அமைச்சிடம் குறித்த யோசனை வழங்கப்பட்டுள்ளதாக, இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர், ரமால் சிறிவர்த்தன குறிப்பிட்டுள்ளார். தற்போது அரச பஸ்களில் டிக்கட் இன்றி பயணிப்பவர்களுக்கு 250 ரூபா மற்றும்...

ரவிராஜ் வழக்கு விவகாரம் : மேன்முறையீடு செய்ய முடிவு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்குத் தொடர்பில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் தரப்பு வழக்கறிஞர் என்ற வகையில் தான் இந்த மேன்முறையீட்டை மேற்கொள்ளவுள்ளதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். நடராஜா ரவிராஜ் கொலை வழக்கு தொடர்பான தீர்ப்பு கடந்த...

அரசாங்க ஊழியர்கள் பரிசுகள் பெறுவதும், கொடுப்பதும் குற்றம்

வர்த்தகர்கள் மற்றும் வணிக நிறுவனங்களிடமிருந்து பரிசுகளையோ, பரிசு உறுதிச்சீட்டுக்களையோ பெறுவதானது, இலஞ்ச சட்டத்தின் கீழ் தண்டணைக்குரிய குற்றமாகும் என்பதை அரசாங்க ஊழியர்கள் மத்தியில் அறிவுறுத்துவதற்கு, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இது தொடர்புடைய தீர்மானம், தேசிய ஊழல் ஒழிப்பு மாநாட்டின் போது எடுக்கப்பட்டதாகவும் வர்த்தகர்கள் மற்றும்...

உலகிலேயே உயரமான நத்தார் மரம் இன்று இரவு திறந்து வைப்பு

கொழும்பு காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான நத்தார் மரம் இன்று(24) இரவு 10 மணிக்கு திறந்துவைக்கப்பட்டுள்ளது. குறித்த கிறிஸ்மஸ் மரமானது 325 அடி (100M) உயரமுடையதாக அமைக்கப்பட்டு, உலகிலேயே மிக உயரமான நத்தார் மரம் என்ற சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன்னர் 1950 ஆம் ஆண்டு வொஷிங்டன் நகரில் அமைக்கப்பட்ட 221 அடி உயரம் கொண்ட...
Loading posts...

All posts loaded

No more posts