- Monday
- August 17th, 2026
இனிவரும் காலங்களில் தனியார் ஊடகங்களுக்கு தகவல்களை வழங்காதிருக்கு பொலிஸ் திணைக்களம் தீர்மானித்திருப்பதாக தெரிய வந்துள்ளது. அண்மைய நாட்களில் இடம்பெற்ற சில சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. முன்னதாக அனைத்து பொலிஸ் பிரிவுகளிலும் இடம்பெறுகின்ற சம்பவங்களை மின்னஞ்சல் ஊடாக அரச ஊடகங்கள் மற்றும் தனியார் ஊடகங்களுக்கு பொலிஸ் தலைமையகம் வழங்கியது. இது...
இந்த ஆண்டு ஏ9 வீதியிலேயே அதிகளவான வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த வீதியில் இடம்பெற்ற விபத்துக்களினால் மாத்திரம் 117 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதில் அண்மையில் சாவகச்சேரி, சங்கத்தானைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தும் உள்ளடங்குகின்றது. குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களுக்குட்பட்ட ஏ-9 பாதையிலேயே அதிகளவிலான விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாலும்,...
வடமாகாண சபையின் 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டம் தொடர்பாக கடந்த ஐந்து நாட்களாக இடம்பெற்ற விவாதத்தினை தொடர்ந்து வரவு செலவுத் திட்டம் ஏகனமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார். வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்தனை வடமாகாண ஆளுநர் ரெஜினோலட் குரேக்கு அறிவிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்....
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை புனித பிரதேசங்களாக அறிவிக்குமாறு கோரும் தீர்மானம் ஒன்று கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன் மாவீரர் துயிலும் இல்லங்களை பிரதேச சபை ஊடாக சிரமதானம் செய்து புனித பிரதேசங்களாக மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்...
தனியார் துறையினரால் அரிசி விலையை அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அதற்கு இடமளிக்கப் போவதில்லை என்று பிரதியமைச்சர் அமீர் அலி கூறுகின்றார். எதிர்வரும் நாட்களில் அரிசியை இறக்குமதி செய்து கட்டுப்பாட்டு விலையை பேணுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறுகின்றார். ஒப்பீட்டளவில் அரிசியின் விலை அதிகரிக்கப்பட்டிருப்பதாக அரிசி வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். அரசாங்கத்தின் களஞ்சியசாலைகளில் இருக்கின்ற அரிசி, சரியான முறையில்...
தமிழீழ விடுதலை புலிகள் காலத்தில் விவசாய உற்பத்திகளுக்கும், கடலுணவுகளுக்கும் நிர்ணய விலையை புலிகள் பேணி வந்தார்கள் ஆனால் இப்பொழுது அந்த நிலை மாறியுள்ளமையினால் கடற்றொழிலாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கிறார்கள் என மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் வரவு செலவு திட்டத்தில் மாகாண விவசாய அமைச்சுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியின் மீதான குழுநிலை...
“ஒரு பலமான சமூகத்தினால் மாத்திரமே ஒரு பலமான போராட்டத்தை முன்னெடுக்க முடியும்” என்பதை நாம் அடிக்கடி மறந்து விடுகிறோம் என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தனது 2017ம் ஆண்டுக்கான சுகாதார அமைச்சின் பட்ஜட் உரையில் உரையாற்றும்போது தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது எமதுமக்களை ஒரு பலமான சமூகமாக வாழச் செய்ய வேண்டுமாக இருந்தால்அபிவிருத்தி...
இலங்கை துறைமுக வரலாற்றில் முதல் தடவையாக கண்ட்ரி கிரேன் (Gantry Crane) பழுதூக்கும் கருவியை இயக்க கூடிய பெண் ஒருவரை நியமிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று கொழும்பு துறைமுக அதிகார சபையின் மஹாபொல பயிற்சி நிறுவகத்தின் கப்பல் போக்குவரத்துத் துறை சார்ந்த மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்ட , துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அலுவல்கள் அமைச்சர்...
பொருத்து வீடுகள் பொருத்தமற்றவை என்பதே வட மாகாண சபையின் உறுதியான தீர்மானம் என வட மாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வட மாகாண சபையின் 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த...
அபிவிருத்தி விசேட ஒழுங்கு சட்டமூலத்தினூடாக மாகாண சபைகளின் அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். உத்தேச அபிவிருத்தி விசேட ஒழுங்கு சட்டமூலம் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் முதலமைச்சர்களுக்கும் பிரதமருக்கும் இடையே நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள்...
சிறப்பு அதிகாரங்கள் கொண்ட அமைச்சர் ஒருவரை நியமிப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள அபிவிருத்தி விசேட ஒழுங்குகள் சட்ட மூலத்திற்கு வடமாகாணசபையும் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது. அத்துடன் மாகாணசபைகளுக்குரிய அதிகாரங்களை பறிக்கும் வகையிலும், அதிகாரப்பகிர்வுக்கு மாறாகவும் இந்த புதிய சட்டத்தை தற்போதைய மைத்ரி – ரணில் அரசாங்கம் அரசாங்கம் உருவாக்கு முயல்வதாகவும் வட மாகாண சபை குற்றம்சாட்டியுள்ளது. ஜனாதிபதி மைத்ரிபால...
வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஏராளமான தொல்பொருள் ரீதியில் பெறுமதி மிக்க பௌத்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க இடங்கள் இருப்பதாகவும் அவற்றை பாதுகாக்கப்பதற்கு சிவில் பாதுகாப்புப் படையினரை அமர்த்தவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள சிங்கள பௌத்த தொல்பொருள் இடங்களை தமிழர்களும் முஸ்லீம்களும் இணைந்து அழித்து வருவதாக பொதுபல சேனா உட்பட...
தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினரால் எழுத்தாளர்களிற்கான கருத்தரங்கு யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கொழும்பிலுள்ள தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் தலைவர் மகிர அரவிந்த , தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் உத்தியோகத்தரான சீ.எம். சபீக், எம்.எஸ்.எம். சிகாம் பங்குபற்றி நூல்கள் எழுதுதல், வெளியிடுதல் தொடர்பில் கலந்துடையாடலை...
போரினால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களும், இந்த வீட்டுத் திட்டத்தைப் பெற பொருத்தமானவர்கள் என சிறைச்சாலை, மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். வடக்கு, கிழக்கில் அமைக்கப்படவுள்ள முன் நிர்மாணிக்கப்பட்ட 10 ஆயிரம் வீட்டுத்திட்டத்தின் முதல் கட்டம் தொடர்பில் குறிப்பிடுகையிலையே, அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கின் தீர்ப்பை, எழுவர் அடங்கிய விசேட சிங்கள ஜூரிகள் சபை அறிவித்தது. தொகுப்புரைகள், நேற்று முதல் எழுவர் அடங்கிய விசேட ஜூரிகள் முன்னிலையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வைத்து ஆற்றுப்படுத்தப்பட்டன கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி மணிலால் வைத்திய திலக்க, ஜூரிகளுக்கு தெளிவுரையளித்தார். அதன்...
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி புதுக்குடியிருப்பு கடலில் சிதைவடைந்த விமானத்தின் உதிரி பாகங்கள் சிலவற்றை கடற்படையினர் மீட்டுள்ளனர். இந்த சிதைவடைந்த உதிரிப்பாகங்கள் ரஷ்ய போர் விமானத்தின் உதிரிப்பாகங்களாக இருக்கலாமென்று நம்பப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை மாலை புதுக்குடிருப்பு கடலில் 7 கிலோ மீற்றர் தொலைவில் இந்த பாகங்கள் கடலில் மிதந்துகொண்டிருந்தன. இதுதொடர்பாக மீனவர்கள் வழங்கிய தகவல்களுக்கு அமைவாக இவற்றை...
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு விடுவிக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. இதற்கு அமைவாக தமிழக மீனவர்களை விடுவிக்க அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக மீன்பிடித்துறை மற்றும் கடற்றொழில் அமைச்சர் மஹிந்த...
வடக்கு மக்கள் தமது பிரச்சினைகளை நேரடியாகத் ஜனாதிபதியிடம் தெரிவிப்பதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கு வசதியாக செயலகம் ஒன்று வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் அடுத்த வருடம் முதல் செயல்படவிருப்பதாக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே நேற்று தெரிவித்துள்ளார். இந்த அலுவலகத்தின் ஆரம்ப கட்ட நிகழ்வுக்காக எதிர்வரும் நான்காம் திகதி ஜனாதிபதி யாழ் வரவுள்ளதாக வடக்கு...
58 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாடகைக்கு வாகனங்கள் வழங்கப்படவிருந்த திட்டம் நிறுத்தப்பட்டிருப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர கூறுகின்றார். பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்காக கடந்த அரசாங்கத்திலும் இவ்வாறு வாகனங்கள் வழங்கப்பட்டதாக அமைச்சர் கூறினார். நேற்று கேட்டேகொட கலப்பு அபிவிருத்தி திட்டத்தில் கலந்து கொண்டிருந்த அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்....
யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அடிகளாரின் தலைமையில் கூட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, ஆலயம் ஆயரினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. புதிய ஆலயத்திற்கான நினைவுக்கல்லை வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மற்றும் கடற்படை தளபதி ஆகியோர் இணைந்து திரைநீக்கம் செய்து வைத்தனர். திறப்பு விழாவில், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அருத்தந்தையர்கள், அருட்சகோதரிகள், கடற்படையினர், பொதுமக்கள் என...
Loading posts...
All posts loaded
No more posts
