Ad Widget

வடக்கு மக்கள் முறைப்பாடுகளை நேரடியாக ஜனாதிபதியிடம் முறையிட வசதி

வடக்கு மக்கள் தமது பிரச்சினைகளை நேரடியாகத் ஜனாதிபதியிடம் தெரிவிப்பதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதற்கு வசதியாக செயலகம் ஒன்று வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் அடுத்த வருடம் முதல் செயல்படவிருப்பதாக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே நேற்று தெரிவித்துள்ளார்.

இந்த அலுவலகத்தின் ஆரம்ப கட்ட நிகழ்வுக்காக எதிர்வரும் நான்காம் திகதி ஜனாதிபதி யாழ் வரவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே கூறினார்.

வவுனியா மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஆளுநர் இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில் :

வடக்கு மாகாண மக்கள் தமது குறைகள் மற்றும் பிரச்சனைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு நேரடியாக முறைப்பாடுகளை தெரிவிக்கும் செயலகம் ஒன்று வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் எதிர் வரும் ஆண்டில் இருந்து செயல்படும்

மாகண மக்கள் தங்கள் பிரச்சணைகளை ஆளுநர் செயலகத்தில் உள்ள செயலகத்தில் சமர்ப்பிக்க முடியும். இது நேரடியாக ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பிவைக்கப்படும் என’று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே கூறினார்.

இந்த நிகழ்வில் வடக்கில் 5 மாவட்டங்களையும் உள்ளடங்கிய பொலிஸ் , இராணுவ உயர் அதிகாரிகள் , மாவட்ட அரச அதிபர்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா கலந்து கொண்டனர்

Related Posts