Ad Widget

போரினால் பாதிக்கப்பட்ட அனைவரும் வீட்டுத்திட்டதை பெற உரித்துடையவர்கள்

போரினால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களும், இந்த வீட்டுத் திட்டத்தைப் பெற பொருத்தமானவர்கள் என சிறைச்சாலை, மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் அமைக்கப்படவுள்ள முன் நிர்மாணிக்கப்பட்ட 10 ஆயிரம் வீட்டுத்திட்டத்தின் முதல் கட்டம் தொடர்பில் குறிப்பிடுகையிலையே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,

‘இத்திட்டத்தின் பயனாளிகள், இவ்வீடுகளை பெறுவதற்கு, 6 இலட்சம் ரூபாயை கொடுக்க வேண்டும் என்று, சிலர் தவறான கருத்துக்களை பரப்பி, மக்களை பிழையாக வழி நடத்தி வருகின்றனர். பொய்யான தகவல்கள் மூலம், மக்களை தவறாக வழிநடத்தக் கூடாது.

இவ்வீடுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான விளம்பரம், பல பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இவ்வீடுகளை பெற விரும்பும் மக்கள், இவ்விண்ணப்பப்படிவத்தை பூர்த்திசெய்து, பிரதேச செயலகங்களில் எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்க வேண்டும்.

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வழிக்காட்டலின் கீழ், எனது அமைச்சு போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்குவதற்கு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றது’ என மேலும் கூறினார்.

Related Posts