ஏ9 வீதியிலேயே அதிகளவான விபத்துக்கள்! இந்த ஆண்டில் 117 பேர் பலி!

இந்த ஆண்டு ஏ9 வீதியிலேயே அதிகளவான வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த வீதியில் இடம்பெற்ற விபத்துக்களினால் மாத்திரம் 117 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதில் அண்மையில் சாவகச்சேரி, சங்கத்தானைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தும் உள்ளடங்குகின்றது.

குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களுக்குட்பட்ட ஏ-9 பாதையிலேயே அதிகளவிலான விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாலும், மதுபோதையில் வாகனங்களைச் செலுத்தியதாலுமே இவ்வாறான விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts