12 விவசாயப் போதனாசிரியர்கள் நியமனம்!

வடக்கு விவசாயத் திணைக்களத்தில் பணியாற்றுவதற்கென பயிற்சித்தர விவசாயப் போதனாசிரியர்களாகப் 12 பேர் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனக் கடிதங்களை வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கடந்த செவ்வாய்க்கிழமை (20.12.2016) அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற இதற்கான நிகழ்வின்போது வழங்கி வைத்துள்ளார். விவசாயிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு விரிவாக்க சேவையை முன்னெடுப்பதில் விவசாயப் போதனாசிரியர்களின் பங்களிப்பு இன்றியமையாதது....

ஜனவரி 1 முதல் தரச் சான்றிதழ் அற்ற தலைக்கவசங்களுக்கு தடை

ஜனவரி 1 முதல் தரச் சான்றிதழ் அற்ற தலைக்கவசங்களுக்கு தடை ஜனவரி முதலாம் திகதி முதல் தரச் சான்றிதழ் இல்லாத தலைக்கவசங்களை சந்தைக்கு விநியோகிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டிருப்பதாக வீதி பாதுகாப்பு சம்பந்தமான தேசிய சபையின் தலைவர் வைத்தியர் சிசிர கோதாகொட கூறினார். தரச் சான்றிதழ் பெற்ற தலைக்கவசங்கள் தயாரிப்பதை பதிவு செய்வதற்காக டிசம்பர் 31ம்...
Ad Widget

ஓய்வு பெறவுள்ள பான்கீ மூன் ஜனாதிபதியுடன் தொலைபேசி உரையாடல்

ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடமிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நேற்று மாலை விசேட தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது, இன நல்லிணக்கத்துக்கு இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு அவர் பாராட்டுத் தெரிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. தான் ஓய்வு பெற்றாலும் இலங்கையின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு தன்னால்...

வரலாற்றில் என்றுமில்லாதவாறு டொலரின் பெறுமதி அதிகரிப்பு

இந்நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 152 ரூபாவாக அதிகரித்துள்ளது. மத்திய வங்கிய நேற்று (22) வெளியிட்டுள்ள நாணய மாற்று வீதத்தின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 152 ரூபா 12 சதமாக அதிகரித்துள்ளது. கடந்த அண்மிய காலத்தில் டொலரின் விலை அதிகரிக்கும் போதெல்லாம் ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்து...

வவுனியாவில் தமிழ் இளைஞர் கடத்தல் ; இரு பெரும்பான்மையினத்தவர் கைது

வவுனியாவில் தமிழ் இளைஞர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரு பெரும்பான்மையினரத்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பேரூந்து ஒன்றும் வவுனியா பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா நகர பேரூந்து நிலையத்தில் த. சுபராஜ் என்ற குறித்த இளைஞன் உணவகம் நடத்தி வருகின்றார். கடந்த செவ்வாய்க்கிழமை வவுனியா கொழும்பு பகுதியில் பயணிக்கும் தனியார்...

வடமாகாணத்திற்கு தனியார் மருத்துவ கல்லூரி: சிவாஜிலிங்கம்

வடமாகாணத்தில் தனியார் மருத்துவ கல்லூரிகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். வடமாகாணசபையின் 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி மீதான குழு நிலை விவாதம் நேற்று (வியாழக்கிழமை) பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்படி கோரிக்கையை முன்வைத்திருந்தார்....

பிரதமருடனான இன்றைய சந்திப்பில் கலந்துகொள்ளமாட்டேன்!

உத்தேச அபிவிருத்தி விசேட ஒழுங்கு சட்டமூலம் தொடர்பாக தெளிவுபடுத்தும் விசேட சந்திப்பில் கலந்துகொள்ளப்போவதில்லையென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். குறித்த சந்திப்புத் தொடர்பாக தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையெனவும், இவ்வாறான சந்தர்ப்பத்தில் தான் எவ்வாறு கலந்துகொள்வது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். உத்தேச அபிவிருத்தி விசேட ஒழுங்கு சட்டமூலம் தொடர்பில் தெளிவுபடுத்தும் விசேட சந்திப்பு ஒன்று இன்று...

வலி.வடக்கில் மக்களுக்கான கட்டிட அனுமதி வழங்கப்படாததால் வீட்டுத் திட்டத்தில் தாமதம்!

வலி. வடக்குப் பகுதியில் மீளக்குடியமரும் மக்களிற்கான வீட்டுத்திட்டத்திற்கான கட்டிட அனுமதியினை பிரதேச சபை வழங்க ஏற்படும் தாமதம் காரணமாக இறுதிக் கட்ட 50 ஆயிரம் ரூபா பணம் வழங்கப்படவில்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர் இது தொடர்பில் குறித்த பிரதேச சபைக்குட்பட்ட வீட்டுத்திட்டப் பயனாளிகள் தெரிவிக்கையில், வலி. வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் மீள் குடியேறும்...

போரினால் பார்வையிழந்தவர்களுக்கு வெள்ளைப் பிரம்புகள்

போரால் பாதிக்கப்பட்டு கண்களை இழந்த முன்னாள் போராளிகள் 100 பேருக்கு வெள்ளைப் பிரம்புகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. யாழ்.வணிகர் கழகத்தின் ஏற்பாட்டில் யாழ். நகரப் பகுதியில் உள்ள பல்பொருள் விற்பனை நிலையத்தின் உரிமையாளர்களினால் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குறித்த வெள்ளைப் பிரம்புகள் கொள்வனவு செய்யப்பட்டு வழங்கி வைக்கப்பட்டுள்ளன. யாழ்....

வடக்கு மாகாணசபை 2017ஆம் ஆண்டுக்கான பாதீடு

22.12.2016 (வியாழக்கிழமை) அன்று நடைபெற்ற முதலாவது வடக்கு மாகாணசபையின் 72ஆவது அமர்வில்விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் கௌரவ பொ.ஐங்கரநேசன் தனது அமைச்சின் 2017ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடைச் சமர்ப்பித்து ஆற்றிய உரை. கௌரவ அவைத்தலைவர் அவர்களே, கௌரவ முதல்வர் அவர்களே, கௌரவ அமைச்சர்களே, கௌரவ...

வடக்கு மாகாண சபை குழப்பம்! அவைத்தலைவரை நெருங்கிய சிவாஜி!.

வடக்கு மாகாண ஆளுங்கட்சி உறுப்பினர்கள் முதலமைச்சரினை விமர்சித்து பேசியதால் சபையில் ஆளுங்கட்சிக்குள்ளேயே பெரும் அமளி துமளி ஏற்பட்டது. நான், நீ, போ, பேயா எனவும் கருத்து மோதல்கள் இடம்பெற்றமையால் அவையே நேற்று கலவரமாகியது.இந்த மோதல்களின் தொடர்ச்சியாக உறுப்பினர் சிவாஜிலிங்கம் செங்கோலை தூக்க முயன்றமையால் பெரும் குழப்பம் ஏற்பட்டு ஒருமணித்தியாலம் வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. வடக்கு மாகாண சபையின்...

வட மாகாண கடமைநிறைவேற்று அதிபர்கள் ஆர்ப்பாட்டம்

நிரந்தர நியமனம் கோரி, வடமாகாணத்தில் கடமைநிறைவேற்றும் அதிபர்களாக நியமிக்கப்பட்ட அதிபர்கள், வடமாகாண சபைக்கு முன்னால் இன்று வியாழக்கிழமை (22) பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடமைநிறைவேற்றும் அதிபர்களாக செயற்படும் தம்மை மத்திய அரசாங்கத்தில் மூலம் நிரந்தர அதிபர் சேவைக்குள் உள்ளீர்க்க வேண்டும் என வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. வழமையாக நியமிக்கப்பட்ட அதிபர்கள் சேவை,...

மாணவர்கள் மீது வாள் வெட்டு

தனியார் கல்வி நிலையத்துக்கான விளம்பர பதாதைகளை ஒட்டிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவர்கள் மீது, புதன்கிழமை இரவு வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், ஊரெழு பிள்ளையார் கோவிலுக்கு முன்னாள் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீதியில் வந்துக்கொண்டிருந்த இரண்டு மாணவர்கள் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள், வாள்வெட்டை மேற்கொண்டு விட்டுச் சென்றுள்ளனர். இதில் ஒரு மாணவன்...

சிறைச்சாலைக்குள் கஞ்சாவுடன் சென்ற பெண் கைது

50 கிராம் கஞ்சா பொதியினை 500 கிராம் மிக்சர் பக்கெற்றுக்குள் மறைத்து, சிறைச்சாலைக்குள் கொண்டு சென்ற அல்லைப்பிட்டி வெண்புரவி மீள்குடியேற்றப்பகுதியினை சேர்ந்த பெண்ணை, புதன்கிழமை (21) மாலை கைதுசெய்த சிறைச்சாலை அதிகாரிகள், யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். வெண்புரவி மீள்குடியேற்றப் பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திலுள்ள தனது மகளைப் பார்ப்பதற்கு வந்த போது, தெரிந்த ஒருவர், இந்த உணவுப் பொதியினை...

காரைநகர் கடலில் 17 இந்திய மீனவர்கள் கைது

காரைநகர் கடல்பிரதேசத்தில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 17 பேரை, 3 விசைப்படகுடன் காங்கேசன்துறைக் கடற்படையினர் புதன்கிழமை (21) இரவு கைதுசெய்துள்ளதாக, கடற்படை ஊடகப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்தார். கைதான மீனவர்கள் அனைவரும் புதுக்கோட்டை மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியினைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்தார். கைதான மீனவர்கள் விசாரணையின் பின் கடற்றொழில்...

கிழக்கு ‘எழுக தமிழ்!’ பேரணிக்கு ஒத்துழைப்பு தாரீர்!!

தமிழ் மக்கள் பேரவையின் ஊடக அறிக்கை - 2016-12-20 அவசர வேண்டுகோள்: பிரிக்கப்படாத தமிழ் தேசத்துக்கான அங்கீகாரத்தை வலியுறுத்தும் கிழக்கு 'எழுக தமிழ்!' பேரணிக்கு ஒத்துழைப்பு தாரீர்!! அன்புடையீர்: தமிழ் தேசத்தின் ஏகோபித்த அரசியல் அபிலாசையினைப் பிரதிபலித்த முதலாவது 'எழுக தமிழ்!' அரசியற் பேரணி, கடந்த செப்ரெம்பர் 24ஆம் திகதி வடக்கில் – யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமாக...

யாழ் வருகின்றார் ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டாவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்துக்காக எதிர்வரும் 4 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அன்றைய தினம் வலி.வடக்கில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதியாகப் பதவியேற்றிருந்தார். பதவியேற்று இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாவதை...

மீனவர்கள் பிரச்னைக்கு பதிலளிக்க பிரதமர் ரணில் மறுப்பு

திருமலையில் சாமி தரிசனம் செய்ய சென்ற இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மீனவர்கள் பிரச்னை குறித்து பதிலளிக்க மறுத்துவிட்டார். இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க இந்தியா சென்றுள்ளார். இதற்காக நேற்று இலங்கையில் இருந்து, தனி விமானம் மூலம் இந்தியா புறப்பட்டு, ரேணிகுண்டா விமான நிலையம் சேர்ந்தார். அங்கிருந்து கார் மூலம் திருமலை...

ஸ்டெட்டின்ஸ் (STATINS) மாத்திரையை பாவிக்க வேண்டாம் என எச்சரிக்கை

ஸ்டெட்டின்ஸ் (STATINS) இருதயநோய் தடுப்பு மருந்துகளை தேவையில்லாத நிலையில் மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தி வருவதாகவும் இதனால் பக்க விளைவுகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. உலக முழுவதும் சுமார் 8 இலட்சம் மக்கள் குறித்த மருந்தை பயன்படுத்தி வருகின்றனர். இம் மருந்தானது 65 வயதிற்கு மேற்பட்டவர்களும், கடுமையான இருதய நோய்...

போகிமான் கோ (Pokemon Go) இப்போது இலங்கையில்

ஸ்மார்ட்போனில் வெற்றி பெற்ற விளையாட்டாக திகழ்ந்து வரும் “போகிமான் கோ” என்ற விளையாட்டு உத்தியோகப்பூர்வமாக இலங்கை மற்றும் தெற்காசிய நாடுகளுக்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது என வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் , பூட்டான் மற்றும் பங்களாதேஷில் உள்ள விளையாட்டாளர்கள் இந்த விளையாட்டை app ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என...
Loading posts...

All posts loaded

No more posts