கருணா குழுவுக்கு வழங்கப்பட்ட ஆயுதத்தில் சுடப்பட்டார் ரவிராஜ்; நீதிமன்றில் சாட்சியம்

யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் லக்ஷ்மன் ஆகியோரின் படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி கருணா குழுவினருக்கு வழங்கப்பட்டது என நீதிமன்றில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த ரி-56 ரக துப்பாக்கியானது இராணுவத்தின் மத்திய ஆயுதக் களஞ்சியத்தினூடாக இராணுவ புலனாய்வு படையணிக்கு வழங்கப்பட்டு அங்கிருந்து பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் மூன்றாம் இராணுவப் புலனாய்வு...

ஒன்றிணைந்த பொலிஸ், சிவில் பாதுகாப்பு குழு விரைவில்

வட மாகாணத்தில், சட்டமும் ஒழுங்கும் பேணப்படுவதற்கான சூழலை ஏற்படுத்துவதனை நோக்கமாக கொண்டு ஒன்றிணைந்த பொலிஸ் - சிவில் பாதுகாப்புகுழுவினை விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் வரவு - செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வட மாகாணத்தில், சட்டமும் ஒழுங்கும் பேணப்படுவதற்கான சூழலை...
Ad Widget

வடக்கில் மகளிருக்கு நிதி இல்லை

மகளிர் விவகாரத் துறைக்கு, 2016ஆம் ஆண்டு, 10 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்ட போதும், 2017ஆம் ஆண்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் வரவு - செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், "மிகவும் முக்கியமான துறைகளில் ஒன்றாகக்...

வெள்ளை சீனியின் வரி அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனிக்கான விசேட வியாபாரப் பண்ட வரியானது 7 ரூபாவிலிருந்து 13 ரூபாய் வரையிலும் 6 ரூபாவினால் அதிகாரிக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சு அறிவித்துள்ளது எனினும், சீனியின் சில்லறை விலையில் எவ்விதமான மாற்றங்களும் ஏற்படுத்தப்படமாட்டாது என்றும் அவ்வமைச்சு அறிவித்துள்ளது.

பொது மக்களுடனான கலந்துரையாடலுக்கான அழைப்பு

சுதந்திரமான தனித்துவம் மற்றும் பலதரப்பட்ட அதியுயர் நன்னெறி தரங்களை கொண்ட தொழில் நிபுணத்துவமும் பொறுப்புணர்வும் அமைந்த பலதரப்பட்ட பரந்த அடிப்படையிலான தகவல்கள் மற்றும் யோசனைகளை மக்களுக்கு தெரிவிக்கும் பொறுப்புவாய்ந்தவை ஊடகங்களாகும். பொதுமக்களுக்கான ஒன்றுகூடலில் சிறந்த ஜனநாயக அடிப்படையிலான கருத்துக்களை கலந்துரையாடுதல், இலங்கையில் ஜனநாயகத்தை கட்டியெழுப்பி பேணிப் பாதுகாப்பதற்கான செய்முறையாகும். இதற்கென அரசாங்கம் பயன்தரக்கூடிய செய்தி ஊடக...

போதை பொருள் கடத்தலின் பிரதான மார்க்கம் காங்கேசன்துறை!

வடமாகாணத்தில் கேரள கஞ்சா கடத்தல் நடவடிக்கையானது அதிகளவாக இடம்பெறுகின்ற பகுதியாக காங்கேசன்துறை பகுதியே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது என யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சன்ஞீவ தர்மரட்ண தெரிவித்துள்ளார். இன்று (புதன்கிழமை) காலை காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையங்களில் அதிகமான போதைப்பொருள் கடத்தல் முறியடிப்புக்களை மேற்கொண்ட பொலிஸாருக்கும் அதிகளவான குற்றங்களை கட்டுபடுத்த உதவிய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும்...

செங்கோலை தூக்க சிவாஜிலிங்கம் முயற்சி

வடமாகாண சபையின் அமர்வுகள் கடும் கூச்சல் குழப்பத்தின் மத்தியில் 1 மணித்தியாலம் ஒத்திவைக்கப்பட்டது. வடமாகாண சபையின் வரவு -செலவுத் திட்டம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் செவ்வாய்க்கிழமை (20) முன்வைக்கப்பட்டு, அது தொடர்பிலான தற்போது விவாதம் இன்று புதன்கிழமை இடம்பெறுகின்றது. வடமாகாண உறுப்பினர் கே.சயந்தன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உரைகளை விமர்சித்து உரையாற்றினார். இதற்கு ஆளும்கட்சி உறுப்பினர்கள்...

மாணவி ஒருவர் தீ மூட்டி தற்கொலை

கிளிநொச்சி கனகாம்பிகைகுளம் பகுதியில் 17 வயது மாணவி ஒருவா் இன்று அதிகாலை தீ மூட்டி தற்கொலை செய்துள்ளாா். இச் சம்பவம் இன்று அதிகாலை மூன்று முப்பதுக்கும் நான்கு மணிக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது என உறவினா்கள் தெரிவிக்கின்றனா். தனக்குதானே தீ மூட்டியுள்ளதாகவும், சம்பவ இடத்திலேயே மாணவி உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கனகாம்பிகைகுளத்தைச் சோ்ந்த கிருஸ்ணகுமாா் வானுஜா வயது 17...

குடும்ப பெண் கொலை! சந்தேகநபர் கைது

வடமராட்சி பொற்பதி பகுதியில் நேற்று முன்தினம் குடும்பப்பெண்னை வெட்டிக்கொலை செய்து கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகநபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரே குறித்த பெண்ணைக் கொலை செய்தவர் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த பெண் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடிக்கும் நோக்கிலே பெண்ணைக் கொலை செய்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது....

விபத்துக்குள்ளான இளைஞன், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மதுபோதையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச்சென்று, விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்த இளைஞன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளதாக, மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். சுதுமலை தெற்கு, மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த விமலேஸ்வரன் சுரேஸ் (வயது 19) என்ற இளைஞனே, இவ்வாறு சிகிச்சை பலனின்றி உயிரிந்துள்ளார். குறித்த இளைஞன். கடந்த ஞாயிற்றுக்கிழமை, தனது நண்பர்களுடன் மது...

சங்கத்தானை விபத்து: இ.போ.ச பஸ் சாரதிக்கு பிணை

சங்கத்தானை பகுதியில், கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் கைதாகி, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, இ.போ.ச பஸ் சாரதியை, 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சரீரப்பிணையில் செல்ல, சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் செ.கணபதிபிள்ளை, நேற்று அனுமதி வழங்கினார். மேலும், இந்த விபத்துடன் தொடர்புடைய வழக்கை, எதிர்வரும் ஜனவரி மாதம் 19ஆம் திகதி வரை, நீதவான்...

தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்: அபராதம் செலுத்த மாற்று வழி

மோட்டார் வாகனங்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை செலுத்த அசௌகரியங்களை எதிர்நோக்கும் மக்களுக்காக அனைத்து மாவட்ட அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களிலும் விஷேட கவுண்டர் ஒன்றை நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ளது. தபால் ஊழியர்கள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்ட நடவடிக்கைகள் காரணமாக, அபராதம் செலுத்த வாகன சாரதிகள் சிரமப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. இதன் பொருட்டு, அனைத்து மாவட்ட அலுவலகங்கள் மற்றும் பிரதேச...

முடிவுக்கு வந்தது இந்த ஆண்டின் Startup Weekend

#Techstar அமைப்பின் வணிக புத்தாக்குனர்களுக்கான Startup Weekend நிகழ்வு இலங்கையில் முதன் முதலாக யாழ்ப்பாணத்தில் கடந்த 2016 ஜூன் 24ம் திகதி மாலை 5.30 தெடாக்கம் 26ம் திகதி இரவு 9 மணிவரை யாழ் ரில்கோ விடுதியில் Startup Weekend Jaffna ஆக நடாத்தப்பட்டது. இலங்கைக்கான சர்வதேச தொழில்நுட்ப நிகழ்வு ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது இதுவே...

யாழில் புதிய அரசியல் கட்சி ஒன்று உருவாகின்றது!!

கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய ஆலய முன்றலில் எதிர்வரும் 26ஆம் திகதி பிற்பகல் 05.30 மணியளவில் அனைத்துலக எம்.ஜி.ஆர் பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்.ஜி ஆரின் நினைவு நாள் இறுதி நிகழ்வு இடம்பெறவுள்ளது. இதன்போது அவரது நினைவாக 'தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி' எனும் பெயரில் புதிய கட்சி உத்தியோகபூர்வமாக...

வடக்கு மக்களுக்கான நவீன சத்திரசிகிச்சை பிரிவிற்கு சில வைத்தியர்கள் எதிர்ப்பு

வெளிநாடுகளில் நிதி உதவியுடன் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவுள்ள அதிநவீன சத்திரசிகிச்சை கூடத்திற்கு யாழ்ப்பாணத்திலுள்ள சில வைத்திய நிபுணர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இதனால் யாழ்ப்பாணம் உட்பட வடக்கு மாகாணத்திற்கு கிடைக்கவுள்ள மிகச் சிறந்த வைத்திய கூடம் திரும்பிச்செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. குறித்த வைத்தியசாலை யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படுமாக இருந்தால், தனியார் வைத்தியசாலைகளின் வருமானம் இழக்கப்படும் என்று கருதியே யாழ்ப்பாணத்தின்...

1200 சீ.சீ. மோட்டார் சைக்கிள் மீட்பு

அதிக வேகம் கொண்ட 1200 சி.சி.இன்ஜின் சக்தியுடைய மோட்டார் சைக்கிள் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். கடந்த ஆட்சிக் காலத்தில் செல்வாக்குள்ள ஒருவரின் புதல்வரின் உதவியுடன் வெளிநாட்டிலிருந்து விசேடமாக இறக்குமதி செய்யப்பட்ட ஒன்று என ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. கொழும்பு வாழைத்தோட்ட பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இதனை பொலிஸார் மீட்டுள்ளனர். பாதால உலக...

நிரந்தர கப்பல் போக்குவரத்தை நான் கோரவில்லை ; ரெஜினோல்ட் குரே

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிரந்தர கப்பல் போக்குவரத்து அவசியமென்று ஒருபோதும் நான் தெரிவிக்கவில்லை. தென்னிந்தியாவில் நடைபெறும் திருவாதிரை நிகவுக்கு ஒரு படகை ஏற்பாடு செய்துதருமாறே நான் அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்தேன் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.எனது கோரிக்கைக்கு இன்னும் அரசாங்கம் பதில் தெரிவிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். இலங்கை இந்தியா ஆகிய நாடுகளுக்கு...

யாழ் பல்கலைகழக கிளிநொச்சி தொழிநுட்ப பீடம் கற்கைகள் ஆரம்பம்

யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகமான தொழிநுட்ப பீடத்தின் கற்கை நெறிகள் நேற்று 20-12-2016 ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி அறிவியல்நகாில் அமைந்துள்ள யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் ஏற்கனவே விவசாய பீடம் மற்றும் பொறியியல் பீடம் என்பன இயங்கி வருகின்ற நிலையில் தற்போது தொழிநுட்ப பீடமும் இயங்க ஆரம்பித்துள்ளது. நாடாளவிய ரீதியில் 23 மாவட்டங்களில் இருந்து 211 மாணவா்கள்...

வயோதிப பெண் கழுத்து வெட்டி படுகொலை

வடமராட்சி குடத்தனை பகுதியை சேர்ந்த வயோதிப பெண் ஒருவர் திங்கட்கிழமை நள்ளிரவு கழுத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டு உள்ளார். குடத்தனை பொற்பதி பகுதியை சேர்ந்த தங்கவேலாயுதம் பரமேஸ்வரி (வயது 65) எனும் வயோதிப பெண்ணே படுகொலை செய்யப்பட்டு உள்ளார். குறித்த வயோதிப பெண்ணின் பிள்ளைகள் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் குடத்தனையில் உள்ள தனது வீட்டில்...

அமெரிக்காவுடன் இணையும் யாழ்ப்பாணம்!

இலங்கையின் வடக்கு மாகாணத்தின் தலைநகர் யாழ்ப்பாணம் அமெரிக்காவின் மிக்சிக்கன் மாகாணத்திலுள்ள ஸ்ரேலிங் ஹைற்ஸ் (Sterling Heights) எனும் நகரத்துடன் சகோதர நகரமாக இணைந்துகொள்ளவுள்ளது. இம்முடிவு அண்மையில் எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தைத் தனது இரட்டை நகர் அல்லது நட்பு நகராக, Sterling Heights என்ற நகரம் தெரிவு செய்வதற்கு, அந்த நகரத்தில் வாழும் சுப்பிரமணியம் மணிவண்ணன் என்பவர் உழைத்திருக்கிறார்....
Loading posts...

All posts loaded

No more posts