Ad Widget

யாழில் புதிய அரசியல் கட்சி ஒன்று உருவாகின்றது!!

கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய ஆலய முன்றலில் எதிர்வரும் 26ஆம் திகதி பிற்பகல் 05.30 மணியளவில் அனைத்துலக எம்.ஜி.ஆர் பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்.ஜி ஆரின் நினைவு நாள் இறுதி நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இதன்போது அவரது நினைவாக ‘தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி’ எனும் பெயரில் புதிய கட்சி உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளதாக அனைத்துலக எம்.ஜி.ஆர் பேரவையின் தலைவர் பொன்மதிமுகராஜா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (20) பிற்பகல் 01-30 மணி முதல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மதத் தலைவர்களினதும், ஆலயக் குருமார்களினதும் ஆசியுடன் எமது கட்சி ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் போது கட்சியின் தலைவர், செயலாளர் உட்படக் கட்சியின் சகல அங்கத்தவர்களுக்குமான தெரிவு இடம்பெறவுள்ளது.

நல்லாட்சி அரசாங்கம் எமது மக்களுக்கு நன்மை செய்யும் என எதிர்பார்த்த போதும் தமிழர்கள் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. 2016 ஆம் ஆண்டுக்குள் தமிழ்மக்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுத் தருவோம் என மார்தட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களும் இன்று மெளனித்துக் கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறான காலகட்டத்தில் எமது மக்களை வழிநடாத்தப் புதிய தலைமையொன்று தேவை. நாம் எமது மக்களுக்கான அரசியல் தீர்வையும், ஏனைய உரிமைகளையும் தார்மீக வழியில் நின்று பெற்றுக் கொள்ளத் தீர்மானித்துள்ளோம். தமிழகத்தின் தற்போதைய முதலமைச்சர் ஓ.பன்னீர்ச் செல்வம், சசிகலா உள்ளிட்டோரைச் சந்தித்துத் தமிழர்களது தற்போதைய நிலைப்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தவுள்ளோம் என்றார்.

Related Posts