- Monday
- August 17th, 2026
பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்றுகுவித்த இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அழைப்பிற்கிணங்க தென்னிந்திய இசையமைப்பாளர் இளையராஜா யாழ்பாணத்திற்கு வருகை தரவுள்ளார் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன. இவரினை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு, மகிந்த ராஜபக்ஷவின் விசுவாசியும், ஏசியன் ரிபியூன் இணையத்தள செய்தி ஆசிரியருமான கே.பி.ராஜசிங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில், சிங்கள அரச தொலைத்தொடர்பு சேவையின் ஏற்பாட்டில்...
வடக்கு மாகாணத்தில் முக்கிய அமைச்சாக விளங்கும் புனர்வாழ்வு அமைச்சிற்கு 2017 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கப்படவில்லையென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் முதலமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து சிறிய தொகையொன்றை ஒதுக்கி இத்துறையில் முக்கியமாக முன்னெடுக்கப்படவேண்டிய பணிகளில் ஒன்றான முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட 538 பேருக்கு இருக்கை மலசல கூடம் அமைத்துக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....
யாழில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காவல் நிலைய கட்டடம் ஒன்று அனுமதி பெறப்படாமல் சட்டவிரோதமாக கட்டப்பட்டு உள்ளதாக வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். யாழில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட காவல் நிலையத்தில் காவல்துறையினர் தங்குவதற்கு கட்டப்பட்ட விடுதி தொகுதி உள்ளூராட்சி சபையின் அனுமதி பெறப்படாமல் கட்டப்பட்டுள்ளது. இவ்வாறாக வடக்கில் அவர்கள் தாம் நினைக்கும் இடத்தில், நினைத்தவாறு சட்டத்திற்கு...
யால தேசிய வனாந்தரத்தில், மிருகங்களை பார்வையிடுவதற்கு சென்றிருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அடங்கிய இரண்டு ஜோடியினரின் வெளிநாட்டு நோட்டுக்கள் மற்றும் கெமராக்கள் அடங்கிய பொதியை கெமுனு என்ற யானை விழுங்கிவிட்டதாக வனஜீவராசிகள் திணைக்களத்திடம் முறையிடப்பட்டுள்ளது. ஜேர்மன் நாட்டு சுற்றுலாப்பயணிகள் இருவர், தங்களுடைய இரண்டு மனைவிகளுடன் சபாரி ஜீப் வண்டியில், யால பட்டநங்கல எனுமிடத்துக்கு சென்றுள்ளனர். அப்போது,...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்க சிறுநீரக நோய்களுக்கான விசேட வைத்திய நிபுணர்களின் சர்வதேச அமைப்பினால் விசேட சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் சிறுநீரக நோயை கட்டுப்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட சேவை நடவடிக்கைகளை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு காலி முகத்திடல் ஹோல்பேஸ் ஹோட்டலில் விசேட மருத்துவர்களின் சர்வதேச கூட்டமைப்பு நேற்று ஏற்பாடு செய்த...
வறட்சியான காலநிலை நிலவினாலும், மின்சார துண்டிப்பு இடம்பெற மாட்டாதென மின்சக்த்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பாலப்பிட்டிய தெரிவித்துள்ளார். கடந்த பத்து வருடங்களில் இவ்வாண்டிலேயே மிகக் குறைவாக பருவப்பெயர்ச்சி மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். நாளாந்தம் 50 மொகா வாட்ஸ் மின்சாரத்தை சேமிப்பதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அமைச்சா...
2017ம் ஆண்டு ஜனவரி 26ம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி உயிரிழக்கலாம் என, எழுந்த அனுமானத்தின் பின்னணியில் கொலைச் சதித் திட்டம் செயற்படுத்தப்படுவதாகவே, தெரிகிறது என, பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் சட்டத்தரணி நிமல் போபகே தெரிவித்துள்ளார். எனவே ஜனாதிபதிக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தான் ஏற்றுக் கொள்வதாகவும், இது பற்றி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு...
வரிவிலக்கு அனுமதி பத்திர திட்டத்தை தவறான பயன்படுத்தியமை குறித்து அரசாங்கம் மற்றும் எதிர்கட்சியிலுள்ள 85 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விசாரணை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நம்பகமானதும் சுயாதீனமானதுமான விசாரணை நடத்துமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வரிவிலக்கு...
சில ஆசிரியர்கள் பத்து வருடங்களாக பின்தங்கிய பிரதேசங்களில் பணியாற்றுகின்றனர். சில ஆசிரியர்கள் கஷ்ட பிரதேசங்களில் ஒரு நாள் மட்டும் வேலை செய்து விட்டு இடமாற்றம் பெற்று செல்கின்றனர். என இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசெப் ஸ்டாலின் தெரிவித்தார். இன்றய தினம் ஆனைப்பந்தியில் உள்ள தனியார் கல்வி நிலையத்தில் நடைபெற்ற வடக்கு மாகாண ஆசிரியர் சங்க...
இலங்கையில் வளி மாசடைவால் ஆண்டுதோறும் 7800 பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அரைவாசிப்பேர் வீட்டினுள் ஏற்படும் வளி மாசடைவதினால் உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் வளி மாசடைதலும் அதிகரித்துள்ளது. கொழும்பை விட கண்டியில் வளி அதிகளவில் மாசடைந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விறகுகளைப் பயன்படுத்தி சமைப்பதால் வீட்டினுள் வளி மாசடைந்து வருகின்றது. அத்துடன், வீட்டில் பயன்படுத்தும் சாம்பிராணி...
வடமராட்சி தும்பளைப் பகுதியில், சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலையடுத்து, அண்ணனின் கத்திக்குத்துக்கு இலக்காகி, தம்பி பலியாகியுள்ளார். திங்கட்கிழமை (19) இரவு 8 மணியளவில் இடம்பெற்ற இந்தக் சம்பவத்தில், அதே பகுதியினைச் சேர்ந்த சிவகுமார் சுவர்ணன் (வயது 20) என்பவரே பலியானதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
நெடுந்தீவின் வடமேற்கு பகுதியில், இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபட்ட 7 இந்திய மீனவர்கள், இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட மீனவர்களிடமிருந்து 2 டோலர் படகுகள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகள், மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாண கடற்றொழில் உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் மேலும் கூறியுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், வன்னி மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான விசேட பணிப்பாளராக, முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கணேசன் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதம், ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அபயகோனினால், இன்று (20) காலை வழங்கப்பட்டது.
இளவாலை பகுதியில் பற்றை ஒன்றுக்குள் இருந்து அழுகிய நிலையில் சடலம் ஒன்றை இளவாலை பொலிஸார் மீட்டுள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்த சுதுகல தேவகே குணசேன என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த பற்றைக்குள் அழுகிய நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதை அவதானித்த பொதுமக்கள் இளவாலை பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு...
வடமாகாண சபையில் பேசப்படுகிற சிக்கலான விடயங்கள் குறித்து மாகாண ஆளுநருடன் பேச உள்ளதாக அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞான
ம் சபைக்கு கூறியிருக்கும் நிலையி
ல் அந்த உரிமை அவை தலைவருக்கு உண்டா? என உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். எவ்வாறாயினும் அவை தலைவருக்கு அந்த அதிகாரம் உண்டு என முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் கூறியுள்ளார்.
வடமாகாண சபையின் 70ம் அமர்வு தற்போது...
ஜனவரி 8ஆம் திகதி கொழும்பில் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன் எம்.பி. தலைமையில் நடைபெறும் புதிய அரசியலமைப்பு தொடர்பிலான விசேட கூட்டத்தில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் தலைவர் இரா.சம்பந்தன் பணிப்புரை விடுத்துள்ளார். புதிய அரசமைப்பு குறித்தும், உபகுழுக்களின் அறிக்கை மீதான மூன்று நாட்கள் விவாதம் பற்றியும் இதன்போது விசேடமாகவும் - விரிவாகவும் ஆராயப்படவுள்ளன....
குருர் ப்ரம்மா……………. எனதினிய இணைத்தலைவர் டாக்டர் இலக்ஷ்மன் அவர்களே, சமயப் பெரியார்களே, எம்மோடு இணைந்திருக்கும் உறுப்பின சகோதர சகோதரிகளே, எல்லோருக்கும் வணக்கம். பல பிரச்சனைகள் மத்தியிலும் எமது பேரவையின் ஓராண்டுப் பூர்த்திப் பெருங்கூட்டத்தில் கலந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். இன்று கொழும்பில் இருப்பதாகவே இருந்தது. சென்றைய வார வடமாகாண சபைக் கூட்டத்தை இன்றைய வாரம்...
கம்பளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 100 அரச உத்தியோகத்தர்களுக்கு 12 நாட்கள் இரண்டாம் மொழியான தமிழ்மொழி பயிற்சிநெறி ஒன்றினை தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் நடாத்தியது. அரச ஊழியர்களிடையே தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் நடாத்தபட்ட இந்த பாடநெறியின் இருதி நாள் ஒரு தமிழ் காலாச்சார நிகழ்வாக கம்பளை பிரதேச செயலகத்தின் பிரதான...
க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இப்பரீட்சையின், தொழில்நுட்பப் பாடத்துக்கான செயற்முறைப் பரீட்சையின் நடவடிக்கைகளுக்கு அதிக காலம் எடுக்க வேண்டியுள்ளமையே பெறுபேறு தாமதமாக காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இம்முறை க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு...
கிளிநொச்சியில் மூளைக்காச்சல் காரணமாக ஐந்து வயது குழந்தை ஒன்று மரணமாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று முன்தினம் 18-12-2016 மாலை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பாரதிபுரத்தைச்சோ்ந்த விஜயராஜ் விஸ்னுஜன் என்ற குழந்தையே மூளைக்காச்சல் காரணமாக இறந்துள்ளது.சில நாட்களாக காச்சலும் வாந்தியும் காணப்பட்டதாகவும் பின்னா் கடந்த ஞாயிற்று கிழமை மாலை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட...
Loading posts...
All posts loaded
No more posts
