Ad Widget

வளி மாசடைவதால் வருடமொன்றில் இலங்கையில் 7800 பேர் மரணம்!

இலங்கையில் வளி மாசடைவால் ஆண்டுதோறும் 7800 பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அரைவாசிப்பேர் வீட்டினுள் ஏற்படும் வளி மாசடைவதினால் உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் வளி மாசடைதலும் அதிகரித்துள்ளது. கொழும்பை விட கண்டியில் வளி அதிகளவில் மாசடைந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விறகுகளைப் பயன்படுத்தி சமைப்பதால் வீட்டினுள் வளி மாசடைந்து வருகின்றது. அத்துடன், வீட்டில் பயன்படுத்தும் சாம்பிராணி மற்றும் நுளம்புத் திரிகளினாலும் வீட்டினுள் அதிகளவில் வளி மாசடைந்துவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருடந்தோறும் வளி மாசடைவதினால் 8 மில்லியன்பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

அதேநேரம், 4.3 மில்லியன்பேர் வீட்டினுள் வளி மாசடைவதாலே உயிரிழக்கின்றனர் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Related Posts