Ad Widget

சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் விசாரிக்கப்பட வேண்டும்

வரிவிலக்கு அனுமதி பத்திர திட்டத்தை தவறான பயன்படுத்தியமை குறித்து அரசாங்கம் மற்றும் எதிர்கட்சியிலுள்ள 85 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விசாரணை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நம்பகமானதும் சுயாதீனமானதுமான விசாரணை நடத்துமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வரிவிலக்கு அனுமதிப் பத்திரங்களை விற்பனை செய்தல் மற்றும் அரச வருவாயை மோசடி செய்தல் ஆகியன ஊழல் சட்டம் பிரிவு 70 இன் கீழ் ஊழல் குற்றங்களாக வரையறை செய்யப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் கூறியுள்ளார்.

இராஜவரோதயம் சம்பந்தன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சதாசிவம் வியாழேந்திரன், சோமசுந்திரம் சேனாதிராஜா, சிவஞானம் சிறீதரன், எஸ்.சிவமோகன், ஞானமுத்து சிறிநேசன், செல்வம் அடைக்கலநாதன் ஆகிய தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களும் வரி ஏய்ப்பு செய்தமை தொடர்பில் விசாரிக்கப்பட வேண்டும் என மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

விஜயகலா மகேஸ்வரன், டி.எம்.சுவாமிநாதன் போன்ற ஏனைய ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் 91 ஆவது பிரதிவாதியாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க 92 ஆவது பிரதிவாதியாகவும் மனுதாரரால் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts