‘எனது மணிக்கட்டு முறிந்தது’

“எனக்கு அடித்தார்கள். இரண்டாவது முறை அடித்த போது கையால் தடுத்தேன். மூன்றாவது முறை தாக்கப்பட்ட போது எனது இடது கையினால் தடுத்தேன். அதனால் எனது மணிக்கட்டு முறிந்தது. அவ்வாறு தடுத்தபடியால் தான் நான் உயிர்பெற்றிருக்கிறேன் என நினைக்கிறேன். நெப்போலியனின் அடியாட்களினால் நாம் தாக்கப்பட்டோம். அப்போது நெப்போலியனின் மாவை சேனாதிராஜாவை தாக்குங்கள் என்ற குரல் கேட்டது. என்...

கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிப்பு

கல்வியியல் கல்லூரிகளில் கற்கும் மாணவர்களுக்கான கொடுப்பனவுகள் அடுத்த வருடம் முதல் அதிகரிக்கப்படவிருக்கின்றன. கல்வியியல் கல்லூரிகளுக்கான பிரதம ஆணையாளர் கே.எம்.எச்.பண்டார இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்டிபாக அவர் மேலும் தெரிவிக்கையில, மூவாயிரத்து 500 ரூபா கொடுப்பனவு நான்காயிரம் ரூபா வரையும், நான்காயிரம் ரூபா கொடுப்பனவு ஐயாயிரம் ரூபா வரையும் அதிகரிக்கப்படவிருப்பமதாக தெரிவித்தார். இறுதி ஆண்டு மாணவர்களுக்கான கொடுப்பனவுகள்...
Ad Widget

உண்மையை கூறும் குழுமத்தின் அமர்வு யாழில்

இலங்கை சமாதான பேரவையின் அனுசரணையுடன் யுத்தத்தினால் நடளாவிய ரீதியில் பாதிப்புக்குள்ளானவர்கள் தொடர்பான கருத்துக்களை கேட்கும் உண்மையை கூறும் அமர்வொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இனங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மாவட்ட ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த அமர்வின், யாழ், மன்னார் மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கான அமர்வு நேற்று யாழ் மாவட்டத்தில் இடம்பெற்றது. ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற...

கருணா விளக்கமறியலில்

கைதுசெய்யப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், எதிர்வரும் 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மரநடுகை மாதத்தை முன்னிட்டு அன்பே சிவம் அமைப்பால் மரக்கன்றுகள் விநியோகம்

வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு அன்பே சிவம் அமைப்பு மரக்கன்றுகளை வழங்கி வருகிறது. இதன் ஒரு கட்டமாக, செவ்வாய்க்கிழமை (29.11.2016) இளவாலை கன்னியர்மட மாகாவித்தியாலயத்தில் தென்னந் தோட்டம் ஒன்றை அமைப்பதற்காக 100 தென்னங்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. அன்பே சிவம் அமைப்பு சுவிற்சர்லாந்தில் சூரிச் சிவன் ஆலயத்தின் நிதியூட்டலில் இயங்கிவரும் ஒரு சமூகத் தொண்டு நிறுவனம் ஆகும்....

நெப்போலியன் என்னை வெட்டினார்: சிவாஜிலிங்கம் சாட்சியம்

கடந்த 2001ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்திற்கென ஊர்காவற்துறை நோக்கிச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியைச் சேர்ந்த நெப்போலியன் தலைமையிலான குழுவினரே தாக்குதல் நடத்தினர் என நீதிமன்றில் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது. யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் முன்னிலையில் நேற்று (திங்கட்கிழமை) குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

பாலியல் லஞ்சம் கோரும் அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை அவசியம்

நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிர்க்கதியாகியுள்ள 80 ஆயிரம் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு சமுக பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார். யுத்ததினால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் பாலியல் லஞ்சம் கோரும் அதிகாரிகளுக்கு எதிராக தனிப்பட்ட பொறிமுறை மூலம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்...

தலைவர் பிரபாகரனை நினைவுகூரலாம்! யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளையும் நினைவுகூர்வது தார்மீகக் கடமை

சிறீலங்காவில் இரண்டுமுறை கிளர்ச்சியை ஏற்படுத்திய மக்கள் விடுதலை முன்னணியின் முதலாவது தலைவர் றோகண விஜயவீரவை நினைவுகூர முடியுமாயின் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிர் நீத்த தினத்தையும் அனுட்டிக்கமுடியும் எனவும் அதில் எந்தவிதத் தவறுமில்லையெனவும் மகிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அதேவேளை யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளையும் நினைவுகூர்வது தார்மீகக்...

14 இராணுவத்தினரின் பிணை மனுக்கள்: ஜனவரியில் விசாரிக்கப்படும்

“யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் காணாமற்போவதற்கு காரணமாகிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 14 இராணுவத்தினரின் பிணை மனு தொடர்பான விசாரணை, எதிர்வரும் ஜனவரி மாதம் 16 ஆம் திகதி நடைபெறும்” என யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், நேற்றுத் திங்கட்கிழமை (28) உத்தரவிட்டார். யாழ்ப்பாணம், அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள்,...

அன்று விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் எனத் தெரியாத மனோவிற்கு இன்று பயங்கரவாதிகள் எனத் தெரிகின்றதா?

“கட்சியின் சின்னமான ஏணியில் ஏறி, யானையில் அமர்ந்துள்ளீர்கள். இன்று, ஏறி வந்த ஏணியைத் தட்டி விழுத்துகின்றீர்கள் என்பதே மிகக் கவலையான விடயம். அந்த ஏணியாக, வடக்கு - கிழக்கு மக்களும் இருந்தார்கள். மலையக மக்களையும் தயவு செய்து புறக்கணிக்க வேண்டாம்” என, தேசிய சகவாழ்வு மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசனிடம், வடமாகாண சபை...

சிறையிலிருக்கும் கணவருக்கு கஞ்சா கொண்டு செல்ல முற்பட்ட பெண் கைது

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள கணவருக்கு, பிஸ்கட் பையினுள் வைத்து கஞ்சா கடத்த முற்பட்ட பெண்ணைக் குழந்தையுடன் கையும் மெய்யுமாகப் பிடித்த சிறைச்சாலை அதிகாரிகள் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். குற்றச்செயல் ஒன்றுடன் தொடர்புபட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள தனது கணவரைப் பார்ப்பதற்கு மேற்படி பெண், நேற்றுத் திங்கட்கிழமை (28) மதியம் உணவு தயார் செய்துகொண்டு சென்றுள்ளார். இதன்போது, 38...

மாவீரர் தினம் அனுஷ்டிப்புக்கான அனுமதி வரவேற்கத்தக்கது

மாவீரர் தினம் அனுஷ்டிப்பு அனுமதிக்கப்பட்டிருப்பது, உளவியல் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் வரவேற்கத்தக்கது என யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியல் மருத்துவ நிபுணர் பேராசிரியர் தயா சோமசுந்தரம் தெரிவித்தார். விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களாக இருந்து உயிரிழந்தவர்களை, அவர்களுடைய குடும்ப உறவினர்கள் மாவீரர் தினத்தில் பொது இடங்களில் ஒன்று கூடி, நினைவு கூருவதற்கு கடந்த எட்டு வருடங்களாக...

கச்சத்தீவு திருவிழாவில் தமிழர்கள் பங்கேற்க வழி செய்ய வேண்டும்!

கச்சத்தீவில் உள்ள அந்தோனியார் ஆலயம் புனரமைக்கப்பட்டு நடைபெறவுள்ள திருவிழாவில், தமிழர்கள் பங்கேற்க வழி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயகுமார் உறுதியளித்துள்ளார். தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமாரை மீனவ பிரதிநிதிகள், சென்னை தலைமைச்...

விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) கைது

முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு தொடர்பில் இன்று வாக்குமூலம் அளிக்கச் சென்ற இவர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினராக இருந்த கருணா அம்மான், பின்னர் அந்த இயக்கத்தில்...

கிளிநொச்சி விபத்தில் 14 பேர் படுகாயம்!

கிளிநொச்சி அறிவியல் நகர்ப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 14 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்றை தனியார்பஸ் ஒன்று முந்திச் செல்ல முற்பட்ட வேளையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.குறித்த விபத்தில் தனியார் மினிபஸ்சில் பயணித்த 14 பேர் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதில்...

காஸ்ட்ரோவின் மறைவுக்கு இரா. சம்பந்தன் இரங்கல்

பிடெல் காஸ்ட்ரோ அவர்களின் மறைவிற்கு இரா. சம்பந்தனால் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி “எதிர்காலத்திற்கும் கடந்த காலத்திற்குமிடையிலான மரணம் வரையிலான போராட்டமே புரட்சியாகும்” பிடெல் காஸ்ட்ரோ தங்களது மாபெரும் தலைவரை இழந்து நிற்கும் கியூபாவின் மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். தனது கொள்கைகள் மற்றும் நம்பிக்கைகளில் உறுதியாக நின்ற பிடல் காஸ்ட்ரோ 50 வருடங்களுக்கும் மேலாக...

பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு கொலை மிரட்டல் விடுத்ததை சந்தேகநபர்கள் ஏற்றுக்கொண்டனர்

மாணவி கொலை வழக்கில் தம்மை கைது செய்த பொலிஸ் உத்தியோகஸ்தரை கொலை செய்வோம் என தாம் மிரட்டியதனை சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஏற்றுக்கொண்டு உள்ளனர். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு நேற்றய தினம் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் பதில் நீதிவான் சரோஜினி இளங்கோவன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதேவேளை, குறித்த வழக்கில் சந்தேகநபர்களை கைது செய்த, தமிழ்...

ரயில்வே சங்கமும் டிசம்பர் 01 வேலைநிறுத்தம்?

நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே சங்கமும் எதிர்வரும் 01 ஆம் திகதி நள்ளிரவு முதல் 24 மணி நேர பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது. ரயில்வே திணைக்களத்துக்குச் சொந்தமான காணியை தனியாருக்கு வழங்க காணி வங்கியொன்று அமைத்தல், முறையற்ற முறையில் ரயில்வே துறையில் நியமனம் வழங்கல், ரயில்வே திணைக்களத்துக்கு அதிகாரியொருவரை நியமிக்கும் அரசாங்கத்தின் திட்டம்...

யாழ்.பல்கலைக்கழக ஊழியர்களின் போராட்டம் இடை நிறுத்தம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர்கள் முன்னெடுத்த வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த இந்த போராட்டம் ஊழியர்களுக்கு இடையே இருந்த சம்பள முரண்பாடுகள் மற்றும் பரீட்சை கொடுப்பனவில் பாரபட்சம் மற்றும் பல கோரிக்கைகளை முன்வைத்து மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், தங்களது தவறுகளை ஏற்றுக்கொண்டு தவறுகளை திருத்தி செயற்படுத்த இரு மாத கால அவகாசம் கேட்டுள்ளதாக...

பருத்தித்துறையில் 50 கிலோ கஞ்சா மீட்பு : மூவர் கைது

பருத்தித்துறை பகுதியில் 87 இலட்சத்தி 50 ஆயிரம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டமை தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை கடற்பகுதியில் வைத்து, கஞ்சாவை கடத்துவந்ததாக சந்தேகிக்கப்படும் மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக காங்கேசன்துறைக்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மாசிங்க தெரிவித்துள்ளார்.

 பருத்தித்துறை கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த படகொன்றை கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து...
Loading posts...

All posts loaded

No more posts