வடமராட்சி குடத்தனை பகுதியை சேர்ந்த வயோதிப பெண் ஒருவர் திங்கட்கிழமை நள்ளிரவு கழுத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டு உள்ளார். குடத்தனை பொற்பதி பகுதியை சேர்ந்த தங்கவேலாயுதம் பரமேஸ்வரி (வயது 65) எனும் வயோதிப பெண்ணே படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.
குறித்த வயோதிப பெண்ணின் பிள்ளைகள் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் குடத்தனையில் உள்ள தனது வீட்டில் கணவனுடன் வசித்து வந்துள்ளார். அத்துடன் வீட்டுடன் சேர்ந்து சிறிய வர்த்தக நிலையம் ஒன்றினையும் நடாத்தி வந்துள்ளனர்.
அந்நிலையில் திங்கட்கிழமை நள்ளிரவு வீட்டுக்குள் புகுந்த இனம் தெரியாத நபர்கள் வயோதிப பெண்ணின் கழுத்தை வெட்டி படுகொலை செய்துள்ளனர். குறித்த படுகொலை சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.