தனியார் கல்வி நிலையத்துக்கான விளம்பர பதாதைகளை ஒட்டிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவர்கள் மீது, புதன்கிழமை இரவு வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், ஊரெழு பிள்ளையார் கோவிலுக்கு முன்னாள் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீதியில் வந்துக்கொண்டிருந்த இரண்டு மாணவர்கள் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள், வாள்வெட்டை மேற்கொண்டு விட்டுச் சென்றுள்ளனர்.
இதில் ஒரு மாணவன் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், இரண்டு மாணவர்களும் யாழ்.போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.