- Thursday
- November 20th, 2025
மீன்பிடித்துக் கொண்டிருந்தவரின் படகை கடற்படையின் டோறா மோதித் தள்ளியதில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். எழுவைதீவுக் கடலில் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை இந்தச் சம்வம் இடம்பெற்றது. இதில் எழுவைதீவு நான்காம் வட்டாரத்தைச் சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையான அன்ரனி யேசுதாசன் (வயது 60) என்பவரே உயிரிழந்தவராவார். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது- குறித்த மீனவர் கரையிலிருந்து...
ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடும் பொருட்டு தனக்கு இரண்டு பொலிஸாருடைய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா தெரிவித்தார். வடமாகாண சபையில் 2015ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் சமர்பிப்பு மற்றும் விவாதம் தொடர்பான அமர்வு கடந்த புதன்கிழமை (17) தொடக்கம் வெள்ளிக்கிழமை (19) வரையில் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண...
யாழ்ப்பாண தரைக்கீழ் நீர் மாசடைதலை தடுக்கும் விதத்தில் மனிதக்கழிவகற்றல் திட்டம் ஒன்று 2015 ஆம் ஆண்டு பங்குனி மாதமளவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சமூக அணிதிரட்டல் அலுவலர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார். யாழ்ப்பாண தரைக்கீழ் நீர் மாசடைதல் பிரச்சனைக்குத் தீர்வு தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் கருத்தரங்கு நேற்று காலை 10 மணியளவில் நல்லூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. அதில் கலந்து...
கடந்த ஐந்து வருடங்களாக வடக்கு ஆளுநர், பிரதம செயலர் சட்டவிரோதமாகவே பதவியில் இருந்துள்ளனர் முன்னால் நீதியரசரும் வடக்கு முதலமைச்சருமான விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மாகாண சபை அமைக்க முன்னரே வடக்கில் ஆளுநர் மற்றும் பிரதம செயலாளர் ஆகியோர் இருந்துள்ளனர். எனவே மாகாண சபை உருவாகிய பின்னர் அவர்களை மாற்றுமாறு கோருவதை ஏற்றுக் கொள்ள முடியாது என வடக்கு...
விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கல், நீர்வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் 19.12.2014 அன்று தனது அமைச்சின் நிதி ஒதுக்கீட்டைச் சமர்ப்பித்து ஆற்றிய உரை கௌரவ அவைத் தலைவர் அவர்களே, கௌரவ முதல்வர் அவர்களே, கௌரவ அமைச்சர்களே, கௌரவ உறுப்பினர்களே, மதிப்புக்குரிய செயலாளர்களே, திணைக்கள அதிகாரிகளே, உங்கள்...
நிதி இல்லை, ஆளணிப் பற்றாக்குறை என்று காரணம் கூறாமல் அர்ப்பணிப்புடன் நியதிச் சட்டங்களை துரிதமாக உருவாக்க வேண்டுமென வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார். நேற்று கைதடியிலுள்ள வடமாகாண சபையின் கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற வடமாகாண சபைக்கான 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் 2 ஆம் நாள் அமர்வின்போது...
அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கு இடையிலான மேசைப் பந்தாட்ட சுற்றுப் போட்டியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இன்றைய தினம் (19) மேற்படி போட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது. முன்பதாக யாழ்.மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 13 பாடசாலைகளுக்கு முதற்கட்டமாக மேசைப்பந்தாட்டத்துக்கான மேசைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அந்தந்த...
எமது விடிவுக்காக போராடிய முன்னாள் போராளிகளுக்கும், உயிர் நீத்தவர்களின் குடும்பங்களுக்கும் 2015ஆம் ஆண்டில் தனது அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் உதவிகள் செய்யப்படும் என வடமாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண சபையில் 2015ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் சமர்பிப்பு மற்றும் விவாதம் தொடர்பான அமர்வு கடந்த புதன்கிழமை (17) தொடக்கம்...
வடமாகாணத்தில் கடமையாற்றும் உதவி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு 3,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா தெரிவித்தார். வடமாகாண சபையில் 2015ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் சமர்பிப்பு மற்றும் விவாதம் தொடர்பான அமர்வு கடந்த புதன்கிழமை (17) தொடக்கம் வெள்ளிக்கிழமை (19) வரையில் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இடம்பெற்றது. இதன்போது,...
தமிழ் மக்கள் ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அந்தக் கட்சி ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில், ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் தமிழ் மக்களுக்கு எதிரான கட்டமைப்புசார் இன அழிப்புக் கொள்கையில் எந்த மாற்றமும் ஏற்படாது. ஆட்சி மாற்றம் என்ற போர்வையில் வெறும்...
தெல்லிப்ழை ஆதார வைத்தியசாலை நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து மக்களுக்கு பல்வேறுபட்ட சேவைகளை வழங்கிக் கொண்டிருப்பதால் வைத்தியர்கள், தாதியர்கள், மருந்தாளர்கள், மருத்துவ ஆய்வுகூட தொலில்நுட்பவியலாளர், சிற்றூழியர்கள் என பல்வேறுபட்ட ஆளணி பற்றாக்குறையை எதிர்நோக்குகின்றது. வடமாகாணத்திலேயே புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு, உளநலச் சிகிச்சைப் பிரிவு என்று இருபெரும் அலகுகளைக் கொண்டு இது காணப்படுவதால் எமது இந்த வைத்தியசாலையை பொது...
யாழ். வடமராட்சி முள்ளி பகுதியில் எரியூட்டப்பட்ட நிலையில் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் எலும்புக்கூடு வியாழக்கிழமை (18) மீட்கப்பட்டதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். அப்பகுதியில் புல் வெட்டிக்கொண்டிருந்த இராணுவத்தினர் வழங்கிய தகவலின் அடிப்படையில், அவ்விடத்துக்கு பருத்தித்துறை நீதவான் ஜே.கஜநிதிபாலனுடன் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். தேங்காய் பொச்சுமட்டைகளுக்குள் வைத்து எரியூட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட இந்த எலும்புக்கூடானது,...
வடமாகாண சபையின் 2015 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விசேட விவாதம் மூன்றாம் நாளாக இன்று கைதடியிலுள்ள மாகாண சபையின் கட்டடத்தொகுதியில் காலை 9 மணிக்கு ஆரம்பமானது. தற்போது வட மாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்து, கிராமிய அபிவிருத்தி, வர்த்தக வாணிபத்திற்கான நிதி ஒதுக்கீட்டுப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு அதற்கான விவாதங்கள் இடம்பெற்றுவருகின்றன. குறித்த துறைக்கு...
யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள புகையிரத கடவையில் புகையிரதம் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற கடுகதி புகையிரதத்தில் மோதியே இவர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படுவதற்கு இடமளியேன் என பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொது எதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனமான 100 நாட்களில் புதிய நாடு, கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவின் திறந்தவெளி அரங்கில் தற்போது வெளியிட்டு வைக்கப்பட்டது. விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்து உரையாற்றும் போது விஹாரமஹாதேவி பூங்காவில் மின்தடையும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது....
வட மாகாணத்தில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்காக நிதி ஆணைக்குழுவிடம் 149.95 மில்லியன் ரூபாவைக் கேட்டோம். ஆனால் வெறுமனே 27.2 மில்லியன் ரூபா மட்டுமே கிடைத்துள்ளது என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 2014 ஆம் ஆண்டை விட 2015 ஆம் ஆண்டு எங்களுக்கு சவால் மிகுந்த ஆண்டாக அமையப்போகின்றது. போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்துக்கு...
மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதில்லை என்பதும் நீதிமன்றத்தால் பிரிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைப்பதில்லை என்பதும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசின் தெளிவான கொள்கையாகும். ஆனால், இந்த விடயங்களில் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் நிலைப்பாடு என்ன என்று வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கேள்வியெழுப்பினார். பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர்...
வவுனியா மாவட்டப் பொது வைத்தியசாலை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைகளில் முழுமையான உபகரணங்களுடன் கூடிய விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு அமைக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். வடக்கு மாகாணத்துக்கான இரண்டாவது வரவு- செலவுத் திட்டத்தின் சுகாதார அமைச்சுக்கான செலவீனங்களை முன்மொழிந்து ஆற்றிய உரையிலேயே இத்தகவலை அவர் தெரிவித்தார். அந்த உரையில் அவர் மேலும்...
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்கள் எடுக்கும் தீர்மானமே இறுதித் தீர்ப்பாக அமையும். தமிழ் மக்களுக்குப் பொருத்தமான வேளையில் கூட்டமைப்பின் முடிவை அறிவிப்போம். இவ்வாறு தெரிவித்தார் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா. தமிழ்த் தேசியக் கூடட்மைப்பு, தமிழசுக் கட்சியின் பிரதேச சபைத் தவிசாளர்கள் உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், கட்சி அமைப்பாளர்கள்,...
மானிப்பாய் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் டபிள்யு.எம்.எஸ்.இந்திரகுமார வன்னிநாயக்கா (வயது 30) வியாழக்கிழமை (18) காலை சுகவீனமுற்ற நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. மேற்படி, பொலிஸ் அதிகாரி வியாழக்கிழமை காலை உணவு உண்ட நிலையில் மயங்கி வீழ்ந்துள்ளார். சிகிச்சைக்காக இவரை, யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்தபோதே அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்...
Loading posts...
All posts loaded
No more posts
