- Thursday
- November 20th, 2025
எதிர்ப்பரசியலால் எதையும் செய்ய முடியாது. இணக்க அரசியலினூடாகவே எதையும் சாதிக்க முடியுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, தென்னிந்திய திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவிடம் சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இயக்குநர் பாராதிராஜாவை, யாழ்ப்பாணம், டில்கோ விடுதியில் சந்தித்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்ட விளக்களத்தை வழங்கினார். அங்கு தொடர்ந்தும்...
வெள்ளப் பாதுகாப்பு அணை உடைப் பெடுத்துள்ளதால் மூதூர் பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சேருவில பிரதேசத்திலுள்ள 'வெள்ளம் தாங்கி' என்னும் பகுதியிலேயே பாதுகாப்பு அணை நேற்றிரவு அல்லது இன்று அதிகாலைவேளையில் உடைப்பெடுத்துள்ளதாக தெரிய வருகிறது. 1958ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளத்திற்குப் பின்பு மூதூர் மற்றும் சேருவில பிரதேசத்தின் சில பகுதிகளை வெள்ளத்திலிருந்து பாதுகாக்கும்...
யாழ்.போதனா வைத்தியசாலையின் தாதியர் பயிற்சிக் கல்லூரி( என்.ரி.எஸ்)யில் பணிபுரியும் சிற்றூழியர் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் அதிதீவிர சிகிச்சைப்பரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த நிஷாந்தினி( வயது 24) யாழ். போதனா வைத்தியசாலையின் தாதியர் பயிற்சிக் கல்லூரியில் சிற்றூழியராக கடமையாற்றி வருகின்றார். இன்று காலை வீட்டில் இருந்து புறப்பட்டவரை யாழ். நகர்ப்பகுதியில்...
வடமாகாண கால்நடை அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் நேற்று சனிக்கிழமை (20.12.2014) மாங்குளத்தில் கோழிக்குஞ்சுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. வடமாகாண கால்நடை அபிவிருத்தி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியில் இருந்து வடக்கின் ஐந்து மாவட்டங்களுக்கும் கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டு வருகின்றன. பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு...
தமிழ் நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்திருக்கும் இயக்குநர் பாரதிராஜா இன்று ஞாயிற்றுக்கிழமை (21.12.2014) மரியாதை நிமித்தமாக வடக்கு முதல்வர் க.வி. விக்னேஸ்வரன் அவர்களை அவரது வாசஸ்தலத்துக்குச் சென்று சந்தித்திருந்தார். இந்தச் சந்திப்பில் வடக்கு முதல்வருடன் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனும் கலந்து கொண்டிருந்தார்.
வட பகுதியில் தேர்தல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக வருகின்ற வெளிநாட்டு கண்காணிப்பாளர்களும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெறவேண்டும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய இந்த அறிவிப்பை வெளியிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்த விடயங்கள் வருமாறு: வட பகுதிக்கு வெளிநாட்டவர்கள் வருவதற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நாங்கள் நீக்கவில்லை. பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றி...
வடமாகாண முதலமைச்சரின் பேரில் ஒரு உத்தியோகபூர்வ வங்கிக் கணக்கைத் திறக்கக் கூட ஆளுநர் அனுமதிக்கின்றார் இல்லை. ஆனால் தம் பெயரில் ஆளுநர் நம்பிக்கை பொறுப்பு வங்கிக் கணக்கு என்று ஒன்றை வைத்திருந்து அதைச் செயல்படுத்தி வருகின்றார் என வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முழங்காவிலில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு...
மானிப்பாய், கட்டுடை காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மூன்று தினங்களுக்கு முன்னர் மானிப்பாயைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமற்போயிருந்தார் என்றும், அந்த இளைஞரின் சடலமே மீட்கப்பட்டிருக்கலாம் என்றும் பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
இரணைமடுக்குளத்தின் நீர் மட்டம் 30 அடியை எட்டியுள்ளது. 31 அடியை எட்டுமாக இருந்தால் வான் கதவுகள் திறக்க நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நிலைமையைக் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபாவதி கேதீஸ்வரன் நேற்று மாலை நேரில் சென்று ஆராய்ந்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழை காரணமாக நீர் வரத்து...
பொது எதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் தமிழ் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். அவர்களின் அன்றாடப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலும் விஞ்ஞாபனத் தில் குறிப்பிடாதமை ஏமாற்ற மளிப்பதாகவே அமைந்துள்ளது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான க.சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். ஜனவரி மாதம் 8 ஆம் திகதி இடம் பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும்...
கடந்த சில வாரங்களாக பல கோடி ரூபா விசா மோசடி தொடர்பில் இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகி சர்சைக்குள்ளாகியிருந்த விசா வழிகாட்டி நிறுவனமான திசைகாட்டி நிறுவனத்தில் பாதிக்கப்பட்டவர்களால் குறித்த நிறுவனம் நேற்று முன்னிரவு தீயிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குறித்த நிறுவனத்தில் பல லட்சங்களை செலுத்தி பாதிக்கப்பட்டவர்களால் காவல்துறையில் பல முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் இருப்பினும் வழக்குகள் எதுவும்...
குடும்ப ஆட்சியை இல்லாதொழிக்க பொது வேட்பாளரை வெற்றி பெறச்செய்வதில் பங்குதாரர் ஆகுங்கள் என வடமகாணசபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஐயூப் அஸ்மின் தெரிவித்தார். வவுனியா மாங்குளத்தில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து அங்கு அவர் கருத்து தெரிவிக்கையில் -...
யாழ் மாவட்டத்திலுள்ள விவசாயிகளின் பிரச்சனைகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று முந்தினம் (18) யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமை நாயகம் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் யாழ் மவாட்ட விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் வங்கிகளின் முகாமையாளர்கள்கலந்துகொண்டனர். இதன்போது கடந்த முறை நடைபெற்ற விவசாய...
வானிலையில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தினால் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் சில பாகங்களில் மழைவீழ்ச்சியினளவு அதிகரிக்கலாம் எனவும் குறிப்பாக மத்திய வடமத்திய கிழக்கு ஊவா மாகாணங்களில் இம் மழைவீழ்ச்சியினளவு அதிகரிக்கும் சாத்தியம் நிலவுவதாகவும் இன்று (20) வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் மற்றும் பல பிரதேசங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய...
யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் ஏற்பாட்டில் கிறிஸ்மஸ், புத்தாண்டு தின நிகழ்வுகள் யாழ். கோட்டைக்கு அருகாமையில் விசேடமாக அமைக்கப்பட்ட இடத்தில் வெள்ளிக்கிழமை (19) இரவு இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் அல்விஸ், மற்றும் யாழ். மறைமாவட்ட ஆயர் வணக்கத்திற்குரிய தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை ஆகியோர் கலந்து கொண்டு...
எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு யாழ். மாவட்டத்தில் தகுதி பெற்ற 4 இலட்சத்து 50 ஆயிரத்து 132 பேரில் 2 இலட்சத்து 34 ஆயிரத்து 186 பேர் பெண் வாக்காளர்கள் என யாழ். மாவட்ட செயலாளரும் மாவட்ட தெரிவு அத்தாட்சி அதிகாரியுமான சுந்தரம் அருமைநாயகம், வெள்ளிக்கிழமை (19) தெரிவித்தார்....
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மீது பாகிஸ்தானில் வைத்து நடத்தப்பட்ட தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் ஒருவருக்கு பாகிஸ்தானில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பாடசாலை ஒன்றினுள் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 139 மாணவர்கள் உள்ளிட்ட 149 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து அந்த நாட்டில் மீண்டும் மரண தண்டனையை அமுலுக்கு கொண்டுவந்தனர். இதன்படி தண்டனை...
யாழ். மாவட்டத்திலுள்ள வீதிகளில் டிப்பர் ரக வாகனம், ஏனைய வாகனங்கள் அதிக வேகத்துடன் சென்றால் எதிர்காலத்தில் சாரதிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். மாவட்ட போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி சமிந்தசில்வா தெரிவித்தார். போக்குவரத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வரும் மாதாந்த அமர்வு அண்மையில் இடம்பெற்றது. அதன்போதே போக்குவரத்துப் பொலிஸ் பொறுப்பதிகாரி இதனை தெரிவித்தார் . அவர்...
வடக்கு ரயில் பாதையில் தலாவ மற்றும் தம்புத்தேகமவுக்கிடையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் பாதையில் வௌ்ளநீர் தேங்கியுள்ளமையே இதற்குக் காரணம் என ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதனால் வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணத்தை மேற்கொள்ளும் ரயில் சாவஸ்திரிபுர வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொழும்பு - கோட்டையில் இருந்து வடக்கு நோக்கிச் செல்லும்...
நாடு முழுக்க வாழும் தமிழ் பேசும் மக்கள், ஜனவரி எட்டாம் திகதி காலை ஏழு மணிக்கும் பத்து மணிக்கும் இடையில் தமது வாக்குகளை அளித்து விட வேண்டும். அன்று மாலை நேர வாக்களிப்பு வேண்டாம். தாமதம் வேண்டாம். மாலை நான்கு மணிவரை வாக்களிப்புக்கான வாய்ப்பு இருந்தாலும் நாம் நேர காலத்துடன் வாக்களிப்பது நமது வீட்டுக்கும், நமது...
Loading posts...
All posts loaded
No more posts
