Ad Widget

தேர்தல் பிரசார பதாதைகளை அகற்ற பொலிஸாருக்கு அறிவுறுத்தல்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து தேர்தல் விதிமுறைகளை மீறி காட்சிப்படுத்தப்படும் பதாகைகளை அகற்றுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளதாக யாழ்.மாவட்ட தெரிவித்தாட்சிகரும் மாவட்டச் செயலாளருமான சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

dak-suntharam-arumainayagam-GA

தேர்தல் நடைமுறைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பு யாழ்.மாவட்டச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேர்தல் விதிமுறைகளை மீறி வேலணைப் பகுதியில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, அவற்றை அகற்றும்படி பொலிஸாருக்கு கூறியுள்ளேன்.

தபால் மூலமான வாக்களிப்பில் எதுவிதமான முறைப்பாடுகளும் கிடைக்கப்பெறவில்லை. முறைப்பாடுகள் இருந்தால் உடனடியாக யாழ். மாவட்ட செயலகம், சாவகச்சேரி, பருத்தித்துறை, வேலணை, சண்டிலிப்பாய் ஆகிய பிரதேச செயலகங்களில் அமைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டு நிலையங்களில் தெரிவிக்க முடியும்.

தபால் மூலமான வாக்களிப்பில் பொலிஸ், நீதிமன்றம் மற்றும் மாவட்டச் செயலகத்தை சேர்ந்தவர்களுக்கான வாக்களிப்புக்கள் வெள்ளிக்கிழமை (26) மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்று வருகின்றது.

3 தினங்கள் நடைபெற்ற வாக்களிப்பில், வாக்களிக்காத தபால் மூல வாக்காளர்கள், எதிர்வரும் 30 ஆம் திகதி மாவட்டச் செயலகத்தில் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Related Posts