Ad Widget

தேர்தல் ஆணையாளரின் அறிவித்தல் வந்தவுடன் புது உறுப்பினர் நியமனம் – மாவை

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் நிலவும் இரண்டு உறுப்பினர்களுக்கான வெற்றிடங்களுக்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பில் தேர்தல் ஆணையாளரிடமிருந்து அறிவித்தல் வந்தவுடன் நியமிக்கப்படுவார்கள் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா வெள்ளிக்கிழமை (26) தெரிவித்தார்.

mavai mp in

2011ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில், 16 உறுப்பினர்களை கொண்ட வலிகாமம் தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேச சபையில் 12 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும், 04 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் தெரிவாகினர்.

த.தே.கூட்டமைப்பை சேர்ந்த உறுப்பினர் கே.கௌரிகாந்தன் என்பவர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அறிவுறுத்தலுக்கமைய யாழ்.மாவட்ட தேர்தல் திணைக்கள அதிகாரியினால் இந்த வருடத்தின் நடுப்பகுதியில் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

அத்துடன் தவிசாளராக கடமையாற்றிய அ.ஐயநேசன் தனது பதவியை ராஜினாமா செய்ய, புதிய தவிசாளராக நியமிக்கப்பட்ட எஸ்.சிவகுமார் சுகயீனம் காரணமாக கடந்த நவம்பர் மாதம் 23ஆம் திகதி உயிரிழந்தார்.

தற்போது, பிரதேச சபையின் இரண்டு உறுப்பினர்களுக்கான வெற்றிடங்கள் இருக்கின்றமையால், இந்த வெற்றிடங்களுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்களா என மாவையை தொடர்புகொண்டு கேட்டபொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

பிரதேச சபையின் ஆயுட்காலம் முடிவதற்கு இன்னும் சில மாதங்களே இருக்கின்றன. இருந்தும் புதிய உறுப்பினர்களை நியமிப்பதில் நாங்கள் பிற்நிற்கவில்லை. தேர்தல் ஆணையாளர் இது தொடர்பில் எங்களுக்கு அறிவித்தல் விடுத்தவுடன் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள். தற்போது ஜனாதிபதி தேர்தல் தொடர்பான விடயங்களை அவர் கவனித்துக்கொண்டு இருப்பதால், அது முடிந்த பின்னரே இது பற்றி நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.

Related Posts