- Thursday
- July 17th, 2025

சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனம் மற்றும் ஜேர்மன் அரசின் உதவியுடன் சர்வதேச தரத்திலான உதைபந்தாட்ட பயிற்சி மைதானம் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை யாழ். அரியாலைப் பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தை சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜோசப் ஷெப் பிளாட்டர் பிற்பகல் 1.50 மணியளவில் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர், மத்திய...

யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியில் இடைநிறுத்தப்பட்டிருந்த அழகியல் பாடங்களை அடுத்த ஆண்டுமுதல் கற்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் அதேவேளை, மேலும் கல்லூரியின் வளங்களை மேலும் நிறைவு செய்து சிறப்பான வளங்களோடு இயங்குவதற்கு உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் முத்தமிழ் விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு...

இயற்கை தாண்டவத்தால் பாதிப்புக்குள்ளான ஏழை மக்களின் அன்றாட வாழ்வியலை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துவதை ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஒருபோதும் விரும்புவதில்லை என அந்த கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கே.வி.குகேந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட வலி.வடக்கு மக்களை திங்கட்கிழமை (01) மாலை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர்,...

யாழ். மாநகர சபை சுகாதார தொழிலாளர்கள் மாநகர முன்றலில் பணி புறக்கணிப்பு போராட்டமொன்றை இன்று (02) மேற்கொண்டனர். சுகாதார தொழிலாளர்களாகிய தங்களை வீதி புனரமைப்பு வேலைக்கு அனுப்பியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை சுகாதார தொழிலாளர்கள் மேற்கொண்டனர். இது தொடர்பில் தெரியவருதாவது, யாழ். மாநகர சபையின் சுகாதார பணிமனையில் பணியாற்றுவதற்காக 22 பெண், 55...

யாழ்ப்பாணம், பொம்மாவெளி, முதலாம் குறுக்குதெரு ஜே - 87 கிராமஅலுவலர் எல்லைக்குட்பட்ட முஸ்லிம் மக்கள், வீதியில் உணவு சமைத்து கவனயீர்ப்பு போராட்டமொன்றை இன்று செவ்வாய்க்கிழமை (02) முன்னெடுத்தனர். கடந்த சில நாட்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குள் மழை வெள்ளம் தேங்கி நிற்பதால், 40 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அன்றாட உணவுகளை...

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டாக்டர் அஜித் குமார் டோவல் இன்று செவ்வாய்கிழமை(02) காலை கொழும்பிலுள்ள ஜனாதிபதி இல்லத்தில் சந்தித்து பேசினார். இதன்போது இலங்கை - இந்திய உறவுகள் தொடர்பில் டோவல் திருப்தி தெரிவித்துள்ளதுடன் இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடியுள்ளார்.

தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக யாழ்.மாவட்டத்தில் இதுவரை 8 ஆயிரத்து 47 குடும்பங்களைச் சேர்ந்த 32 ஆயிரத்து 647 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதில் 501 குடும்பங்கள் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ளன. யாழ். மாவட்டத்தில் உள்ள 11 முகாம்களில் இவர்கள் தங்கவைக்கப்பட்டுள்னர். பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 4 முகாம்களிலும், யாழ்....

கடந்த மூன்று வருடங்களாக கண்டி இந்திய துணைத் தூதரகத்தில் பணியாற்றிய ஏ.நடராஜா யாழ் இந்திய துணைத் தூதரககத்தின் கொன்சியுலர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைய எதிர்வரும் ஜனவரி மாதம் தொடக்கம் யாழ் உப உயர்ஸ்தானிகராலயத்தில் பதவியேற்கவுள்ள அவர் கண்டியில் பணியை நிறைவு செய்ததன் பின்னர் கண்டி மாவட்டச் செயலாளர் எச்.எம். காமினி செனவிரத்னவை சந்தித்து சேவை காலத்தில்...

சிறுவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவது சட்டபூர்வமாக தடுக்கப்பட வேண்டும் என யாழ். பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் ஏ.எஸ்.சூசையானந்தன் திங்கட்கிழமை (01) தெரிவித்தார். சிறுவர் தொழிலாளர்கள் பற்றி கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், சிறுவர்கள் கடற்றொழிலில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். கடற்றொழில் மிகவும் கடினமான ஒரு தொழில். சிறுவர்கள்...

இளவாலை வருத்தபடாத வாலிபர் சங்கத்தினால் இளவாலை கிராமத்தில் டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தபட்டு, டெங்கு ஒழிப்பு நடவடிக்கை நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது. கிராம மக்கள் அனைவருக்கும் ஒலிபெருக்கி மூலமாக டெங்கு நுளம்பு பெருக தக்க கழிவுப்பொருட்களை சேகரித்து பொதி செய்து வைத்துகொள்ளுமாறு முன்னதாகவே அறிவுறுத்தபட்டு, வலிவடக்கு பிரதேச சபையின் வாகனத்தின் உதவியுடன் வருத்தப்படாத வாலிபர் சங்க...

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை தனித்தனியே சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். நேற்று மாலை இந்த சந்திப்பு கொழும்பிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவுடனான சாந்திபில் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள், ஜனாதிபதி தேர்தல் குறித்து இதன்போது...

ஆட்சியிலுள்ள அரசில் குறைகள் எதுவும் இல்லை என நான் குறிப்பிடவில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கையில் வாழ்ந்து வந்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள், கப்பம் பெற்றுக்கொள்ளும் நபர்கள் தற்போது வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். ஊடகவியலாளர்களில் 70 வீதமானவர்கள் அரசிற்கு விரோதமான வகையிலேயே இவர்கள் தகவல்களை வெளியிடுகின்றனர். நீதிமன்றின் நடவடிக்கைகளுக்கு எல்லா சந்தர்ப்பத்திலும் தலை வணங்குகின்றேன்....

பருத்தித்துறை, வியாபாரிமூலை கிராமத்திலுள்ள வீடுகளுக்குள் மழைவெள்ளம் புகுந்ததால் 23 குடும்பங்கள் இடம்பெயர்ந்து, அருகிலுள்ள தேவாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று பருத்தித்துறை பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர் மழை காரணமாக, நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இப்பிரதேசத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர். இக்கிராமத்துக்கு பின் பகுதியில் சிறு பயிர்ச்செய்கை செய்கின்ற விவசாய...

யாழ். மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் முதலாம் திகதியில் இருந்து 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 496.4 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவுசெய்யப்பட்டுள்ளதாக, திருநெல்வேலி வானிலை ஆய்வு நிலைய பொறுப்பதிகாரி ரி.பிரதீபன், திங்கட்கிழமை (01) தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில், கடந்த நவம்பர் மாதம் 27ஆம் திகதி 120.3 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளது. இதுவே இந்த வருடத்த்தில் அதிகூடியளவில் மழை...

தொண்டு நிறுவன ஊழியர் எனக்கூறி சேந்தாங்குளத்தை சேர்ந்த பெண்ணை ஏமாற்றி அப்பெண்ணின் கைப்பைக்குள் இருந்த தாலிக்கொடியை திருடிய சந்தேகநபரை ஞாயிற்றுக்கிழமை (30) கைதுசெய்துள்ளதாக இளவாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.மஞ்சுல டி சில்வா திங்கட்கிழமை (01) தெரிவித்தார். அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் உதவியுடன் இளவாலை சேந்தாங்குளம் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் வீடு ஒன்று கட்டிக்கொண்டு,...

வடமாகாண சபை தனது அதிகாரத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி, யாழ். பல்கலைக்கழகத்தின் துணையோடு நல்லூர் என்ற புனித நகரத்தையும் அதன் பண்பாட்டு சிறப்பையும் அதனோடு இணைந்த பண்பாட்டு எச்சங்களையும் பாதுகாக்க முன்வரவேண்டும் என யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பதில் தலைவர் செ.கிருஸ்ணராஜா திங்கட்கிழமை (01) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், யாழ். குடாநாட்டைப் பொறுத்தவரை...

வலிகாமம் கல்வி வலயத்திலுள்ள ஆசிரியர்களை வன்னிப் பகுதிக்கு இடமாற்றம் செய்யும் மாகாண கல்வி திணைக்களத்தின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று வலிகாமம் வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.சந்திரராசா திங்கட்கிழமை (01) தெரிவித்தார். வன்னி போன்றே வலிகாமம் கல்வி வலயமும் போரால் பாதிக்கப்பட்ட பிரதேசமாகும். எமது கல்வி வலயத்தில் பாட ரீதியான ஆசிரியர்கள் பற்றாக்குறையாகவுள்ள நிலையில் வன்னிப் பகுதிக்கு...

யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளாகிய வடமராட்சியிலுள்ள மூன்று கிராமங்களுக்கு, ஞாயிற்றுக்கிழமை (30) விஜயம் செய்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உலர் உணவுகளை வழங்கினர். வடமராட்சியிலுள்ள இராஜகிராமம், பொலிகண்டி மற்றும் தும்பளை கிழக்கு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 600 குடும்பங்களுக்கு தலா 500 ரூபாய் பெறுமதியான உலர்...

கடந்த 2013ஆம் ஆண்டு நிலவிய வரட்சியால் பாதிக்கப்பட்ட 7,761 யாழ். மாவட்ட விவசாயிகளுக்கு தேசிய காப்புறுதி நிதியத்தால் நஷ்டஈடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக ககமநலசேவைகள் திணைக்கள வடமாகாண பிரதி ஆணையாளர் எம்.பற்றிக் நிறைஞ்சன் திங்கட்கிழமை (01) தெரிவித்தார். விவசாயிகளுக்கு ஏற்பட்ட பயிர் அழிவின் தன்மை மற்றும் அழிவடைந்த பயிர்ச்செய்கைக்கான நிலப்பரப்பின் அளவுக்கு ஏற்ப நஷ்டஈடு வழங்குவதற்கான...

கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணாமல் போய் மீண்டும் கரையொதுங்கிய மீனவர்களின் மூழ்கிய படகு மற்றும் வலைகளை மீட்டுக்கொடுப்பதுடன், அந்த மீனவர்கள் தொழில் செய்வதற்கு வழி ஏற்படுத்தி கொடுப்பதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்தார். பருத்தித்துறை, சக்கோட்டை பகுதியை சேர்ந்த பொன்ராசா நித்தியசீலன் (வயது 31), லூசியஸ் ஜெயபாலன் (வயது 28), செபமாலை றோபேர்ம்...

All posts loaded
No more posts