முல்லைத்தீவில் ஜனாதிபதியின் தேர்தல் பிரசாரக் கூட்டம்!

நாளை வியாழக்கிழமை முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ முள்ளியவளை ஐயனார் கோவில் வளாகத்தில் நடைபெறும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஜனாதிபதித் தேர்தலுக்காக பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுவார். பிரசாரக் கூட்டத்தில் மக்களை கலந்துகொள்ளுவதற்கு வசதியாக இலவச போக்குவரத்து சேவைகளும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இதனையிட்டு நேற்று முதல் முல்லைத்தீவு மாவட்டம் முழுவதும் விசேட பாதுகாப்பு...

வடபகுதி மக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ஒருபோதும் தீர்வு பெற்றுக் கொடுக்கமாட்டார்!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சியிலிருக்கும் வரை வடபகுதி மக்கள் அதிகாரப் பகிர்வை எதிர்பார்க்க முடியாது என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்தின இந்து நாளிதழுக்குத் தெரிவித்துள்ளார். இந்தியா ஒரு ஜனநாயக நாடு, ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ சர்வாதிகார மனோநிலையில் இருக்கிறார். எனவே இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே பெரும் இடைவெளியுள்ளது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும்...
Ad Widget

நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம் ஆரம்பம்

வடமாகாண சபையின் 2015 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விசேட விவாதம் கைதடியிலுள்ள வடமாகாண சபையில் காலை 9 மணிக்கு ஆரம்பமானது. இன்று ஆளுநர் அலுவலகம், முதலமைச்சர் அலுவலகம் மற்றும் பிரதம செயலாளர் அலுவலகத்திற்கான நிதி ஒதுக்கீட்டு முன்மொழிவு பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது. தற்போது முதலமைச்சர் அலுவலகத்திற்கான நிதி ஒதுக்கீட்டுப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு விவாதங்கள் இடம்பெறுகிறது....

ஊழலை ஒழிப்பதே எனது இலக்கு – ஜனாதிபதி

இலங்கையிலிருந்து வறுமை மற்றும் நாட்டின் முன்னேற்றத்துக்கு தடையாக உள்ள ஊழல் என்பவற்றை முற்றாக ஒழிப்பதே தனது இலக்கு என ஜனாதிபதி மஹிந்த ராஷபக்ஷ தெரிவித்தார். கொழும்பு சினமன் கிரேன்ட் ஹோட்டலில் இடம்பெற்ற momentum வர்த்தக கலந்துரையாடலில் புதன்கிழமை(17) கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை கூறினார்.

ஊடகவியலாளர் வீட்டில் ஆவணங்கள் திருட்டு

கிளிநொச்சி, திருமுறிகண்டி பகுதியில் வசித்து வரும் பிராந்திய ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டிலிருந்த முக்கிய ஆவணங்கள் செவ்வாய்க்கிழமை (16) பகல் திருடப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் முறைப்பாடு பதிவு செய்ததாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். ஊடகவியலாளரும், அவரது மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்றிருந்த நேரம், வீட்டின் கதவை உடைத்து உள்நுழைந்துள்ள இனந்தெரியாத நபர்கள், அங்கிருந்த ஆவணங்களை திருடிச் சென்றுள்ளதாக...

எண்ணெய் கசிவு வழக்கு; ஜனவரி 14இல் கட்டளை பிறப்பிக்கப்படும்

சுன்னாகம் பகுதியிலுள்ள கிணறுகளில் எண்ணெய் கசிவு ஏற்பட்டமை தொடர்பில் எதிர்வரும் ஜனவரி 14ஆம் திகதி கட்டளை பிறப்பிக்கப்படும் என மல்லாகம் நீதவான் சி.சதீஸ்தரன் செவ்வாய்க்கிழமை (16) தெரிவித்தார். இலங்கை மின்சார சபையின், சுன்னாகம் நோர்தன் பவர் நிறுவன மின்பிறப்பாக்கியிலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவொயில், வெறுமனவே நிலத்தில் கொட்டப்பட்டமையால், சுற்றுவட்டாரத்திலுள்ள கிணறுகளில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதாக கூறி, தெல்லிப்பளை...

ஐந்து சந்தி குழு மோதல் ; மூவர் கைது

ஐந்து சந்தி பகுதியில் கடந்த 14 ஆம் திகதி இரவு இடம்பெற்ற குழு மோதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில், மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த குழு மோதலின் போது, ஐந்து சந்தியில் அமைந்துள்ள பீடா கடை, மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள்களும் தீக்கிரையாக்கப்பட்டன. அத்துடன், வாள்வெட்டுக்கு இலக்கான மூவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை...

இராணுவ ஆக்கிரமிப்பு எமது ஆட்சியில் இருக்காது – ரணில்

அபி­வி­ருத்தி என்ற பெயரில் அனைத்து துறை­க­ளிலும் இரா­ணுவ ஆக்­கி­ர­மிப்­பினை மேற்­கொள்ளும் இரா­ணுவ ஆட்சி எமது அரசாங்கத்தில் இருக்­காது. எமது ஆட்சியில் அதன் கட­மை­யினை மட்­டுமே இரா­ணுவம் செய்யும் என தெரி­வித்த எதிர்க்­கட்சி தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சர்­வ­தே­சத்தின் மத்­தியில் இலங்கை மறைக்­கப்­பட்டு விட்­டது. அதனை மீட்­டெ­டுக்கவேண்டும் எனவும் குறிப்­பிட்டார். சுற்­று­லாத்­துறை சார் வர்த்­த­கர்­க­ளு­ட­னான சந்­திப்­பொன்றை நேற்று...

த.தே.கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை அறிவித்தால்!! வடக்கில் மஹிந்தவின் அச்சுறுத்தல்கள் அதிகரிக்கும்!

"ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு அறிவிக்கப்பட்டால், வடக்கில் மஹிந்த அரசின் அச்சுறுத்தல்கள் அதிகரித்து அங்கு மக்கள் நிம்மதியாக உண்டு, உறங்க முடியாத அபாய நிலை ஏற்படும்." இவ்வாறு எச்சரிக்கை விடுத்திருக்கிறார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க. எனக்கு மனநோய் இல்லை. அந்த நோய் ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் இரண்டாவது பதவிக் காலத்துடன் ஆட்சியைக்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மைத்திரிபால இரகசிய ஒப்பந்தம்!- ஜனாதிபதி மஹிந்த!!

பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இரகசிய உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ குற்றஞ்சாட்டினார். சிலாபத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார். இது தொடர்பில் அவர் அங்கு மேலும் தகவல் வெளியிடுகையில்: தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளிட்ட குழுவினருடன் மைத்திரிபால சிறிறசேன இரகசிய...

காயமடைந்தவர்களை நேரில் சென்று நலம் விசாரித்தார் அமைச்சர் டக்ளஸ்

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக காயமடைந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவோரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். யாழ். போதனா வைத்தியசாலைக்கு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை சென்ற அமைச்சர், காயமடைந்த ஈ.பி.டி.பி. கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசனையும் நலம் விசாரித்தார். இதன்போது ஈ.பி.டி.பி...

வடக்கில் இவ்வருடத்தில் 2122 பேர் டெங்குவினால் பாதிப்பு

வடமாகாணத்தில் 2014ஆம் வருடத்தின் இந்த மாதம் வரை 2 ஆயிரத்து 122 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகி இருப்பதாக யாழ்.பிராந்திய வட மாகாண சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியிருக்கின்றது. கடந்தாண்டை விடவும் இந்த வருடம் மோசமான நிலை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய 5 மாவட்டங்களிலும் டெங்கு நோயின் தாக்கம்...

அடியாள்களுடன் வந்த அமைச்சர் டக்ளஸாலேயே குழப்பம் ஏற்பட்டது! முதலமைச்சர் அலுவலகம் தெரிவிப்பு

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் குழப்பமடைந்தமைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், அவர் அழைத்துவந்த சம்பந்தமில்லாத வெளியாள்களுமே காரணம். இவ்வாறு தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை மாவட்டச் செயலகத்தில் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே ஒத்திவைக்கப்பட்டது. கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பம், அடிதடி சண்டையாகியதில் கூட்டமைப்பு பிரதிநிதிகள் நால்வர் காயமடைந்தனர். இந்த...

யாழில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரம்

அண்மையில் பெய்த பருவ மழையையடுத்து யாழ். மாவட்டத்தில் அதிகரித்துள்ள டெங்கு தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு சுகாதார திணைக்களம்சார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, திங்கட்கிழமை (15) தெரிவித்தார். யாழ். பிராந்திய சுகாதார சேவை பணிமனையின் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன், சுகாதார வைத்தியதிகாரிகள், பொதுச்சுகாதார பரிசோதகர்கள் ஆகியோருடன் திங்கட்கிழமை (15) இடம்பெற்ற...

யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் இடமாற்றம்

யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பவானி பசுபதிராஜா நேற்று திங்கட்கிழமையுடன் (15) யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பதவியிலிருந்து இடமாற்றம் பெற்றுச்செல்கின்றார். 5 வருடகாலத்துக்கு ஒரு முறை இடம்பெறும் இடமாற்றத்தின் அடிப்படையில் இந்த இடமாற்றம் தனக்கு கிடைத்துள்ளதாகவும், அடுத்ததாக வவுனியா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யுமாறு தான் கோரியிருந்ததாகவும், இருந்தும் இதுவரையில் தனக்கு அது தொடர்பில் கடிதம்...

நாம் தோற்றுப்போனவர்கள் அல்ல – மாவை

எமது இனம் தோற்றுப்போன இனமல்ல. நாங்கள் நிமிர்பவர்கள் என தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, கிளிநொச்சி கண்டாவளை உழவனூர் கிராம அபிவிருத்தி சங்கத்தில் திங்கட்கிழமை (15) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கூறுகையில், 'நாம்...

பொலிஸாரிடமிருந்து மின்சார, நீர் கட்டணங்கள் அறவிடப்படாது – பொலிஸ் தலைமையகம்

திருமணம் முடிக்காத பொலிஸார் தங்குகின்ற விடுதிகளுக்காக இதுவரை காலமும் அறவிடப்பட்ட நீர் மற்றும் மின்சாரம் பட்டியல்களுக்கான கட்டணங்கள் இனிமேல் அவர்களிடமிருந்து அறவிடப்படமாட்டாது என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இந்த நடைமுறை 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்படும் என்றும் தலைமையகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பில் பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, திருமணம்...

தங்கள் உறுப்பினர்களில் ஐவருக்கு காயம் – ஈ.பி.டி.பி

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இடம்பெற்ற கைகலப்பில் தமது தரப்பைச்சேர்ந்த உறுப்பினர்கள் ஐவர் காயமடைந்துள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்ப்பில் அக்கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் தாக்குதலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளர் இராஜ்குமார், அமைச்சரின் வடமராட்சி இணைப்பாளரும், பருத்தித்துறை பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவருமான...

மகிந்தவுக்கு ஆதரவளிக்க வெளிநாட்டில் பணிபுரியும் 1,37,000 இலங்கையர்கள் நாட்டுக்கு வருகை

குவைத்தில் பல்வேறு தொழில்களிலும் ஈடுபடும் இலங்கையர்களை ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க தேர்தலுக்கு முன்னர் நாட்டிக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி குவைத்தில் பணிபுரியும் 1,37,000 இலங்கையர்கள் ஜனவரி 07 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்கப்படவுள்ளதாக இலங்கையர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகள் இலங்கையில் யுத்தம் நிகழ்ந்தது. தற்போது நிலைமை சீராகி உள்ளது. இதற்கு மூலகாரணம் மகிந்த ராஜபக்சவின்...

குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க நினைக்கிறது அரசு – சிவாஜி காட்டம்

வடக்கிற்கு சிவில் ஆளுநர் ஒருவரையே நியமிக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண சபை கோரிக்கை விடுத்ததே தவிர சிங்கள ஆளுநர் நியமிக்க வேண்டும் என்று ஒருபோதும் கூறவில்லை.ஆகவே அரசு பொய்களைத் திருப்பித் திருப்பிக் கூறியும்,ஏமாற்றியும் ஜனாதிபதித் தேர்தலில் குழம்பியகுட்டையில் மீன்பிடிக்க நினைக்கிறது.என நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார். இன்று யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்கு வருகை தந்து...
Loading posts...

All posts loaded

No more posts