Ad Widget

தபால் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம்

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அரச ஊழியர்களுக்கான உத்தியோகபூர்வ தபால் மூல வாக்களிப்பு நாளையும்,நாளை மறுதினமும் நடாத்தப்படவுள்ளன.

mahinda-deshpriya

அஞ்சல்மூல வாக்காளர்கள் தமது வாக்குகளை சுதந்திரமாகவும் இரகசியமாகவும் அடையாளமிடுவதற்கான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப் பிரிய தெரிவித்துள்ளார்.

வாக்காளர்களை அடையாள மிட்டுள்ள சின்னம் பிறர் அறியாதவகையில் பாதுகாக்கப்படும். அஞ்சல் வாக்கு அடையாளமிடும் இடமொன்றில் வாக்களிப்பதற்கான தடை அல்லது அச்சுறுத்தலை எவரேனும் ஏற்படுத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts