- Sunday
- July 20th, 2025

வடபகுதியில் அபிவிருத்தி வேலைகள் மேற்கொள்ளும் போது, அபிவிருத்தி வேலை மேற்கொள்ளும் இடத்தில் இருக்கும் தொல்பொருட்கள் மீட்கப்படாமல் அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்படுவது ஏன்? என்று யாழ். பல்கலைக்கழக பதில் வரலாற்றுத்துறை தலைவர் செ.கிருஸ்ணராஜா வெள்ளிக்கிழமை (28) கேள்வி எழுப்பியுள்ளார். பொதுவாக எந்தவொரு இடத்திலும் அபிவிருத்தி வேலைகளை முன்னெடுக்கும் போதும் அந்த இடத்தின் தொன்மை மற்றும் தொல்பொருள் எச்சங்கள்...

தனியார் பேருந்துகளில் இடம்பெறும் பால்நிலை வன்முறைகளுக்கு ஆண்கள் மட்டுமன்றி சில பெண்களும் காரணமாக அமைவதாக தனியார் பேருந்து இணையத் தலைவர் கெங்காதரன் தெரிவித்தார். (more…)

யாழ். மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் பாதிக்கப்பட்ட 1,080 பேருக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும் வடமாகாண சபை உறுப்பினருமாகிய அங்கஜன் இராமநாதனால் மதிய உணவு மற்றும் இரவு உணவுகள் வழங்கப்பட்டன. வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து மதவடி, கண்ணகி முகாம், சபாபதிபிள்ளை முகாம் என்பவற்றில் தங்கி வாழும் 1,080 பேருக்கே...

சொந்தக் காணி வழங்குமாறு வலியுறுத்தி பொம்மைவெளி பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். (more…)

தன்னைவிட நாட்டை பற்றி சிந்தித்து செயற்படும் நபர்களே தற்போதைய தருணத்தில் நாட்டுக்கு அவசியம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். (more…)

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் சொகுசு தனியார் பஸ் ஒன்றினுள் இரண்டு கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)

யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்காக விடுதலைப்புலிகள் மீண்டும் வருவார்கள் என்ற துண்டுப் பிரசுரத்தை ஒட்டியதாக யாழ். புத்தூர், மீசாலை சந்தி பகுதியில் கைது செய்யப்பட்ட இளைஞன் கூறியதாக யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி.விமலசேன வெள்ளிக்கிழமை (28) தெரிவித்தார். மாவீரர் தினத்தை நினைவுகூறும் வகையில் விடுதலைப்புலிகளை ஆதரித்த துண்டுபிரசுரத்தை வைத்திருந்த குற்றச்சாட்டில் வீரசிங்கம் சுலக்ஸன்...

பருத்தித்துறை கடலுக்குள் நேற்று வெள்ளிக்கிழமை (28) அதிகாலை மீன்பிடிக்க சென்ற மூன்று மீனவர்களை காணவில்லையென மீனவரின் உறவினர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் கூறினர். (more…)

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் களத்தில் இருதரப்பிலும் ஏட்டிக்குப் போட்டியான ஊடகவியலாளர் சந்திப்புகளும் பிரசார நிகழ்வுகளும் தொடங்கியுள்ளன. (more…)

மோசடி நிறுவனத்துக்கு எதிராக முகப்புத்தகத்தில் பாதிக்கப்பட்ட ஒருவரால் பரவிய செய்தி இதுதான் (அவருடைய பேச்சு மொழி திருத்தப்பட்டுள்ளது) திசைகாட்டுகின்றோம் என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் விசா பெற்றுத்தருகிறோம் என்று ஒரு நிறுவனம் புறப்பட்டுள்ளது அது தொடர்பான எச்சரிக்கைதான் அது... விண்ணப்பம் மட்டும் நிரப்புவதற்கு ஒருவரிடம் 70,000 ரூபா வசூலிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவரோ திசைகாட்டும் நிறுவனமே தனக்கு விசா வாங்கி கொடுத்ததாகவும்...

சுன்னாகம் பிரதேசத்தில் உள்ள கிணறுகளில் கழிவு எண்ணெய் கலந்துள்ள விவகாரம் தொடர்பாக வடக்கு மாகாண முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (28.11.2014) வலிதெற்குப் பிரதேசசபை மண்டபத்தில் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாணசபை உறுப்பினர்கள் த.சித்தார்த்தன், பா.கஜதீபன்,வலிதெற்குப் பிரதேசசபைத் தவிசாளர் தி.பிரகாஷ், மத்திய சுற்றாடல் அதிகாரசபைப் பிரதிப் பணிப்பாளர் விஜிதா சத்தியகுமார்,...

யாழ்ப்பாண பத்திரிகை ஒன்றின் ஊடகவியலாளரை தாக்கிய போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன தெரிவித்தார். யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று இடம்பெற்றது. அதன் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஒக்ரோபர் மாதம் 30 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம்...

மரண தண்டனை விதிக்கப்பட்ட மூன்று இலங்கை மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. (more…)

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் இதுவரையிலும் எவ்விதமான பேச்சுவார்த்தையையும் நடத்தவில்லை என்று எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். (more…)

தொண்டைமானாறு, ஊறணி பகுதியிலுள்ள பெண்ணின் கூந்தலை கத்தரித்தவர் என்ற சந்தேகத்தில் அதேயிடத்தைச் சேர்ந்த 24 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை வெள்ளிக்கிழமை (28) கைது செய்ததாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி பெண்ணின் வீட்டுக்குள் கடந்த செப்டெம்பர் மாதம் 23ஆம் திகதி இரவு நுழைந்த சிலர், வீட்டிலிருந்த பெண்ணை பலவந்தமாக மடக்கி பிடித்து கூந்தலை கத்தரித்தனர். பெண்ணின்...

"ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி உறுதியாகிவிட்டது. நாட்டுக்கு விடிவு காலம் நெருங்கிவிட்டது. எனவே, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் அணிதிரளவேண்டும்" என்று மஹிந்த அரசிலிருந்து எதிரணியில் இணைந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். "தெற்கில் பேசப்படும் அளவுக்கு வடக்கில் சுதந்திரம் இல்லை. வடக்கு மக்களின் நிலைமை மிகவும் அபாயகரமானதாக உள்ளது. எனவே, அவர்களுக்கும், முழு...

புத்தளம் பகுதியைச் சேர்ந்த மூவரை, அதி சக்திவாய்ந்த வெடி மருந்துகளுடன் யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் வைத்துத் தாம் கைதுசெய்துள்ளனர் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தமக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து நேற்று வியாழக்கிழமை கச்சேரிப் பகுதியில்வைத்து இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர் என்று யாழ். மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் இன்று தெரிவித்தார். ஓட்டோ...

தனது பெயர், முகவரி, புகைப்படம் என்பவற்றைப் பயன்படுத்தி ஈ.பி.டி.பி. கட்சியைச் சேர்ந்த கே.வி.குகேந்திரன், அவதூறான செய்தியை ஊடகங்குளுக்கு அனுப்பி, அவற்றை பிரசுரிக்குமாறு கோரியமை குறித்து தன்னால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாடு விசாரணைக்காகக் குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கரகரத்தினம் தெரிவித்துள்ளார். இது குறித்த அவர்...

All posts loaded
No more posts