கடந்த சில வாரங்களாக பல கோடி ரூபா விசா மோசடி தொடர்பில் இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகி சர்சைக்குள்ளாகியிருந்த விசா வழிகாட்டி நிறுவனமான திசைகாட்டி நிறுவனத்தில் பாதிக்கப்பட்டவர்களால் குறித்த நிறுவனம் நேற்று முன்னிரவு தீயிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
குறித்த நிறுவனத்தில் பல லட்சங்களை செலுத்தி பாதிக்கப்பட்டவர்களால் காவல்துறையில் பல முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் இருப்பினும் வழக்குகள் எதுவும் பதிவுசெய்யப்படத நிலையில் நிறுவனத்தினை நடாத்தி வந்தவர் வெளிநாடு தப்பி செல்லபோவதாக வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் விசாவுக்கு விண்ணப்பித்த பலரும் தமது பணத்தினை தருமாறு் கோரி நிறுவனத்தினை முற்றுகையிட்டுள்ளனர். இருப்பினும் அவர்கள் நிறுவன உரிமையாளரால் அடியாட்கள் கொண்டு விரட்டப்பட்ட பின்னணியில் நேற்று முன்னிரவு நிறுவனத்திற்குள் புகுந்த பாதிக்கப்பட்டவர்கள் அதற்கு தீவைத்ததாகவும் சொல்லப்படுகிறது.
நிறுவனத்தில் சொகுசு படுக்கையறை காணப்பட்டதாகவும் மேலும் பல ஆவணங்கள் தொலைபேசி ஆகியன கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.இதுதொடர்பில் உள்ளுர் பத்திரிகைகள் செய்திகள் எதனையும் வெளியிடவில்லை எனவும் அவைகள் நிறுவனத்தின் விளம்பரங்களினால் பெருமளவு பணத்தினை பெற்றதன் காரணமாக கைமாறு செலுத்தும் வகையில் இவ்வாறு நடந்து கொண்டனவோ என எண்ணத்தோன்றுகின்றதாக இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாதிக்கப்பட்டவர்கள் நிறைய எழுத்துமூல ஆதாரங்களை யும் ஒலி ஒளி வடிவ ஆதாரங்களையும் வைத்திருப்பதாகவும் அடுத்துவரும் நாட்களில் நிறுவனத்திற்கு எதிராக வழங்குகள் பதிவுசெய்யப்பட இருப்பதாக பாதிக்கபட்டவர்களுடன் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.