Ad Widget

யாழ்.போதனா வைத்தியசாலை சிற்றூழியர் மீது வாள் வெட்டு

யாழ்.போதனா வைத்தியசாலையின் தாதியர் பயிற்சிக் கல்லூரி( என்.ரி.எஸ்)யில் பணிபுரியும் சிற்றூழியர் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் அதிதீவிர சிகிச்சைப்பரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த நிஷாந்தினி( வயது 24) யாழ். போதனா வைத்தியசாலையின் தாதியர் பயிற்சிக் கல்லூரியில் சிற்றூழியராக கடமையாற்றி வருகின்றார்.

இன்று காலை வீட்டில் இருந்து புறப்பட்டவரை யாழ். நகர்ப்பகுதியில் வைத்து வாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

படுகாயமடைந்தவர் உடனடியாக அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து உறவினர்களிடம் கேட்டபோது,

குறித்தவர் திருமணம் செய்து கடந்த 5 வருடங்களாக கணவனைப்பிரிந்து வாழ்கின்றார் என்றும் குடும்பத்தகராற்றின் காரணமாகவே வாள்வெட்டு ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர்.

மேலும் கணவனே வாளால் வெட்டிக்காயப்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts