- Thursday
- November 20th, 2025
ஆலயங்கள் வியாபார நிலையங்களாக மாறிவருவது சமூகத்தில் ஒரு வேதனைக்குரிய விடயம் என கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபர் ச.லலீசன் தெரிவித்தார். அகில இலங்கை இந்து மாமன்ற ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சபையின் அனுசரணையுடன் நாவலர் விழா இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் உரையாற்றுகையில், ஆறுமுகநாவலர்...
மகிந்த ராஜபக்ச தலைமையிலான தற்போதைய அரசு மோசடிகளில் உலக சாதனை படைத்திருப்பதாக எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார். சிலாபத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைக் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், வடக்கில் புகையிரத பாதையை நிர்மாணிப்பதற்கு ஒரு கிலோமீற்றருக்கான செலவு 44 மில்லியன் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் இறுதியில் ஒரு...
வாடிக்கையாளர் ஒருவரிடமிருந்து அடைவுக்காக நகைகளைப் பெற்றுக்கொண்டு பற்றுச்சீட்டு வழங்கப்பட்ட பின்னர் நகைகள் மீளவும் கையளிக்கப்பட்ட சம்பவம், யாழ். வங்கியொன்றில் நடைபெற்றுள்ளது. யாழ். மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள வங்கியில் பார்வையிழந்த பெண் ஒருவர் தன் வசமிருந்த நகைகளை நேற்று முன்தினம் காலை அடைவு வைத்துள்ளார். அங்கிருந்த அலுவலரால் நகைகள் சரிபார்க்கப்பட்ட பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டு நகைக்குரிய பணமும் வழங்கப்பட்டுள்ளது....
ஐ படம் என்றாலே எல்லோருக்கும் ஒரு பெரிய எதிர்ப்பார்ப்பு தான், ஏனென்றால் அப்படத்தில் நிறைய பிரம்மாண்டங்கள் இருக்கிறது. இப்படம் பொங்கல் அன்று வெளியாக உள்ளதாக நாம் அறிந்திருப்போம். அதற்கேற்றார் போல் ஐ படம் பாதி தியேட்டர்கள் புக் செய்துவிட்டதாகவும் நாம் சமீபத்தில் போஸ்டர்களை பார்த்திருப்போம். ஆனால் தற்போது ஐ படம் மூன்று காரணங்களுக்காக பொங்கல் ரேஸில்...
சரியான அரசியல் பலத்தின் ஊடாகவே மக்களுக்கான சேவைகளை முழுமைபெறச் செய்ய முடியுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா நேற்று(12) தெரிவித்தார். தென்மராட்சி கலைமன்ற கலாசார மண்டபத்தில் தொகுதி மாதர் அமைப்பை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்மக்கள் மத்தியில்...
யாழ்ப்பாண பல்கலைக்கழத்தின் வளாகங்களில் மேற்கொள்ளவுள்ள நகரமயமாக்கல் தொடர்பான திட்டமிடல் செயற்பாடுகளுக்காக 8 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் வெள்ளிக்கிழமை (12) தெரிவித்தார். யாழ்ப்பாண பல்கலைக்கழக சமுதாய, பிராந்திய திட்டமிடல் கற்கை நெறியின் இளம் திட்டமிடலாளர் சங்கத்தினரால் உலக நகரத்திட்டமிடல் தினத்தை முன்னிட்டு, நடத்தப்பட்ட கண்காட்சி நிகழ்வில் கலந்துகொண்டு துணைவேந்தர்...
உரிய வேலை வாய்ப்பு கிடைக்காமையால் திருட்டில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தில் 25 வயதுடைய விஞ்ஞானமானி பட்டம் பெற்ற ஒருவரை கைது செய்துள்ளதாக, யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் சனிக்கிழமை (13) தெரிவித்தனர். யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியை சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றை உடைத்து 2½ பவுண்...
கடந்த 2012ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குடிசன கணக்கெடுப்பின் போது இலங்கையின் சனத்தொகை 20.4 மில்லியன் என கண்டறியப்பட்டுள்ளது என தொகை மதிப்பீட்டு புள்ளிவிபர திணைக்கள பணிப்பாளர் நாயகம் டி.பீ. குணவர்தன தெரிவித்தார். நேற்று கொழும்பு சினமன்ட் கிராண்ட் ஹோட்டலில் நடத்தப்பட்ட குடிசன வீட்டுவசதிகள் 2012 பிரதான தேடல்களுக்கான கருத்தரங்கின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கையில்...
இந்திய மீனவர்களின் வருகையில் தமது இறால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி முல்லைத்தீவுப் பகுதி மீனவர்கள் பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர். முல்லைத்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் நடவடிக்கைகளினால் தமது தொழிலை மேற்கொள்வதற்கு வசதியாக உரிய நடவடிக்கை இலங்கை அரசு எடுக்க வேண்டும் என அம்மாவட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். டிசம்பர் மாதத்தில் பெரும் எண்ணிக்கையில் வருகை...
இலங்கையின் வீதி தோற்ற விபரங்களை சேகரிக்கும் நடவடிக்கையை கூகிள் நிறுவனம் ஆரம்பித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கமெராக்கள் பொருத்தப்பட்ட கார்கள் மூலம் இலங்கையின் வீதிகள் படம் பிடிக்கப்படும். இதன்மூலம், இலங்கையிலுள்ள எந்தவொரு இடத்தையும் கூகிள் இணையத்தளத்தில் தத்ரூபமாக பார்வையிடக்கூடிய வசதி கிடைக்கிறது. கூகிள் ஸ்ட்ரீட் வியூ என்ற சேவையில் 63 நாடுகள்...
யாழ். மாவட்டத்திலுள்ள வானொலி அறிவிப்பாளரான பெண் ஒருவர் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அரியாலை பகுதியில் வைத்து இரவு 07.00 மணியளவில் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான 23 வயதான குறித்த யுவதி, அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு செல்லும் போது, அரியாலை பகுதியில் வைத்து அவர் சென்ற மோட்டார் சைக்கிளை தள்ளிவிழுத்தியதுடன், கழுத்தை நெரித்துக் கொலை...
யாழ் குடாநாட்டில் இடைவிடாது தொடர்ந்து பெய்து வரும் மழையினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இராணுவத்தினர் உதவிகளைச் செய்து வருகின்றனர். யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் நெருக்கடிகளுக்குள்ளாகியுள்ளனர். யாழ் மாவட்ட பாதுகாப்புப் படையின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸின் வழிகாட்டலின் கீழ் இந்த உதவி வேலைகள், நடமாடும் சேவைகள்...
திருப்பதி வெங்கடாசலபதி ஆலயம் உலக வாழ் இந்துக்களின் புனித ஸ்தலம். கிறிஸ்தவர்களுக்கு வத்திகானும், இஸ்லாமியர்களுக்கு மெக்காவும் எப்படியோ, அப்படியே இந்துக்களுக்கு திருப்பதி ஆகும். இந்நிலையில் இங்கே வாழும் இந்துக்களை பந்தாடிவிட்டு, உலக இந்துக்களின் கடவுள் திருப்பதி வெங்கடாசலபதியின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி மன்றாடுவது நியாயமா? என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்வி...
யாழ் இந்துக் கல்லூரிக்கு அருகிலுள்ள பொதுக்கிணறு நாம் நண்பர்கள் அமைப்பினால் புனரமைக்கப்பட்டுள்ளது. நாளாந்தம் பலர் பாவிக்கும் இந்தக் கிணற்றின் முன் பகுதி பாதுகாப்பாக இல்லாமையால் வீதியிலுள்ள அழுக்குகள் கிணற்றினுள் செல்கிறது. அதைத் தடுப்பததற்காக தற்போது கிணற்றின் முன் பக்க கட்டுக்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு, கால்நடைகள் நீர் அருந்துவதற்கேற்ற வகையில் நீர்த்தொட்டி ஒன்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் வெளியிலிருந்து...
எமது வடமாகாண இளைஞர் யுவதிகள் நினைத்தால் எதனையும் சாதிக்கக் கூடிய சக்தி கொண்டவர்கள். இவர்களை ஊக்குவிக்க எமது விளையாட்டுத் திணைக்களம் காத்துக் கொண்டிருக்கின்றது. நாங்கள் உதவினாலும் நீங்களே உங்களை வெற்றிப் பாதைக்குக் கொண்டு செல்லவேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட ஐந்தாவது வர்ண இரவு விருது வழங்கும்விழா...
இரணைமடுக்குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்குக் குடிநீர் வழங்குவதாக இருந்தால் மாத்திரமே இரணைமடுக்குளத்தைப் புனரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யமுடியும் என்றிருந்த நிலை மாற்றப்பட்டு, எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் இரணைமடுக்குள அணைக்கட்டைப் புனரமைக்க ஆசிய அபிவிருத்தி வங்கி கடனுதவி வழங்க முன்வந்திருப்பதாக வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், நீர்வழங்கல், உணவு வழங்கல், சுற்றாடல், மற்றும் கூட்டுறவுத்துறை...
பத்திரிகைகள் பக்கச் சார்பாக இயங்கி, பத்திரிகை பயங்கரவாதத்தை நடத்துகின்றன. உண்மையான செய்திகளை வெளியிடுவதற்கு பத்திரிகைகளுக்கு காசு கொடுக்க வேண்டுமா? என வடமாகாண பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் கேள்வி எழுப்பினார். வடமாகாண சபையின் மாதாந்த விசேட அமர்வு கைதடியிலுள்ள வடமாகாண சபையில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற போது, வடமாகாண சபை அமர்வில் தான் கூறிய கருத்தொன்றுக்கு...
வடமாகாண சபையின் அபிவிருத்தி மற்றும் கவனிப்புக்களில் வவுனியா மாவட்டம் புறக்கணிக்கப்படுகின்றதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும், அதனை தவிர்த்து அனைத்து நடவடிக்கைகளிலும் வவுனியா மாவட்டத்தை உள்ளடக்கி வடமாகாண சபை செயற்படவேண்டும் என ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.தியாகராசா கோரிக்கை முன்வைத்தார். வடமாகாண சபையின் மாதாந்த விசேட அமர்வு கைதடியிலுள்ள வடமாகாண சபையில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற போது, மழை...
யாழ்ப்பாணம் தமிழ் சங்கம் நடத்தும் நாவலர் விழா நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு நல்லூர் துர்க்காதேவி மணி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத் தலைவர் பேராசிரியர் தி. வேல்நம்பி தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் சிறப்புரையை "நாவலரின் பன்முக ஆளுமை" என்ற தலைப்பில் உரும்பிராய் இந்துக்கல்லூரி ஆசிரியர் தி.செல்வமனோகரன் நிகழ்த்துவார். தொடர்ந்து...
அரசியல் யாப்புக்கு முரணான விதத்தில் இராணுவத்தினர் மேற்கொள்ளும் காணி ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு துணை போகும் வர்த்தமானி அறிவித்தலை (1882/6 இலக்கம் - 2014ஆம் ஆண்டு செப்ரெம்பர் 30ஆம் திகதி) ரத்து செய்ய கோரி வடமாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டது. வடமாகாண சபையின் மாதாந்த விசேட அமர்வு, கைதடியிலுள்ள வடமாகாண சபையில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற போது,...
Loading posts...
All posts loaded
No more posts
