Ad Widget

யாழ் மத்திய கல்லூரியில் அகில இலங்கை ரீதியிலான மேசைப் பந்தாட்ட சுற்றுப் போட்டி

அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கு இடையிலான மேசைப் பந்தாட்ட சுற்றுப் போட்டியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

table-teneis-3

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இன்றைய தினம் (19) மேற்படி போட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

முன்பதாக யாழ்.மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 13 பாடசாலைகளுக்கு முதற்கட்டமாக மேசைப்பந்தாட்டத்துக்கான மேசைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களிடம் வழங்கி வைத்தார்.

அத்துடன், பயிற்சி ஆசிரியர்களுக்கான சான்றிதழ்களையும் அமைச்சர் அவர்கள் வழங்கி வைத்தார்.

யாழ்.மத்தியகல்லூரி அதிபர் எழில்வேந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உரையாற்றும் போது:-

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேசைப்பந்தாட்ட விளையாட்டுத்துறையை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களது ஆலோசனைக்கு அமைவாக முதற்கட்டமாக 13 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

தெரிவு செய்யப்பட்டுள்ள குறித்த பாடசாலைகளின் மாணவர்களுக்கு மேசை பந்தாட்ட துறையில் அக்கறையுள்ள உணர்வுள்ள விருப்பமுள்ளவர்களுக்கு அமைச்சர் லசந்த அழகியவன்னவின் முயற்சியால் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அந்த வகையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களுக்கும் இலங்கை மேசைப்பந்தாட்ட சங்கத்தின் செயலாளர் சந்தன பெரேராவிற்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

2014 ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை ரீதியிலான மேசைப்பந்தாட்ட போட்டிகள் இன்றும், நாளையும், நாளைமறுதினமுமாக மூன்று நாட்கள் நடைபெறுகின்றன.

இப்போட்டிகளை அகில இலங்கை மேசைப்பந்தாட்ட சங்கமும் யாழ்.மாவட்ட மேசைப்பந்தாட்ட சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது இலங்கை மேசைப்பந்தாட்ட சங்கத்தின் செயலாளர் சந்தன பெரேரா, யாழ்.மாநகர முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா உள்ளிட்ட துறைசார்ந்தோர் உடனிருந்தனர்.

table-teneis

table-teneis-2

table-teneis-4

table-teneis-5

Related Posts