Ad Widget

வடமராட்சியில் எலும்புக்கூடு மீட்பு

யாழ். வடமராட்சி முள்ளி பகுதியில் எரியூட்டப்பட்ட நிலையில் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் எலும்புக்கூடு வியாழக்கிழமை (18) மீட்கப்பட்டதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

DSCN1812

அப்பகுதியில் புல் வெட்டிக்கொண்டிருந்த இராணுவத்தினர் வழங்கிய தகவலின் அடிப்படையில், அவ்விடத்துக்கு பருத்தித்துறை நீதவான் ஜே.கஜநிதிபாலனுடன் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

தேங்காய் பொச்சுமட்டைகளுக்குள் வைத்து எரியூட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட இந்த எலும்புக்கூடானது, கடந்த சில நாட்களுக்கு முன்னரே எரியூட்டப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் தெரிவித்தனர்.

எலும்புக்கூட்டுடன் பெண்கள் அணியும் ஆடைகளின் பாகங்களும் மீட்கப்பட்டன.

நீதவானின் உத்தரவுக்கமைய பரிசோதனைக்காக எலும்புக்கூடு யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பில விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts