Ad Widget

வட மாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சுக்கு 213 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

வடமாகாண சபையின் 2015 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விசேட விவாதம் மூன்றாம் நாளாக இன்று கைதடியிலுள்ள மாகாண சபையின் கட்டடத்தொகுதியில் காலை 9 மணிக்கு ஆரம்பமானது.

deneeswaran

தற்போது வட மாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்து, கிராமிய அபிவிருத்தி, வர்த்தக வாணிபத்திற்கான நிதி ஒதுக்கீட்டுப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு அதற்கான விவாதங்கள் இடம்பெற்றுவருகின்றன.

குறித்த துறைக்கு நிதி ஆணைக்குழுவிடம் 1025 மில்லியன் ரூபாவைக் கேட்டோம். ஆனால் வெறுமனே 213 மில்லியன் ரூபா மட்டுமே கிடைத்துள்ளது என வட மாகாண மீன்பிடி போக்குவரத்து கிராமிய அபிவிருத்தி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.

இவ்வாறு ஒதுக்கப்பட்ட நிதியானது நன்னீர் மீன்பிடிக்கு 21 மில்லியனும்,போக்குவரத்துக்கு 21 மில்லியனும்,கிராம அபிவிருத்திக்கு 35 மில்லியனும்,வீதி அபிவிருத்திக்கு 127 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த நிதி தமது அமைச்சுக்கு போதுமானதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts