Ad Widget

உதவி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு 3,000 ரூபாவால் அதிகரிப்பு

வடமாகாணத்தில் கடமையாற்றும் உதவி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு 3,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா தெரிவித்தார்.

Kurukula -rajha-education ministor

வடமாகாண சபையில் 2015ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் சமர்பிப்பு மற்றும் விவாதம் தொடர்பான அமர்வு கடந்த புதன்கிழமை (17) தொடக்கம் வெள்ளிக்கிழமை (19) வரையில் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இடம்பெற்றது.

இதன்போது, கல்வி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு தொடர்பாக விளக்கமளிக்கையிலேயே கல்வி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

6 ஆயிரம் ரூபாவாக வழங்கப்பட்டு வந்த உதவி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு வடமாகாண சபை தேர்தலின் போது, 4 ஆயிரம் ரூபாய் அதிகரிக்கப்பட்டு, 10 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது. தங்களுக்கான சம்பளத்தை உயர்த்து தரும்படி ஆசிரியர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.

அதற்கமைய 3 ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளதாகவும், இந்த மாதத்திலிருந்து அதிகரித்த சம்பள தொகை வழங்கப்படும்.

இதேவேளை, வறுமைக்கோட்டுக்குட்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்குவதற்கான திட்டமும் 2015 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

Related Posts