Ad Widget

தேர்தல் பணியில் ஈடுபட தவராசாவுக்கு பாதுகாப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடும் பொருட்டு தனக்கு இரண்டு பொலிஸாருடைய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா தெரிவித்தார்.

thavarasa-epdp

வடமாகாண சபையில் 2015ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் சமர்பிப்பு மற்றும் விவாதம் தொடர்பான அமர்வு கடந்த புதன்கிழமை (17) தொடக்கம் வெள்ளிக்கிழமை (19) வரையில் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இடம்பெற்றது.

வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் மதியம் 12 மணிக்குப் பின்னர் சபை அமர்வில் கலந்துகொண்டார். உடல்நலக்குறைவால் தாமதமாக சபை அமர்வில் கலந்துகொள்வதாக முன்னரே சபைக்கு அறிவித்திருந்தார்.

ஐங்கரநேசன் சபைக்கு வந்ததும், அவருடைய உடல் நலக்குறைவு குறித்து தான் அனுதாபப்படுவதாக தவசராசா சபையில் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இடம்பெற்ற அமளிதுமளியையடுத்து, உங்களுக்கு இரண்டு பொலிஸார் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டுள்ளது, இவ்வாறான அனுதாபங்களை தெரிவித்தா இந்த பாதுகாப்பை பெற்றுக்கொண்டீர்கள்? என கிண்டல் செய்தார்.

அதற்கு மறுப்பு தெரிவித்த தவராசா, ஒருங்கிணைப்புக்குழு பிரச்சினைக்கு பிறகு இந்த பாதுகாப்பு எனக்கு கொடுக்கப்படவில்லை. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சில அலுவல்கள் எனக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவற்றை நிறைவேற்றும் பொருட்டு அரசாங்கத்தால் இந்த பாதுகாப்பு தனக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Related Posts