திருநெல்வேலியில் இளைஞர் குழு அட்டகாசம்

திருநெல்வேலி, ஆடியபாதம் வீதியில் பிரதம செயலாளர் அலுவலகத்துக்கு அருகிலுள்ள வீடுகளின் மீது சனிக்கிழமை (20) இரவு கற்களை எறிந்தும் கதவுகளை காலால் உதைத்தும் இளைஞர் குழுவொன்று அட்டகாசம் செய்ததாக அப்பகுதி மக்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அயலவர்கள் ஒன்றுகூடிய போது, அட்டகாசம் செய்த இளைஞர்கள் அவ்விடத்தில் இருந்த ஓடிவிட்டனர்.

119 இலக்கத்துக்கும் கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கும் அப்பகுதி மக்கள் அறிவித்ததை அடுத்து, அவ்விடத்துக்கு வருகை தந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர்,

பாதிக்கப்பட்டவர்களை ஞாயிற்றுக்கிழமை (21) பொலிஸ் நிலையத்தில் புகார்செய்யுமாறு பணித்தனர்.

Related Posts