விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பிலான விசேட கூட்டம்!

யாழ் மாவட்டத்திலுள்ள விவசாயிகளின் பிரச்சனைகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று முந்தினம் (18) யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

P1000146

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமை நாயகம் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் யாழ் மவாட்ட விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் வங்கிகளின் முகாமையாளர்கள்கலந்துகொண்டனர்.

இதன்போது கடந்த முறை நடைபெற்ற விவசாய அபிவிருத்தி குழு கூட்டத்தில் விவசாய அமைப்புக்களினால் வங்கிகள் மீது சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் அவற்றை நிவர்த்தி செய்வதற்கான நடைமுறைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் இங்கு கருத்து தெரிவிக்கையில் விவசாயிகளுக்கு காப்புறுதிகள் மற்றும் கடனுதவிகள் வழங்கும்போது வங்கிகள் சரியான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் கடன் கொடுப்பனவின் போது ஏதேனும் தொகைகள் கழிக்கப்படுமாயின் அது தொடர்பான முழு விபரமும் விவசாயிகளுக்கு அறியத்தரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திக்௬றினார்.

மேலும், கடந்த காலங்களில் ஏற்பட்ட குறைபாடுகள் தொடர்பான அறிக்கைகளை விரைவில் தம்மிடம் சமர்ப்பிக்குமாறும் எதிர்காலத்தில் சிரமங்கள் இன்றி கடனுதவிகளை வழங்க ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் வங்கி முகாமையாளர்களை அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார்.

Related Posts