யாழ். புகையிரத நிலையத்திலுள்ள நிலக்கீழ் சுரங்கப் பாதையில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஓவியரான ரோஸ் ரொபின் என்னும் பெண்மணியால் வரையப்பட்டுள்ள சுவர்ஓவியங்களை பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா திங்கட்கிழமை(22) பார்வையிட்டார்.
அத்துடன் ஓவியரை பாராட்டி, அவருக்கு நினைவு பரிசில் ஒன்றையும் வழங்கினார்.
கடந்த டிசெம்பர் 3ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகை தந்த இவர், ஓவியம் வரையும் பணிகளை முன்னெடுத்து அதன் முதற்கட்ட பணிகளை கடந்த டிசெம்பர் 18ஆம் திகதி நிறைவு செய்திருந்தார். தொடர்ந்து மெருகூட்டும் பணிகளை மேற்கொண்டு வருகின்றார்.
குறித்த பெண் ஓவியர் பல்வேறு நாடுகளில் பலவர்ண ஓவியங்களை வரைந்து புகழ் பெற்றவர் ஆவார்.