Ad Widget

தெல்லிப்பளை கிழக்கு மற்றும் கொக்குவில் மக்கள் ஆர்ப்பாட்டம்

தெல்லிப்பளை கிழக்கு J/228 கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்களும் கொக்குவில் மற்றும் நந்தாவில் பகுதி மக்களும் நேற்றயதினம் (25) காலை ஒன்றுகூடி தங்களது அடிப்படை வசதிகள் தொடர்பில் ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

தெல்லிப்பளை கிழக்கு, வண்ணாமாதரை, நாமகல் வீதி விளானை உட்பட அப்பகுதி சார்ந்த கிராமங்களினது மக்கள் தங்களுக்கான போக்குவரத்து பாதைகள் புதிய ரயில் போக்குவரத்து பாதை அமைப்பு காரணமாக மூடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தே இவ்வார்ப்பாட்டத்தை நடத்தியதுடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் மனுவொன்றையும் கையளித்தனர்.

புதிய ரயில் பாதை அமைப்பு காரணமாக ஏற்கனவே மக்கள் பாவனையில் இருந்து பல வீதிகளுக்கும் பின்னரான காலங்களில் மக்களது குடியேற்றங்கள் காரணமாக ஏற்படுத்தப்பட்ட வீதிகளுக்கும் பாதிப்புகள் ஏற்பட்டிருந்தமை குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம அவர்களுடன் ஏற்கனவே கலந்துரையாடியுள்ளதுடன், அவற்றை நிவர்த்தி செய்வதற்கும் பாதுகாப்பற்ற கடவைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையிலேயே தெல்லிப்பளை கிழக்கில் நேற்றயதினம் மேற்படி போராட்டம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் அவர்கள், இவ்வாறான பிரச்சினைகள் பல தீர்த்துவைக்கப்பட்டு வரும் நிலையில் இப்பிரச்சினைக்கும் முதலிடம் கொடுத்து கூடிய விரைவில் தீர்த்து வைப்பதாக உறுதியளித்தார்.

இதேபோன்று கொக்குவில் கிழக்கு ஆடியபாதம் வீதி மற்றும் நந்தாவில் பகுதியிலும் மக்கள் மேற்படி பிரச்சினைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் முன்வைத்திருந்தனர்.

இப்பகுதிகளின் மக்களது கோரிக்கைகளுக்கு அமைவாக ஏற்கனவே அமைச்சர் அவர்கள் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் அச்செயற்பாடுகளை துரிதப்படுத்தும்படி அமைச்சர் அவர்கள் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

இந்நிகழ்வுகளில் வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராஜா, அமைச்சரின் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகன், யாழ் மாநகர முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

kokuvil-tellippalai- (2)

kokuvil-tellippalai- (3)

kokuvil-tellippalai- (4)

kokuvil-tellippalai- (1)

Related Posts