Ad Widget

ஜனாதிபதி மகிந்தவுக்கு டில்ஷான் ஆதரவு!, சங்கக்கார ??

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் திலகரத்ன டில்ஷான், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவை வழங்கவுள்ளதாக நுகேகொடை, தெல்கந்தை பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றின் போது கூறினார்.

sankakara-makala-dilshan

இவ்வாறானதொரு நிலையில், அணியின் மூத்த வீரர்களாக குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜனவர்தன ஆகியோருக்கும் ஜனாதிபதி தரப்பிலிருந்து அழைப்பு வந்துள்ள போதிலும் அவ்விருவரும் அதனை மறுத்ததாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என குமார் சங்கக்கார தனது முகப்புத்தகக் கணக்கில் தகவலொன்றை பதிவு செய்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கிரிக்கெட் வீரர் திலகரத்ன தில்ஷானினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டமொன்று புதன்கிழமை, தெல்கந்தை பிரதேசத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதியிடம் தன்னுடைய ஆதரவு தொடர்பில் தெளிவுபடுத்திய டில்ஷான், பலம்மிக்கதொரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி முன்னெடுத்த நடவடிக்கைகளையும் பாராட்டினார்.

இந்த நிகழ்வை அடுத்து, பேஸ்புக், டுவிட்டர் போன்ற வலையமைப்புக்களில் சங்கக்கார மற்று மஹேல ஆகியோருக்கு எதிரான கருத்துக்களும் செய்திகளும் வெளியாகிக்கொண்டிருந்தன. ஜனாதிபதியின் பிரசாரப் பணிகளில் ஈடுபடுமாறு அவ்விருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் அவர்கள் அதனை நிராகரித்ததாக அந்த செய்திகளில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன.

இந்த செய்திகள் தொடர்பில், தனது பேஸ்புக் பக்கத்தில் பதிலளித்துள்ள குமார் சங்கக்கார, தன்னுடைய பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையிலான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

‘தன்னைப்பற்றி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை. தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுமாறு ஜனாதிபதியிடமிருந்து தனக்கு எதுவித அழைப்பும் விடுக்கப்படவில்லை. ஜனாதிபதியின் தேர்தல் பிரசாரங்களில் கலந்துகொள்ளுமாறும் அதற்கு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை.

இவ்வாறான செய்திகளால் நான் அதிர்ச்சியடைந்துள்ளேன். வேதனையடைகிறேன். என்னுடைய நற்பெயரைக் கெடுக்கும் வகையிலேயே இந்த செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்வாறான செய்திகளை நம்பவேண்டாம் என அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்’ குமார் சங்கக்கார தனது குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Posts