சர்வதேச விண்வெளி திட்டத்திற்கு இலங்கையிலிருந்து செனீசா குணவர்தன தேர்வு!!

எதிர்கால டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) கல்வியை தேசிய அளவில் ஊக்குவிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் திட்டத்தின் மற்றொரு முக்கிய மைல்கல்லாக, தற்போது 200 இலங்கை மாணவர்கள் STEM கல்வித் திட்டத்தின் கீழ் தீவிர பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர்.

இத்திட்டத்தின் சிறப்பம்சமாக, மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த தேர்வுச் செயல்பாட்டின் அடிப்படையில், 18 வயதான செனீசா குணவர்தன மாணவி, மதிப்புமிக்க ShakthiSAT International Mission சர்வதேச விண்வெளித் திட்டத்தில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த அதிகாரப்பூர்வ வேலைத்திட்டம் 2026 ஓகஸ்ட் 22 முதல் 31 வரை இந்தியாவின் கெளதம புத்தா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளதுடன், இதற்கான பயண ஏற்பாடுகள் ஓகஸ்ட் 21 முதல் 31 வரை புதுடெல்லியை மையமாகக் கொண்டு திட்டமிடப்பட்டுள்ளன.

இப்பயணத்தின் போது, இந்தியப் பிரதமர் மற்றும் இந்தியக் குடியரசுத் தலைவர் ஆகியோர் கலந்துகொள்ளும் அதிகாரப்பூர்வ இராஜதந்திர சந்திப்புகள் மற்றும் அரச நிகழ்வுகளில் பிரதிநிதியாகச் செனீசா மாணவி பங்கேற்கவுள்ளார்.

Related Posts