Ad Widget

மஹிந்த தோற்றாலும் பட்டதாரிகள் சங்கம் காப்பாற்றப்படும் – அங்கஜன்

ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோற்றாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பட்டதாரிகள் சங்கம், அரசுடன் இணைந்து செயற்படும். அதில் மாற்றமில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் இளைஞர் சங்கத் தலைவரும் வடமாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினருமான அங்கஐன் இராமநாதன், புதன்கிழமை (24) தெரிவித்தார்.

angajan ramanathan

யாழ். விருந்தினர் விடுதியில் புதன்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திபொன்றில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து அவர் கருத்துதெரிவிக்கையில்,

ஐனாதிபதி மஹிந்த ராஐபக்ஷவின் அரசு பழிவாங்காத, இனமத வேறுபாடின்றி செயற்படும் ஓர் அரசாங்கம் ஆகும்.

இதுவரை மஹிந்த அரசாங்கத்தால் வழங்கிய நியமனங்கள் அனைத்தும் எந்தவித வேறுபாடுகளுமின்றி வழங்கப்பட்டுள்ளன.

தேர்தலில் மஹிந்த அரசே வெல்லுமென நாம் உறுதியாகவுள்ளோம். அதில் எந்தவித மாற்றமும் இல்லை. அந்த அரசு தோற்பதற்கான வாய்ப்பே இல்லை.

தங்களுக்காக யார் பாடுபட்டாரோ, தங்களுக்கு யார் நல்லதை செய்தார்களோ அவருக்கு தேர்தலில் ஆதரவளிக்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பட்டதாரிகள் சங்கம் முடிவெடுத்துள்ளது.

மஹிந்த அரசாங்கம் தனது ஆட்சிக்காலத்தில் அதிக படட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது. இன, கட்சி பேதமின்றி வழங்கிய இவ்வேலை வாய்ப்புக்கு நாம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.

இன்னும் பல பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கவுள்ளார். இத்தேர்தலில் மாற்றம் வராது என்பதில் எமக்கு பூரண நம்பிக்கை உள்ளது.

அவ்வாறிருக்க தோற்பது பற்றி ஏன் பேச வேண்டும். இளைஞர்களாகிய நாங்கள் மஹிந்தவை வெல்ல வைப்போம். எங்கள் மூலம் மஹிந்தவுக்கு நல்ல ஒளி கொடுப்போம் என அவர் தெரிவித்தார்.

Related Posts