- Sunday
- July 13th, 2025

முரண்பாடுகளை வளர்த்து கொண்டிருப்பதனால் மூன்று தசாப்த காலம் எமது இனம் அழிவுகளை சந்திக்க வேண்டி நேர்ந்ததாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கே.வி.குகேந்திரன் தெரிவித்தார். ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வலிகாமம் தெற்கு இளைஞர் அணியின் அங்குரார்ப்பண நிகழ்வு, ஞாயிற்றுக்கிழமை (07) இடம்பெற்ற போது, அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்....

2014 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மனித உரிமைகள் நிகழ்வு யாழ்ப்பாணம் கலைத்தூது மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (16) காலை 9.45 மணிக்கு நடைபெறவுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். கிளையின் இணைப்பாளர் த.கனகராஜ் திங்கட்கிழமை (08) தெரிவித்தார். சர்வதேச மனித உரிமைகள் தினமானது இவ்வருடம் 'மனித உரிமைகள்-365' என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ளது. இந் நிகழ்வில் இலங்கை...

வடமாகாணத்தில் கடந்த 30 வருடகாலமாக பெண்களுக்கு எதிராக வன்முறைகள் இடம்பெறவில்லை என்பதுடன், பெண்கள் இரவு வேளையிலும் தைரியமாக நடமாடித்திரிந்ததாகவும் யாழ். இந்திய துணைத்தூதரக தற்காலிக கொன்சலட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி தெரிவித்தார். யாழ். சமூக செயற்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்தும் விழிப்புணர்வு ஸ்ரிக்கர் நாவலர் கலாசார மண்டபத்தில் திங்கட்கிழமை (08) வெளியிடப்பட்டது. இதில்...

பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்பான விடயங்களை மோசமாக பிரசுரிப்பதை தவிர்த்து வன்முறைக்கானதீர்வை ஊடகங்கள் உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என யாழ்.பல்கலைக்கழக ஊடகத்துறை விரிவுரையாளர் கிருத்திகா தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற பால்நிலை வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் உரையாற்றுகையில், பெண்கள் வன்முறைக்குள்ளாக்கப்படும் விடயத்தை தவிர்த்து வன்முறைக்குள்ளான...

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ஸவினை ஆதரித்து இன்று காலை யாழ் மாவட்ட சிறிலங்கா சுதந்திர கட்சியினால் மோட்டார் வாகன ஊர்வலம் நடாத்தப்பட்டது. இதன் போது யாழ் மாவட்ட சுதந்திர கட்சியின் அமைப்பாளரும் வட மாகாண சபை உறுப்பினருமான இராமநாதன் அங்கஜன் கலந்து கொண்டார். இந்நிகழ்வு அக்கட்சி காரியாலயத்தில் இருந்து ஊர்வலமாக வைத்தியசாலை வீதி,வேம்படி...

ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ மக்கள் மத்தியில் உரை! நான் உங்கள் முன்னிலையில் வெற்றிலையுடன் வந்துள்ளேன். எமது தேர்தல் சின்னம் வெற்றிலை சின்னம்.. வெற்றிலை வெற்றியின் சின்னம். இந்த வெற்றியை அமோக வெற்றியாக்குவீர்கள் என்று வேட்பு மனு தாக்கலையடுத்து தேர்தல்கள் செயலகத்திலிருந்து மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வெளியேறிய ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ, ராஜகிரிய பகுதியில் கூடியிருந்த...

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களால் சமர்பிக்கப்பட்ட அனைத்து வேட்பு மனுக்களும், 1981ஆம் ஆண்டு தேர்தல் சட்டதின் 15ஆம் இலக்க இலக்க தேர்தல் சட்டப்பிரமாணங்களின் படி தேர்தல் சட்டவிதிகளுக்கிணங்க கையளிக்கப்பட்டமையால், அனைத்து வேட்பு மனுக்களும் தம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய சற்று நேரத்துக்கு முன்னர் தெரிவித்தார். இதன்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட 17...

ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க எம்முடன் இணைந்துகொண்டார் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். வேட்பு மனுவையை கையளித்ததன் பின்னர் ராஜகிரியவில் நடைபெற்று கொண்டிருக்கும் விசேட கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். "செயலாளர் ஒருவர் போகும்போது, இன்னொரு செயலாளரை வரவழைப்பதென்பது மிகப்பெரிய வேலை இல்லை. எமது கதவு...

2015 ஜனவரி 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக சமர்பிக்கப்பட்ட வேட்புமனுக்களில் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரது வேட்பு மனுக்களுக்கு எதிராக இரண்டு மறுப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. எனினும் இந்த இரண்டு மறுப்புகளையும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நிராகரித்துள்

அச்சுவேலி பகுதியிலிருந்து நேற்று பெருந்தொகை வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.கிளைமோர் குண்டுகள், 325 வெடிபொருட்கள், 60 மில்லிமீற்றர் மோட்டார் குண்டுகள் 11, கைக்குண்டு ஒன்று ஆகியன நேற்று இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளன.

யாழ். மாவட்டத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபராக ரவீந்திர வைத்யலங்கார பதவியேற்றுள்ளார்.யாழ். மாவட்டத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த றொஹான் டயஸ் மாற்றலாகிச் சென்றுள்ளதையடுத்து புதிய டி.ஐ.ஜியாக ரவீந்திர வைத்யலங்கார நியமிக்கப்பட்டுள்ளார். பதவியேற்பு நிகழ்வுகள் காலை 9.45 மணிக்கு யாழ். பொதுநூலகத்திற்கு முன்னால் பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றது. அத்துடன் மதத்தலைவர்களின் ஆசியியுடன் கையெழுத்திட்டு...

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் இன்று காலை அரசுடன் இணைந்துள்ளனர். பொதுச் செயலாளர் திஸ்ஸ் அத்தநாயக்க, சந்த்ராணி பண்டார மற்றும் ஜோசப் மைக்கல் பெரேரா ஆகியோர் அரசுடன் இணைந்துள்ளனர்.

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கை இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் தலைமையில் தற்போது நடைபெறுகின்றது.

ஜனவரி 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் யாரை ஆதரிக்கவேண்டும் என்பது தொடர்பிலான யோசனையை அறிக்கையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வடக்கு, கிழக்கு சிவில் சமூகம் சில தினங்களில் சமர்ப்பிக்கவுள்ளது என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. புதுடில்லிக்குச் சென்றுள்ள கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடு திரும்பியதும் அவரிடம் இந்த யோசனை அடங்கிய அறிக்கையைக்...

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 4 கிராம அலுவலர்ககள் பிரிவுகளில் சிரமதானப் பணிகளை யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொலிஸார், ஞாயிற்றுக்கிழமை (07) முன்னெடுத்தனர். ஜே- 81, 84, 86 மற்றும் 87 ஆகிய கிராமஅலுவலர் பிரிவுகளில் இந்த சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்ட அதேவேளை இந்த சிரமதான பணிகளில் சிவில் பாதுகாப்பு குழுவை சேர்ந்தவர்களும் ஈடுபட்டனர். கடந்த வாரத்தில்...

இன்றிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 250 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

முகப்புத்தகத்தில் ஆபாச புகைப்படங்களை பதிவேற்றம் செய்து, இரு பெண்களுக்கு அவதூறு ஏற்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில், குடும்பஸ்தர் ஒருவரையும் இளைஞர் ஒருவரையும் சனிக்கிழமை (06) கைது செய்ததாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். கரவெட்டி கிழக்கு பகுதியைச் சேர்ந்த யுவதியொருவரை, வரணியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர் தன்னை காதலிக்கும்படி முகப்புத்தகத்தினூடாக வற்புறுத்தி வந்துள்ளார். குறித்த யுவதி...

சீருடை அணிந்தாலும் நாமும் மனிதர்கள் தான் உங்கள் பிரச்சினைகளை எங்களால் நன்றாக புரிந்து கொள்ள முடியும். எனது பதவிக்காலத்தில் முடிந்தவரை தங்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பேன் என யாழ்.மாவட்டத்தின் புதிய கட்டளைத் தளபதி கண்ணகி நலன்புரி மக்களிடம் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதியாக புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட ஜெகத் அல்விஸ் நேற்று கண்ணகி நலன்புரி நிலையத்திற்குச் சென்று...

யாழ்ப்பாணத்தில் இருந்து நல்லினப் பசுக்கள் களவாடப்பட்டு வேறு மாவட்டங்களுக்குக் கடத்தப்படுகின்ற சம்பவங்கள் அதிகரித்திருப்பதால், அதனைத் தடுப்பதற்குப் பதிவு செய்யப்பட்ட முகவர்களிடம் இருந்து மாத்திரமே இனிமேல் அரசசார்பற்ற நிறுவனங்கள் மாடுகளைக் கொள்வனவு செய்யவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். கால்நடைகளின் களவுகளையும், கடத்தல்களையும் தடுப்பது...

வடக்கு மாகாணம் இதுரைகாலம் பாதிப்புற்றவாறு இனியும் பாதிப்புக்குள்ளாக விடக்கூடாது. எமது பிழையான நடத்தைகளை, வழிமுறைகளை, சிந்தனைகளை மாற்ற நாம் முன்வர வேண்டும். இவ்வாறு தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். வவுனியா பொது வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளர்களுக்கான குருதி சுத்திகரிப்பு நிலையம், தாய்ப்பாலூட்டல் ஊக்குவிப்பு மையம், இளையோர் நேய சுகாதார நிலையம் என்பன சனிக்கிழமை திறந்து...

All posts loaded
No more posts