ஈ.பி.ஆர்.எல்.எவ். பத்மநாபா அணி மைத்திரிக்கு ஆதரவு

எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா அணி) அறிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் தி.ஸ்ரீதரன் புதன்கிழமை (24) அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்திக் குறிப்பில்...

த.தே.கூ உறுப்பினர்களில் மேலும் ஐவருக்கு அழைப்பு

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இடம்பெற்ற கைகலப்பு தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 3 உறுப்பினர்களிடம் புதன்கிழமை (24) விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அக்கட்சியின் மேலும் ஐந்து பேரை, எதிர்வரும் ஜனவரி மாதம் 12ஆம் திகதி விசாரணைக்காக பொலிஸ் நிலையம் வருமாறு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ். பொலிஸாரின் அழைப்பின் பேரில், வடமாகாண...
Ad Widget

மஹிந்த தோற்றாலும் பட்டதாரிகள் சங்கம் காப்பாற்றப்படும் – அங்கஜன்

ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோற்றாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பட்டதாரிகள் சங்கம், அரசுடன் இணைந்து செயற்படும். அதில் மாற்றமில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் இளைஞர் சங்கத் தலைவரும் வடமாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினருமான அங்கஐன் இராமநாதன், புதன்கிழமை (24) தெரிவித்தார். யாழ். விருந்தினர் விடுதியில் புதன்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திபொன்றில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும் போதே...

ரூ.2,500 மில்லியன் நட்டஈடு கோரி திஸ்ஸவுக்கு மைத்திரி நோட்டீஸ்

சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் 2,500 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி, எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, நீதிமன்றத்தினூடாக கோரிக்கைப் பத்திரமொன்றை அனுப்பி வைத்துள்ளார். போலி கையெழுத்துடனான ஒப்பந்தமொன்றைத் தயாரித்து தனக்கு எதிரான சதி வேலைகளில் ஈடுபட்டார் என சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கா மீது குற்றஞ்சாட்டியே அவர் இந்த நட்டஈட்டுத் தொகையைக் கோரியுள்ளார்....

ஜனாதிபதி மகிந்தவுக்கு டில்ஷான் ஆதரவு!, சங்கக்கார ??

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் திலகரத்ன டில்ஷான், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவை வழங்கவுள்ளதாக நுகேகொடை, தெல்கந்தை பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றின் போது கூறினார். இவ்வாறானதொரு நிலையில், அணியின் மூத்த வீரர்களாக குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜனவர்தன ஆகியோருக்கும் ஜனாதிபதி தரப்பிலிருந்து அழைப்பு வந்துள்ள போதிலும் அவ்விருவரும் அதனை மறுத்ததாக வெளியான...

வெள்ளத்தால் 7 இலட்சம் பேர் பாதிப்பு

கிழக்கு உட்பட பல மாகாணங்களில் தொடர்ந்தும் பெய்து வரும் கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக குறைந்தது 4 பேர் உயிரிழந்தள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 பேரும் அம்பாறை மாவட்டத்தில் ஒருவரும் என 4 பேர் மரணமடைந்துள்ள அதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் ஒருவர் வெள்ளத்தில் மூழ்கி காணாமல் போயுள்ளார். நாட்டின் பல பகுதிகள்...

யாழ் பல்கலை துணைவேந்தருக்கு எதிராக முறைப்பாடு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றி பெறுவதற்கு வாழ்த்து தெரிவிக்குமாறு யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர், விரிவுரையாளர்களை கட்டாயப்படுத்தியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களுக்கும் குறித்த வாழ்த்துக் கடிதத்தில் கையொப்பம் இடுமாறு துணைவேந்தரால் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அரச உத்தியோகத்தவர்களை கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்குவது தொடர்பில் யாழ். மாவட்ட தேர்தல்கள் திணைக்களத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது....

வடமாகாண சபையின் வரவு – செலவு திட்டத்திற்கு ஆளுநர் அங்கீகாரம்

வடமாகாண சபையின் 2015 ஆம் ஆண்டின் வரவு – செலவு திட்டத்திற்கான அங்கீகாரம் ஆளுநரினால் வழங்கப்பட்டுள்ளதாக வடமாகண சபையின் பேரவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- வடமாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியினை கொண்டு அனைத்து துறைகளுக்கும் தேவையாக பாதீடுகள் செய்யப்பட்டு 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தயாரிக்கப்பட்டிருந்தது....

வெள்ளத்தால் இடம் பெயர்ந்தவர்களுக்கு விவசாய அமைச்சு உலர் உணவு விநியோகம்

தற்போது பெய்துவரும் அடைமழை காரணமாக வடமாகாணத்தில் இடம் பெயர்ந்துள்ளவர்களுக்கு வடக்கு விவசாய அமைச்சின் உணவு வழங்கல் துறை உலர் உணவுப் பொதிகளை விநியோகிக்க ஆரம்பித்துள்ளது. வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் இப்போது பெய்து வரும் மழைகாரணமாக குளங்கள் நிரம்பியுள்ளதோடு, தாழ்நிலங்களில் குடியிருந்தவர்களிற் பெரும்பாலானோர் இடம் பெயர்ந்து பாடசாலைகளிலும் பொதுமண்டபங்களிலும் தங்கியுள்ளனர். இவர்களில் மிகப்பெரும்பாலானோர் வறுமைக்கோட்டுக்குக்கீழ் வாழ்பவர்கள் என்பதோடு...

எனது உயிருக்கு ஆபத்து நேர்ந்தால் மஹிந்த அரசே முழுப் பொறுப்பு! – ரிஷாத்

எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் மஹிந்த அரசுதான் பொறுப்புக்கூற வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாத் பதியூதீன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- "பொதுபலசேனாவின் முஸ்லிம் விரோத எதிர்ப்பு நடவடிக்கைகளால், நாட்டில் சிங்கள, முஸ்லிம், தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது என நாம்...

மானிடரின் விடுதலைக்கு வழிகாட்டியவர் இயேசுபிரான்! – நத்தார் வாழ்த்தில் மஹிந்த

"இலங்கையில் வாழும் கிறிஸ்தவ மக்களால் இன்று கொண்டாடப்படும் நத்தார் பண்டிகை இயேசுவின் பிறப்பைக் குறித்து நிற்கிறது. இயேசுவின் பிறப்பு அவர் உலகுக்கு வழங்கிய பிரபஞ்ச அன்பு, சகிப்புத் தன்மை மற்றும் புரிந்துணர்வு என்பவற்றின் போதனையுடன் மானிடர்களின் விடுதலைக் கான வழியைக் காட்டியது என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கையாகும்." - இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தனது நத்தார்...

ஜனவரியில் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி

ஆறாவது முறையாக சர்வதேச வர்த்தகக் கண்காட்சி ஜனவரி மாதம் யாழில் நடைபெறவுள்ளது. ஜனவரி மாதம் 23,24 மற்றும் 25 ஆம் திகதிகளில் யாழ்.மாநகரசபை திறந்தவெளி மைதானத்தில்இடம்பெறவுள்ளது. இதில் 250 க்கும் மேற்பட்ட விற்பனை மற்றும் காட்சிக்கூடங்கள் அமைக்கப்படவுள்ளது. இந்த கண்காட்சியில் யாழிலிருந்து 30 உள்ளூர் உற்பத்தி நிறுவனங்களும் மற்றும் வெளியிலிரந்து 180 நிறுவனங்களும் இதில் பங்குபற்றவுள்ளதுடன்...

வடக்கிலிருந்து இராணுவம் வெளியேறாது -மகிந்த

வடக்கு மாகாணத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரை ஒருபோதும் வாபஸ் பெற்றுக்கொள்ளோம், என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ருவான்வெல்லவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கொண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஏனைய தரப்பினர் கோரிவருவதைப் போன்று வடக்கிலுள்ள இராணுவம் மீள அழைக்கப்பட மாட்டாது. மேலும் படையினரின்...

சிறிகொத்தவிற்கு முன்னால் மோதல்: பலர் காயம்! (படங்கள்)

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவிற்கு முன்னாள் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றார். சிறிகொத்தவிற்கு முன்னால் இரண்டு குழுக்களுக்கு இடையில் தற்போது மோதல் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். ஐக்கிய நிபுணர்கள் சங்கம் சிறிகொத்த தலைமையகத்தில் மாநாடு ஒன்று ஏற்பாடு செய்துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் சிறிகொத்தவிற்கு...

பரந்த மனங்கொண்ட தலைவரைத் தெரிவு செய்வோம் – யாழ்.ஆயர்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாம் நன்கு சிந்தித்து, நம் நாட்டுக்குத் தேவையான பரந்த மனங்கொண்ட தலைவரைத் தெரிவு செய்து, நிலையான அமைதியை எம் மண்ணுக்கு கொண்டுவர முயற்சிப்போம் என யாழ். மறை மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் அடிகளார் தெரிவித்தார். தனது கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,...

குடாநாட்டில் டெங்குத்தொற்று தீவிரம் : சிறுவன் உயிரிழப்பு!!

டெங்குத்தொற்றால் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.யாழ். குடாநாட்டில் டெங்குத்தொற்று தீவிரமடைந்துவரும் நிலையில், நேற்று 14 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஈரல், சிறுநீரகம் முழுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ். போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தான். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்துள்ளான். நாவலர் வீதி, யாழ்ப்பாணத்தை...

112 வயதை கடந்தும் இந்த தாத்தாவுக்கு கம்பீரம் குறையவில்லை

யாழில் 112 வயதினை கடந்தும் வயோதிபர் ஒருவர் ஆரோக்கியமாக வாழ்ந்து வருகின்றார். நவாலி தெற்கு மானிப்பாயை சேர்ந்த கணபதி காத்தி என்பவர் கடந்த 1902ம் ஆண்டு நவம்பர் மாதம் 13ம் திகதி பிறந்தார். கடந்த மாதம் தனது 112 ஆவது பிறந்த தினத்தினையும் கொண்டாடி இருந்தார். எவருடைய உதவியும் இன்றி தனது தேவைகளை தானே பூர்த்தி...

கூட்டமைப்புக்கு எதிராக வழக்குப் பதிய யாழ்.பொலிஸார் நடவடிக்கை

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில், ஈ.பி.டி.பியினர் செய்திருந்த முறைப்பாட்டுக்கு அமைய வழக்கு ஜனவரி மாதம் 16 ஆம் திகதி நீதிமன்றில் தாக்கல் செய்யப்படும் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஈ.பி.டி.பியினரின் முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மூன்று மக்கள் பிரதிநிதிகளுக்கு அழைப்பாணை அனுப்பியிருந்தனர். இது தொடர்பான விசாரணை இன்றைய...

காணாமற்போனவர் சடலமாக மீட்பு!

சுன்னாகம் சூராவத்தைப் பகுதியில் கடந்த 22 ஆம் திகதி முதல் காணாமற்போயிருந்தார் என்று கூறப்பட்ட குடும்பஸ்தர் இன்று புதன்கிழமை சடலமாக அயலில் உள்ள வெளிவளவில் இருந்து மீட்கப்பட்டார். சூராவத்தையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான தர்மராசா சிவநாதன் (வயது - 57) என்பவரே சடலமாக மீட்கப்பட்டார். குறித்த காணியில் சடலத்தை அவதானித்த அயலவர்கள் சுன்னாகம் பொலிஸாருக்கும்,...

ஸ்ரீகொத்தவுக்கு முன்பாக பதற்றம்

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தவுக்கு முன்பாக பதற்றம் நிலவுகின்றது. அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் என்று கூறப்படும் குழுவுக்கும் ஐக்கிய தேசியக்கட்சி ஆதரவாளர்கள் குழுவுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை அடுத்தே அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் வாகனநெரிசலும் ஏற்பட்டுள்ளது.
Loading posts...

All posts loaded

No more posts