Ad Widget

நான் இன்னுமொரு தமிழ் மாணவன் – ஜனாதிபதி ( விடியோ இணைப்பு)

இலங்கையில் உள்ளவர்கள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் கற்கவேண்டும். நான் தமிழ்மொழியை கற்க விருமபுகிறேன் நான் இன்னுமொரு தமிழ் மாணவன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

thanthi-tv-mahin

இந்தியாவின் தந்தி தொலைக்காட்சிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அளித்த பேட்டியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கேள்வி: நீங்கள் தேர்தல் பிரசார கூட்டங்கள் மற்றும் பொது கூட்டங்களில் தமிழில் பேசியதுண்டு. ஆனால், ஐ.நா.வில் பேசியதன் நோக்கம் என்ன?

இது நல்ல எண்ணத்தின் அடிப்படையிலான செய்கையாகும். நான் தமிழ்மொழியை கற்க விரும்புகிறேன். அப்படியானால் நான் இன்னுமொரு தமிழ் மாணவன்.

ஒரு தலைவர் என்னை சிங்களத்தில் பேச சொன்னார்கள் இங்கே சிங்களம் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று அலுவலக மொழிகள் உள்ளன. ஆகவே நான் 3 மொழிகளிலும் பேசினேன் தமிழில் ஐ.நா.வில் பேசி பதிவு செய்தேன்.

இங்கே தமிழர்கள் சிறிய அளவில் வாழ்கிறார்கள் இந்தியாவுடன் ஒப்பிடுகையில் அவர்களின் தொகை குறைவு. இங்கே 3 மொழிகளும் தெரிய வேண்டும் என்று நினைத்தேன். தற்போது அனைத்து மாணவர்களுக்கும் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் மூன்று மொழிகளையும் கற்பிக்கும் முயற்சியில் இருக்கிறோம்.

நீங்கள் தமிழில் பேசினால் எனக்கு புரியாது ஆகவே எனக்கு சந்தேகம் வரும் . நான் சிங்களத்தில் பேசினால் என்னை சந்தேகிப்பார்கள். இதற்கு சிறந்த வழி ஒருவர் மொழியை மற்றவர் கற்பதாகும் என்றார்.

எங்கள் மக்களிடம் இதைத்தான் சொல்லியிருக்கிறேன். இதற்கான பாதையை மக்களுக்கு காட்ட விரும்புகிறேன். சிங்கள மக்களும் தமிழ்மொழி கற்றவேண்டும் என்றார்.

Related Posts