மடு அன்னையிடம் சென்ற மகிந்த

மன்னார் மடு தேவாலயத்திற்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. தேர்தல் பரப்புரைக்காக மன்னார் மாவட்டத்திற்கு இன்று மாலை சென்றிருந்த மகிந்த ராஜபக்ச மடு தேவாலயத்திற்குச் சென்று மடு அன்னையை வழிபட்டுள்ளார். மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஜனாதிபதியை வரவேற்றதுடன் அங்கு இடம்பெற்ற ஆராதனையிலும் கலந்து கொண்டு அன்னையை வழிபட்டார். மேலும் வழிபாடுகளை முடித்துக்...

தேர்தல் விதிமுறைகளை மீறினார் : வடக்கு ஆளுநர்

யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி கலந்து கொண்டிருந்தார். எதிர்வரும் 8 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் தேர்தல் பரப்புரைக்கூட்டம் இன்று யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது . இதன்போது வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறியும் தேர்தல்...
Ad Widget

அலைபேசியூடாக தேர்தல் பிரசாரம் செய்வதை தவிர்க்கவும்

சந்தாதாரர்களின் சம்மதமின்றி அலைபேசி வலையமைப்புகளூடாக தேர்தல் பிரசாரம் செய்வதை தவிர்க்குமாறு சகல வேட்பாளர்களிடமும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கேட்டுக்கொண்டுள்ளார். வாக்களிப்புக்கு 48மணிநேரத்துக்கு முன்னளர் செய்யப்படும் இவ்வாறான பிரசாரங்கள் தேர்தல் சட்டங்களை மீறியதாக கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார். அரசியல் கட்சிகளையும் வேட்பாளர்களையும் ஆதரிக்கும் குறுஞ்செய்திகளை அனுப்பும் திட்டமிட்ட செயற்பாடுகள் பற்றி முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மஹிந்த...

யார் தடுத்தாலும் இரணைமடு நீரை யாழ்ப்பாணத்துக்கு கொண்டுவருவேன் – யாழில் ஜனாதிபதி

பொது எதிரணி வேட்பாளர் மைத்திபால சிறிசேனவை உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும். அவர் ஒரு தடவைகூடு இந்தப் பகுதிக்கு வரவில்லை. ஆனால் நான் எனது இளவயதிலிருந்தே உங்களைத் தெரிந்துவைத்திருக்கிறேன். உங்கள் இடத்துக்கு வந்து சென்றிருக்கிறேன். 1970ஆம் ஆண்டு நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது யாழ்ப்பாணம் வந்தேன். அதாவது 11 தடவைகள் நான் யாழ்ப்பாணம் வந்திருக்கிறேன். உங்களுக்கு...

காங்கேசன்துறையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான புகையிரத சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பு

காங்கேசன்துறையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான புகையிரத சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை புகையிரத நிலையத்திலிருந்து இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ சேவையினை அமைச்சர்களான சுசில் பிரேம ஜயந்த, குமார வெல்கம, டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் ஆரம்பித்து வைத்துள்ள அதேவேளை, உத்தியோகபூர்வ பயணத்திலும் பங்கேற்றிருந்தனர். 2011 ஆம் ஆண்டு மே மாதம் 27ம் திகதி ஓமந்தை வரையும்,...

மாவை ஏசியதால் மயங்கி விழுந்தார் அனந்தி??

வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் அனந்தி சசிதரன் வெள்ளிக்கிழமை (02) காலையில் திடீரென மயக்கம் போட்டு வீழ்ந்துள்ளார். தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, அனந்தியை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஏசியதாலேயே அவர் மயக்கம் போட்டு வீழ்ந்துள்ளதாக தெரியவருகின்றது. அனந்தியை தொடர்புகொண்ட போது, அவர் மயக்கமடைந்து உடல் நலம் குன்றியிருப்பதாக அவரது வீட்டிலுள்ளவர்கள் தெரிவித்தனர்....

யாழ்.வைத்தியசாலையில் சுகாதார சீர்கேடான உணவுகள்…!!

பாவனைக்கு உதவாத சுகாதார சீர்கேடான முறையில் விற்பனை செய்யப்பட்ட 500 இடியப்பங்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அழிக்கப்பட்டுள்ளன. வருடாந்த அடிப்படையில் குறித்த நிறுவனத்துக்கு சிற்றுண்டிச் சாலை நடத்துவதற்குரிய அனுமதி இரு வாரங்களுக்கு முன்னரே வழங்கப்பட்டிருந்தது. இந்த வகையில் இளையான்கள் மொய்க்கும் வகையில் சுமார் 500 இடியப்பங்கள் விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டதையடுத்து குறித்த சிற்றுண்டிச் சாலை நடத்துநருக்கு அது...

தேர்தல் பிரசாரத்திற்காக ஜனாதிபதி யாழிற்கு விஜயம்!

தேர்தல் பிரசாரத்திற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பலாலியில் வைத்து வரவேற்றார். ஜனாதிபதி தேர்தல் பிரசார கூட்டத்திற்காக வேட்பாளரும் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள ஜனாதிபதி...

கனகராயன்குளத்தில் அடிகாயங்களுடன் ஆணின் உடல் மீட்பு

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் அடிகாயங்களுடன் ஆணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலமாகக் காணப்பட்டவர் வவுனியா, கத்தார் சின்னக்குளத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான எஸ்.ரெனி (வயது 37) என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேசன் வேலைசெய்து வரும் இவர் கனகராயன்குளம் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் வீட்டில் தங்கியிருந்து வேலை செய்து வந்துள்ளார். வீட்டு உரிமையாளர் நேற்று நண்பகல்...

கையொப்பங்களை பரிசீலிக்கவும் நிபுணர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான இரகசிய ஒப்பந்தம் என கூறப்படுவதில் கள்ள கையொப்பம் இடப்பட்டுள்ளதாக கூறப்பட்டதையடுத்து, அது தொடர்பில் நிபுணர்களில் அபிப்பிராயத்தை பெறுமாறு குற்றப்புலனாய்வு அதிகாரிகளுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம், நேற்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. குற்றப்புலனாய்வு அதிகாரிகள் கேட்டுக்கொண்டதையடுத்து, இந்த கட்டளை...

துருவங்கள் சந்தித்தபோது!!!

வடக்கிலுள்ள மக்கள் பிரதிநிதிகள் சபை ஒன்றுகூடலின் போது ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம், கைகலப்பில் முடிவுற்றது. இதில் இரு தரப்பு உறுப்பினர்களும் காயம் அடைந்து இரத்த காயத்துடன் பத்திரிகைகளுக்கு போஸ் கொடுத்தனர். இச்சம்பவம் இடம்பெற்று சில வாரங்களின் பின் இடம்பெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்துக்கொண்ட ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியின் முக்கிய இரு...

மாநகர சபை எல்லைக்குள் திண்ம கழிவகற்றல் நடவடிக்கை

டெங்கு நோய்த்தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டத்தின் கீழ் மாநகரசபை எல்லைக்குட்பட்ட 23 வட்டாரங்களில் திண்மக்கழிவுகள் அகற்றும் பணிகள், வியாழக்கிழமை(01) முதல் முன்னெடுக்கப்பட்டு இந்த மாதம் முழுவதும் மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக யாழ். மாநகர ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வழமையைவிட மேலதிகமாக...

கிளிநொச்சியில் பல்வேறு சுற்றாடல் பிரச்சினைகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மைக்காலமாக பல்வேறு சுற்றாடல் பிரச்சனைகள் காணப்படுவதாகவும் எதிர்காலத்தில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கிளிநொச்சி மாவட்ட அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மைக்காலமாக பல்வேறுபட்ட சுகாதாரப் பிரச்சனைகள் காணப்படுகின்றன. முறையாக திட்டமிடப்படாத திண்மக்கழிவு அகற்றல் நடைமுறைகள் மாவட்டத்தில் இருப்பதுடன், சுற்றாடல் பாதுகாப்பு உரிமங்களின்றி பல்வேறு தொழிற்சாலைகள், தொழில்...

மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம்

மதுவுக்கு எதிரான பாரிய பிரசாரத்தை 'ஹெல்தி லங்கா' அமைப்பு யாழ். மாவட்டத்தில் தற்போது முன்னெடுத்து வருகின்றது. மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் கடந்த வாரம் சண்டிலிப்பாய், சங்கானை, காரைநகர் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த பிரசார நடவடிக்கைகளில் மதுவால் ஏற்படும் பாதிப்புக்கள், மதுவால் ஏற்படும் குற்றச் செயல்கள் தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்தும் சுவரொட்டிகள்...

வாழ்வாதார உதவிகளை தொடர்ந்து வழங்குவோம் – கொன்சலட் ஜெனரல்

வடமாகாணத்துக்கு வாழ்வாதார உதவிகளை தொடர்ந்து வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் தயாராகவுள்ளதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் இதுதொடர்பாக இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருப்பதாகவும் இந்திய துணைத்தூதரக தற்காலிக கொன்சலட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி வியாழக்கிழமை (01) தெரிவித்தார். இந்திய அரசாங்கத்தால் வடமாகாணத்தில் கடந்த வருடம் (2013) மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள், உதவிகள் தொடர்பாக கேட்டபோதே அவர் இவ்வாறு...

கட்டுப்பாட்டை மீறினால் பதவி பறிக்கப்படும் – மாவை

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டை மீறுகின்றவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக அவர்கள் கூட்டமைப்பிலிருந்து நீக்கப்பட்டு அவர்கள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா அறிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர் வைரமுத்து தியாகராசா, யாழ் பருத்தித்துறை பிரதேச...

யாழ். மத்திய கல்லூரியை சூழவுள்ள வீதிகளை பயன்படுத்த தடை ; பொலிஸ் அறிவிப்பு

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியைச் சூழவுள்ள வீதிகளினூடாக அனுமதிக்கப்பட்ட வாகனங்களைத் தவிர ஏனையவை செல்ல அனுமதிக்க முடியாது என யாழ்ப்பாணம் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார். எதிர்வரும் 8 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாழ். மாவட்ட வாக்குகளை எண்ணும் நிலையமாக இம்முறையும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியே தெரிவு செய்யப்பட்டுள்ளது. எனவே எதிர்வரும் 8,9 ஆம்...

மக்களின் நிலங்களை மக்களுக்கே பெற்றுகொடுப்பேன் – டக்ளஸ்

'எமது மக்களின் நிலங்கள் எமது மக்களுக்கு சொந்தம். அந்தவகையில் ஏற்கனவே பாதுகாப்பு வலயத்தினுள் இருந்த கணிசமான காணிகளை கமச்செய்கைக்காக பெற்றுக்கொடுத்துள்ளேன். எனவே மீதமிருக்கும் எமது மக்களின் நிலங்களையும் எம் மக்களுக்கு பெற்றுக் கொடுப்பேன். அதற்கு நானே பொறுப்பு' என பாரம்பறிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். சாவகச்சேரி தென்மராட்சி...

மஹிந்த அரசை வெளியேற்றவே, மைத்திரிக்கு ஆதரவளிக்கின்றோம் – சூசையானந்தன்

பொது எதிரணி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, மஹிந்த அரசுடன் சேர்ந்திருந்து செயற்படும் போது தமிழ்மக்களுக்காக ஒருபோதும் குரல் கொடுக்கவில்லை என்பதை நாம் மறக்கவில்லை. ஆனால், மஹிந்த அரசை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டியுள்ளதால், நாங்கள் மைத்திரிக்கு ஆதரவளிக்கிறோம் என யாழ். பல்கலைக்கழக புவியியற்துறை பேராசிரியர் ஏ.சூசையானந்தன் இன்று வியாழக்கிழமை (01) தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால...

சிறந்த பெறுபேறுகளை பெற்ற வடமாகாண மாணவர்கள் கௌரவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை சிறந்த பெறபேறுகளைப் பெற்ற வடமாகாணத்தைச் சேர்ந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் புதன்கிழமை (31) யாழ்.பொது நூலகத்தில் இடம்பெற்றது. தேசிய ரீதியில், மாவட்ட ரீதியில் முன்னிலை வகித்த வடமாகாணத்தை சேர்ந்த 23 மாணவர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டதுடன், அவர்களுக்கான பணப்பரிசும் வழங்கப்பட்டது. கணிதப்பிரிவில் தேசிய...
Loading posts...

All posts loaded

No more posts